Author: Editor TN Talks

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஏழு வயது மகனை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து அண்ணா கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவரது மனைவி பவித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் 7 வயது மகன் ஜஸ்வந்த்ராஜ் உடன் ஸ்டீபன் ராஜ் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை ஸ்டீபன் ராஜ் வீடு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் எட்டிப்பார்த்தபோது, அவர் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வீட்டுக்குள் 7வயது சிறுவன் ஜஸ்வந்த்ராஜ் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும், ஸ்டீபன் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் இருப்பதை கண்டனர். இதையடுத்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,…

Read More

 வேட்புமனுவில் சொத்து மற்றும் வருமான விவரங்களை  மறைத்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுள்ளார்.  இந்தநிலையில்,  எடப்படி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது  சொத்து மற்றும் வருமான விவரங்களை மறைத்து விட்டதாகக் கூறி,  எடப்பாடி தொகுதியை சேர்ந்த வாக்காளர் சக்திவேல் பெருமாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்து முழுமையான விவரங்களை தெரிவிக்கவில்லை  என்றும், 2021, 2026ஆம் ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பீட்டால், ஏராளமான வேறுபாடுகள் உள்ளதாகவும்,  உண்மை தகவல்கள்  மறைக்கப்பட்டுள்ளதால்  இது குறித்து விசாரணை நடத்த வருமான…

Read More

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், கலைஞரின் பிறந்தநாளில் எனது மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன் எனக் கூறியுள்ளார். தமிழகத்தின் அன்பிற்குரிய தலைவரான அவர், சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீது கொண்டிருந்த வாழ்நாள் அர்ப்பணிப்பு, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மறுமலர்ச்சி அடையச் செய்ததாகவும், கலை, இலக்கியம் உள்ளிட்ட பொதுவாழ்விற்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, என்றும் ஆழமான மரியாதையுடன் நினைவுகூரப்படும் எனவும் தெரிவித்துள்ளர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘கலைஞர்’ மு.கருணாநிதி அவர்கள் தமிழ் மக்களின் கண்ணியத்திற்காகவும், சமூக நீதிக்காகம், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் போராடியவர் எனத் தெரிவித்துள்ளார். அவர் வெறும் முதலமைச்சர் மட்டுமல்ல – ஒரு எழுத்தாளர், கவிஞர் மற்றும் சிந்தனையாளர். ஒவ்வொரு…

Read More

 கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கொங்கு ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- திருச்சியில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சராக முதல் முறையாக மக்களை சந்தித்து ஜோசப் விஜய், பேசியிருக்கிறார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்ன சொல்லப் போகிறார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். அவருடைய பேச்சுக்களில் முதலமைச்சராக எதார்த்தத்தை எதிர்பார்க்கிறோம். அந்த உரைக்குப் பின்பு நாங்கள் வைக்கும் ஆலோசனை, முதலமைச்சர் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாக சீர்கேடு புரையோடி போய்விட்டால் திரும்ப தமிழ்நாட்டை மீட்க முடியாது. விரைவில் துவங்க இருக்கின்ற சட்டசபை கூட்டத் தொடரில் தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்காக பல்வேறு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டி இருப்பதால் அமைச்சர் சபையை தாமதமின்றி கூட்டி ஆலோசிக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பல திறமையான அதிகாரிகளை நியமித்து இருப்பதாக அறிவித்திருக்கிறீர்கள் ஆனால் அதை திறமையாக செய்யக்கூடிய பல அதிகாரிகள்…

Read More

கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அப்போது அவர்  பாஜகவில் இருந்து விலகுவதாக பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் வழங்கினார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விளக்கம் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகின. அண்ணாமலையின் டெல்லி பயணத்தைத் தொடர்ந்து, பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரனையும் டெல்லிக்கு வரும்படி மேலிடம் அழைப்பு விடுத்ததையடுத்து அவரும் டெல்லி சென்றிருக்கிறார். இதனால் தமிழ்நாடு பாஜகவில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்னும் ஐயம் எழுந்துள்ளது. நாளை (ஜூன் 4ம் தேதி) அண்ணாமலையின் பிறந்த நாள் அன்று புதிய கட்சி துவங்க இருப்பதாகவும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பலரும் தெரிவித்து வரும் சூழலில் பல்வேறு மாவட்டங்களில் அதனை உறுதி செய்யும் வகையில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி…

Read More

சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியவர் முத்தமிழரிஞர் கலைஞர் டாக்டர் கருணாநிதி என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல் ஷேக் முகம்மது அலி தெரிவித்துள்ளார். தமிழ் மொழி, இலக்கியம், சமூக நீதி மற்றும் அரசியல் துறைகளில் அழியாத முத்திரை பதித்த மாபெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள். சமூக நீதி, சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை தனது அரசியல் வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு செயல்பட்ட அவர், சிறுபான்மை சமூக மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். கல்வி உதவித்தொகைகள், மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கான ஆதரவுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக தமுமுக வின் நீண்டகால கோரிக்கை ஏற்று இஸ்லாமிய சமுதாயத்திற்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதோடு,  தமுமுக விற்கு தனது சொந்த செலவில் 2 ஆம்புலன்ஸ்களையும்…

Read More

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்த நடிகர் ஜெய்சங்கரின் 26-ஆவது நினைவு தினம் இன்று. மக்கள் கலைஞர், மக்கள் தமிழன் என்னும் பட்டங்களுடன் திரையில் அடையாளம் காட்டப்பட்டாலும், தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்னும் பெயர் இன்றளவும் ஜெய்சங்கரைத் தவிர வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை. 1938ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் நாள் பிறந்த ஜெய்சங்கரின் பெற்றோரின் பூர்விகம் கும்பகோணம் என்றாலும், ஜெய்சங்கர் நெல்லையில் பிறந்து சென்னையில் வளர்ந்தார். மயிலாப்பூர் பி.எஸ். பள்ளியில் பள்ளிப்படிப்பையும், புதுக்கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்த ஜெய்சங்கர் தனது கல்லூரி காலத்திலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தந்தையின் விருப்பத்துக்காக சட்டக்கல்லூரியில் இணைந்த போதும் ஜெய்சங்கரின் நடிப்பு தாகம் காரணமாக ஓர் ஆண்டிலேயே அதனைக் கைவிட்டுவிட்டு தனது கவனம் முழுவதையும் நடிப்பின் பக்கம் திருப்பினார். சோ ராமசாமி நடத்தி வந்த விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழுவில் இணைந்து சிறு சிறுவேடங்களில் நடித்து வந்த ஜெய்சங்கர் அதன்பின்னர் கூத்தபிரனின் “கல்கி ஃபைன் ஆர்ட்ஸ்”…

Read More

கலைஞர் மு.கருணாநிதி பல்வேறு திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை மட்டுமின்றி பாடல்களும் எழுதியுள்ளார். 1950-இல் முதன்முதலாக திரைப்படத்துக்கு பாடல் எழுதியவர் இறுதியாக 2010இல் வெளியான பெண் சிங்கம் படத்துக்காக பாடல் எழுதியிருக்கிறார். கலைஞரின் பாடல்கள் எழுதிய திரைப்படங்களின் பட்டியல்;- 1. மந்திரிகுமாரி (1950) 2.பராசக்தி (1952) 3. நாம் (1953) 4. அம்மையப்பன் (1954) 5.ரங்கோன் ராதா (1956) 6.ராஜா ராணி (1956) 7. குறவஞ்சி (1960) 8. பூம்புகார் (1963) 9. காஞ்சித்தலைவன் (1963) 10. பூமாலை (1965) 11. மறக்க முடியுமா? (1966) 12. நெஞ்சுக்கு நீதி (1979) 13. தூக்கு மேடை (1982) 14. ஒரே ரத்தம் (1988) 15. இது எங்கள் நீதி (1988) 16. வீரன் வேலுத்தம்பி (1988) 17. மக்கள் ஆணையிட்டால் (1988) 18. மதுரை மீனாட்சி (1993) 19. கண்ணம்மா (2005) 20. மண்ணின் மைந்தன் (2005) 21. பாசக்கிளிகள் (2006)…

Read More

கலைஞர் கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் எண்ணற்றத் திட்டங்களை தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளார். அவற்றில் சில இங்கு… 1.சுயமரியாதைத் திருமணச் சட்டம் 2.தமிழ், ஆங்கிலம் மட்டுமே என்னும் இருமொழித் திட்டம் 3. கிராமங்களுக்கு மின் இணைப்பு 4. குடிசை மாற்று வாரியம் 5.கண்ணொளி வழங்கும் திட்டம் 6.பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் 7. ஊனமுற்றோர் நல்வாழ்வு திட்டம் 8. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கான்கிரிட் வீடு 9. அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம் 10. மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதி 11.மக்கள் குறை தீர்க்கும் மனுநீதி திட்டம் 12.இட ஒதுக்கீடு 13.வேளாண்மைக்கு இலவச மின்சாரம் 14.பெண்களுக்கு சொத்துரிமை 15.கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி 16. மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம் 17.கிராமங்களில் கான்கிரீட் சாலைகள் 18.24மணி நேர ஆரம்ப சுகாதார நிலையங்கள் 19.பெரியார் நினைவு சமத்துவ புரம் 20.கிராமங்களுக்கு மினிபஸ் 21. உழவர் சந்தை 22. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் 23.சத்துணவில் முட்டை…

Read More

இன்று தமிழ்த்தாயின் புதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்ததினம். நேற்று இசைத்தாயின் புதல்வர் இளையராஜாவின் பிறந்தநாள். எப்படி கலைஞர் என்றாலே கருணாநிதி என்றாகி விட்டதோ, அதே போல் இசைஞானி என்று கேட்டதும் நினைவுக்கு வருபவர் இளையராஜா. ஆனால் இந்த இசைஞானிப் பட்டத்தை இளையராஜாவுக்கு வழங்கியவரே கலைஞர் கருணாநிதி தான். காரைக்குடியில் நடைபெற்ற இளையராஜாவின் பாராட்டு விழாவில் பங்கேற்ற கலைஞர் கருணாநிதி, அந்த மேடையில் வைத்து அறிவித்ததுதான் இந்த இசைஞானி பட்டம். இது குறித்து ஆனந்த விகடன் இதழில் தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் கலைஞர் கருணாநிதி. இளையராஜாவுக்கு காரைக்குடியில் சிறப்பான முறையில் ஒரு பாராட்டு விழா நடத்துவதற்காக பழ.கருப்பையா முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அந்த விழாவுக்கு நான்தான் தலைமை வகித்தேன். விழாவில் பங்கேற்க காரைக்குடிக்கு நானும், பழ. கருப்பையாவும் சென்னையில் இருந்து காரில் பயணித்தோம். பயண வழியெங்கும் இளையராஜாவின் இசையை காரில் ரசித்தபடியே சென்ற எங்களுக்கு பயணக் களைப்பு அறவே தெரியாத அளவுக்கு எங்களை காருக்குள்…

Read More