Close Menu
    What's Hot

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?
    Featured

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Editor web3By Editor web3July 4, 2026Updated:July 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    india vs england 2nd t20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, மான்செஸ்டரில் உள்ள புகழ்பெற்ற ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. அபிஷேக் ஷர்மா (59), ஸ்ரேயாஸ் அய்யர் (68), ஷிவம் துபே (42) ரன்களை குவித்தனர்.

    இதனை தொடர்ந்து விளையாட தயாரான இங்கிலாந்து அணிக்கு மழை பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இடைவிடாமல் பெயத மழையால் போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு 64 ரன்கள் இலக்காக கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் இதுவும் நடக்கவில்லை. ஏனென்றால், ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனை தொடர்ந்து போட்டி கைவிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டது

    இந்தநிலையில் இன்று 2வது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் கடும் முனைப்பு காட்டி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் தங்களின் சிறந்த ஆடும் லெவன் வீரர்களைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளன. இந்திய அணி தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையில் சரியான சமநிலையை ஏற்படுத்தி, தொடரை வெற்றிகரமாகத் தொடங்கக் காத்திருக்கிறது. அதேவேளையில், சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.

    ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது. மழையின் குறுக்கீடு இன்றி முழுமையான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    2nd T20 Match England vs. India first victory?
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇறுதிவரை மிரட்டிய கேப் வெர்டே அணி!. கூடுதல் நேரத்தில் தப்பித்த அர்ஜென்டினா!. அடுத்த சுற்றுக்கு தகுதி!
    Next Article தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!
    Editor web3
    • Website

    Related Posts

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    July 19, 2026

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    July 19, 2026

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    திமுகவில் பெரும் தலைமை மாற்றம்.. உதயநிதியிடம் முழு அதிகாரம்? தேசிய அரசியலுக்கு நகரும் ஸ்டாலின்?

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு நன்மையே – வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கணிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.