ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரின் தலைவராக வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அமைச்சர் கலீலுர் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடத 1986-87இல் வங்கதேசத்தின் ஹுமாயுன் ரஷீத் சவுத்ரி முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது கலீலுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ள நிலையில், ஐநாவின் தலைமைப் பதவி சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.
81-வது அமர்வுக்கான தலைவர் பதவி ஆசிய-பசிபிக் குழுவுக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, ஜூன் 2ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கல்லூர் ரஹ்மானும், சைப்ரஸ் நாட்டின் சிறப்புத் தூதுவர் ஆண்ட்ரியாச் எச். கக்கூரிசும் போட்டியிட்ட நிலையில், கலிலூர் ரஹ்மானுக்கு 99 வாக்குகளும், ஆண்ட்ரியாசுக்கு 91 வாக்குகளும் பதிவாகி 8 வாக்குகள் வித்தியாசத்தில் கலிலூர் ரஹ்மான் வெற்றி பெற்றார். செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி, ஓராண்டு காலத்திற்கு ரஹ்மான் இப்பதவியில் நீடிப்பார் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
