Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»விதிகளை மீறிய இஸ்ரேல்..! லெபனான் மீது குண்டு வீச்சு..! குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!
    உலகம்

    விதிகளை மீறிய இஸ்ரேல்..! லெபனான் மீது குண்டு வீச்சு..! குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 18
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    லெபனானுடனான போர் நிறுத்ததை மீறி அந்நாட்டின் தெற்கு நகரங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்ட நிலையில், 58 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்மூலம் கடந்த சில நாட்களில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில் பலியானவர்கள் எண்ணிக்கை 50ஐ கடந்தது.

    மாகாணங்களை இணைக்கும் முக்கியப் பாதைகளான அஸ்லூன் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நபதியா பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் லெபனான் ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் பலியாகியுள்ளார்.

    தெற்கு லெபனான் மட்டுமன்றி, நாட்டின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீதும் இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பின் பலம் வாய்ந்த தளமாகக் கருதப்படும் இப்பகுதியில், சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு இஸ்ரேல் மீண்டும் குண்டுமழை பொழிந்துள்ளது.

    தாக்குதலுக்கு முன்னதாக, தெற்கு லெபனானின் Tyre உட்பட பல நகரங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தது. இதன் மூலம் லெபனானின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் சுமார் 14 சதவீத பகுதியை இஸ்ரேல் கட்டாய இடப்பெயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளை துறந்து இடம்பெயர்வது கடுமையான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதித்திடுக”..! தமிழக அரசு மனு தாக்கல்..!
    Next Article அரசு பங்களாவை காலி செய்த எடப்பாடி பழனிசாமி..! புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறினார்..!
    Editor TN Talks

    Related Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.