Close Menu
    What's Hot

    கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    அடடே..!! கேரளாவில் ஆண்களுக்கு ‘நைட்டி’-ஆ..!! ட்ரெண்டாகும் ஃபேஷன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அதிமுகவுக்கு எதிரான வழக்கு; திரும்பப் பெற ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகரன் நீதிமன்றத்திற்கு கடிதம்
    Featured

    அதிமுகவுக்கு எதிரான வழக்கு; திரும்பப் பெற ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகரன் நீதிமன்றத்திற்கு கடிதம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 ops
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2022 ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக நிர்வாகி வைரமுத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தடை விதிக்க மறுத்து விட்டார்.

    அந்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை மட்டும்  நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    ஜூன் 23 ம் தேதி நடந்த  பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்ததுடன், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடத்தப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அப்போது,  ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

    2022 ம் ஆண்டு ஜூலை 11 ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து பொதுச் செயலாளர் பதவி உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன.

    பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் திமுகவிலும்; ஜே சி டி பிரபாகரன் தவெகவிலும் இணைந்துள்ள நிலையில், இந்த உரிமையியல் வழக்குகளை திரும்ப பெற அனுமதி கோரி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு கடிதங்கள் அளிக்கப்பட்டு இருந்தன.

    அதன் அடிப்படையில் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகள், திரும்பப் பெறுவதற்கான தலைப்பில், நீதிபதி குமரேஷ் பாபு முன் இன்று விசாரணைக்கு வந்தன.

    அப்போது வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த கடிதங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படாததால் வழக்கின் விசாரணையை நீதிபதி நாளை தள்ளி வைத்துள்ளார்.

    இதே போல கட்சி நடவடிக்கைகளில் தலையிடவும்,  கட்சியின் கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தவும் பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கும் திரும்ப பெறுவதற்காக பட்டியலிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பன்னீர்செல்வம் தரப்பினருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுர்பானி விவகாரம்: “விஜயின் இரட்டை வேடம்… ஐயுஎம்எல் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்! 
    Next Article ”புதிய தமிழ்நாட்டை செதுக்கிய பேராளுமை”!. கலைஞருக்கு திருமா வீரவணக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!

    June 3, 2026

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    June 3, 2026

    இபிஎஸ்ஸை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா… இல்லையா?

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    அடடே..!! கேரளாவில் ஆண்களுக்கு ‘நைட்டி’-ஆ..!! ட்ரெண்டாகும் ஃபேஷன்..!!

    இபிஎஸ்ஸை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா… இல்லையா?

    2027 ஐபிஎல் தொடரை தவிர்க்கிறாரா பேட் கம்மின்ஸ்..?? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.