Close Menu
    What's Hot

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»MUTE -ல் முதலமைச்சர் ; வள்ளுவருக்கு காவி Paint – கேள்வி எழுப்பிய உதயநிதி – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்  
    Featured

    MUTE -ல் முதலமைச்சர் ; வள்ளுவருக்கு காவி Paint – கேள்வி எழுப்பிய உதயநிதி – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்  

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 uthaya
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ம்யூட்டில் முதலமைச்சர் இருப்பதால்தான், திருவள்ளுவருக்கு மீண்டும் ஆளுநர் மாளிகை காவி பெயிண்ட் அடித்திருப்பதாக குற்றம்சாட்டிய உதயநிதியை நெட்டிசன்கள் பதில் கமெண்டுகளில் வறுத்தெடுத்துள்ளனர்.

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தளப் பக்கத்தில், எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.

    008 vanni 1

    தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?

    தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.

    வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் – அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.

    தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.   சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு நெட்டிசன்கள் அளித்திருந்த பதில்கள் வருமாறு:-

    Screenshot 2026 05 31 120642

    Kishore Nedunchezhiyan @Kishore_voice:-  2024-ல் மியூட்டாக இருந்த முதலமைச்சரின் ஆட்சிக் காலத்தில்தான் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசும் முயற்சி தொடங்கியது. அப்போது இருந்த மியூட்டான, பொம்மையான முதலமைச்சர் தனது வெற்று விளம்பரங்களுக்கே நேரம் செலவிட்டதால், இதுபோன்ற அவலநிலை ஏற்பட்டது.

    Screenshot 2026 05 31 120833

    tamilarasan radhakrishnan @tamilarasa97555 :- திருவள்ளுவர் என்பவர் ஒரு ஞானி முனிவர் அவர் காவி உடை அணியாமல் வேறு என்ன உடை அணிவார் அண்ணா?

    Screenshot 2026 05 31 120930

    knaz @knazjohn :-  Bro ரொம்ப active ஆ இருக்குறோம்னு காட்டிக்க இந்த மாதிரி halfboil வேல பன்னி மாட்டிக்காதிங்க ,Damage control பன்றதா நெனச்சி பன்னதெல்லாம் back fire ஆகிட்டு வருது.

    Screenshot 2026 05 31 121034

    Mayil Ravanan @mayil_ravan:- உங்க தொகுதி பக்கத்துல தானே Mylapore திருவள்ளுவர் கோவில் இருக்கு!! அங்கே பல நூறு வருடமா வைகாசி அனுஷம் அன்று (அது விசாகம் இல்லை அறிவிலியாரே!) வள்ளுவ நாயனாருக்கு பிறந்த நாள் விழா உற்சவம் நடக்கிறது!!.. அது தெரியுமா தெரியாதா, உமக்கு?!

    Screenshot 2026 05 31 121215

    Iyyappan @iyapkrish:-   தி.மு.க ஆட்சியில் நடந்தால் “கருத்துச் சுதந்திரம்”, வேறு யாராவது செய்தால் “பாசிசம்” — இதுதான் பிரச்சனை. வைகாசி அனுஷம் பற்றிய விவாதம் பல தசாப்தங்களாக இருக்கிறது. அதைக் கூட தெரியாமல் “புதுசா உருட்டுறாங்க”ன்னு சொல்றது அறியாமையா, இல்ல அரசியல் வசதியா?

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleRCB-க்கு அடிக்குமா மெகா லக்? 2011 முதல் தொடரும் ‘குவாலிபையர் 1’ மேஜிக் சென்டிமென்ட்!
    Next Article பிரெஞ்சு ஓபன் : 5மணி நேரம் 57 நிமிடங்கள் நடைபெற்ற போட்டி..! இறுதியில் வென்ற ஜூவான் மேனுவல்..!
    Editor TN Talks

    Related Posts

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    May 31, 2026

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    May 31, 2026

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    May 31, 2026

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.