Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு
    தமிழ்நாடு

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குடவாசல் அருகே நேற்று நள்ளிரவு மனைவி குழந்தைகள் கண்முன்னே 50 வயது நபர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க  வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் எம்ஜிஆர்நகர் காலனி தெருவை சேர்ந்த திருமுகம், அங்குள்ள செங்கல்சூலையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சுதா என்னும் மனைவியும்,  திருமணம் ஆகி சுதா வயது 44 என்கிற மனைவியும், பத்தாம் வகுப்பு படிக்கும்  மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதான மகளும் உள்ளனர்.

    நேற்று (மே 29)  நள்ளிரவு சுமார் 11.30மணி அளவில் திருமுகம் விஉஇட்டில் சாப்பிட்டுவிட்டு தனது குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, திடீரென திருமுகம் வீட்டினுள்  புகுந்த நான்கு மர்மநபர்கள், திருமுகத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே இந்த சம்பவம் நடந்ததால் அவர்கள் அலறி கூச்சலிட்டனர்.  மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டியதில் திருமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    தகவலறிந்து  சென்ற குடவாசல் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவரது மனைவி குழந்தைகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா.?அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இறந்தவரது உறவினர்கள் கொலையாளியை உடனே கைதுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சேங்காலிபுரம் குடவாசல் மெயின்ரோட்டில்  சாலைமறியல் மேற்கொண்டனர்.

    காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சாலைமறியலால் கும்பகோணம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!
    Next Article தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.