Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்
    தமிழ்நாடு

    கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 karunanithij ilaiyaraja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று தமிழ்த்தாயின் புதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்ததினம். நேற்று இசைத்தாயின் புதல்வர் இளையராஜாவின் பிறந்தநாள். எப்படி கலைஞர் என்றாலே கருணாநிதி என்றாகி விட்டதோ, அதே போல் இசைஞானி என்று கேட்டதும் நினைவுக்கு வருபவர் இளையராஜா.
    ஆனால் இந்த இசைஞானிப் பட்டத்தை இளையராஜாவுக்கு வழங்கியவரே கலைஞர் கருணாநிதி
    தான். காரைக்குடியில் நடைபெற்ற இளையராஜாவின் பாராட்டு விழாவில் பங்கேற்ற கலைஞர் கருணாநிதி, அந்த மேடையில் வைத்து அறிவித்ததுதான் இந்த இசைஞானி பட்டம்.
    இது குறித்து ஆனந்த விகடன் இதழில் தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் கலைஞர் கருணாநிதி.
    இளையராஜாவுக்கு காரைக்குடியில் சிறப்பான முறையில் ஒரு பாராட்டு விழா நடத்துவதற்காக பழ.கருப்பையா முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அந்த விழாவுக்கு நான்தான் தலைமை வகித்தேன்.
    விழாவில் பங்கேற்க காரைக்குடிக்கு நானும், பழ. கருப்பையாவும் சென்னையில் இருந்து காரில் பயணித்தோம்.
    பயண வழியெங்கும் இளையராஜாவின் இசையை காரில் ரசித்தபடியே சென்ற எங்களுக்கு பயணக் களைப்பு அறவே தெரியாத அளவுக்கு எங்களை காருக்குள் கட்டிபோட்டு விட்டது இளையராஜாவின் இசைத்தென்றல்.

    என்னைப் பொறுத்தவரையில், என்னுடைய நண்பரான மறைந்த பாவலர் வரதராசனின் தம்பி இளையராஜா என்பதை மட்டுமே அறிவேனே தவிர, அவருக்கும் எனக்கும் பழக்கம் எதுவும் இல்லை.
    காரைக்குடி பாராட்டு விழாவில் இளையராஜாவின் இசை குறித்து பேசிய நான் இளையராஜாவை இனிமேல் இசைஞ்சானி என அழைக்க வேண்டும் என்று நிறைந்த மனத்துடன் சொன்னேன்.
    அன்று நான் வழங்கிய சிறப்புப் பட்டம்,உலகத்தின் எந்த மூலை முடுக்குகளில் வாழும் தமிழர் எவருக்கும், இளையராஜா அன்று முதல் இசைஞானியாகவே ஆகிவிட்டார் என தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழினக் காவலர் கலைஞர்;  நூற்றாண்டைக் கடந்தும் நிலைக்கும் புகழ்
    Next Article இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!
    Editor TN Talks

    Related Posts

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    July 21, 2026

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.