Close Menu
    What's Hot

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டு பெண்மணி..! குவியும் பாராட்டுகள்..! யார் இவர்?
    தமிழ்நாடு

    உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டு பெண்மணி..! குவியும் பாராட்டுகள்..! யார் இவர்?

    Editor TN TalksBy Editor TN TalksJune 1, 2026Updated:June 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டை சேந்த மோகனா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள 2வது பெண்மணி மற்றும் முதல் தமிழ்நாட்டு பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் மோகனா.

    இவர் 2031-ம் ஆண்டு ஜூன் வரை 5 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார். அவருடன் இன்று நியமிக்கப்பட்ட மற்ற நால்வர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள். பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அருண் பல்லி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களின் நியமனம் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மோகனாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்ரமணி மோகனா நியனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

    உச்சநீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராக பணியாற்றி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் 2வது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டை சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

    இதேப் போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு வழக்கறிஞர் திருமதி. வி. மோகனா அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நீதித்துறையின் உச்சபட்ச அங்கீகாரத்தைப் பெற தங்களின் இந்தப் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.

    வழக்கறிஞர் பணியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படும் இரண்டாவது பெண் வழக்கறிஞர் என்ற பெருமையையும், தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் தருணமாகும். தங்களின் கடின உழைப்பாலும், சட்ட நுணுக்கங்களாலும் இந்த உயரிய நிலையை எட்டியிருப்பது சட்டத்துறையில் தடம் பதிக்க விரும்பும் ஆயிரக்கணக்கான இளம்பெண்களுக்கு உங்களின் இந்த வெற்றி ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாகவும், வழிகாட்டியாகவும் அமையும்.

    தங்களின் பதவிக்காலம் சிறக்கட்டும். தங்களின் சட்ட அறிவும், அனுபவமும் இந்திய நீதித்துறைக்கு மேலும் வளம் சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்” எனத் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவரும் 27ம் தேதி மதிமுக பொதுக்குழு..!! திமுக கூட்டணி தொடருமா? விலகுமா?
    Next Article எம்.ஜி.ஆர் உடன் முதல்வர் விஜய்..!! அதகளப்படுத்தும் தொண்டர்கள்..!! பரபரக்கும் திருச்சி..!!
    Editor TN Talks

    Related Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    July 18, 2026

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    July 18, 2026

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.