Author: Editor TN Talks

மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஷிண்டே அணிக்கு மாற உள்ளதாகக் கூறப்படும் தகவலால், அம்மாநில அரசியல் பரபரப்பாகி உள்ளது. மகாராஷ்டிராவை கோலோச்சி வந்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனை கட்சி கடந்த 2022ஆம் ஆண்டு பிளவை சந்தித்து உத்தவ் தாக்கரே அணி, ஏக்நாத் ஷிண்டே அணி என இரண்டாக உடைந்தது. இதில் ஏக்நாத் ஷிண்டே தரப்பிலான எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி போட்டதால் ஏற்கனவே இருந்த ஆட்சி கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவோடு முதலமைச்சரானார். இந்திய தேர்தல் ஆணையமும் ஏக்நாத் ஷிண்டே அணியை சிவசேனை என அங்கீகரித்ததோடு, அக்கட்சியின்வில், அம்பு சின்னத்தை வழங்கியது. உத்தவ் தாக்கரே அணியோ, ‘உத்தவ் பாளா சாகேப் தாக்கரே’ (UBT) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து 2024ல் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று பாஜகவின் தேவேந்திர பட்னாவீஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகவும் இருந்து…

Read More

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்று களம் கண்டு வருகின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக், ஜெர்மனியின் ஜேன்-லெனார்டு ஸ்ட்ரப் உடன் மோதினார். இதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்ப்டுத்திய  அலெக்சாண்டர் பப்ளிக் முதல் செட்டை 7-6 (7-3) என வென்றார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை 6-3 என ஜெர்மன் வீரர் கைப்பற்ரினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பப்ளிக் 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில், பிரான்ஸ் வீரர் பெரிகார்டை, அலெக்சாண்டர் பப்ளிக் எதிர்கொள்கிறார்

Read More

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா, தனது 84-வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக ஜூன் 10ஆம் தேதி நீலாங்கரையில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உள்பட திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜா உடலுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் இறுதிமரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு பகுதியில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில், அவரது உடல் நல்லடக்கம் இன்று நடைபெற்றது. முன்னதாக சென்னையில் இருந்து பண்ணை வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாரதிராஜாவின் உடலுக்கு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் சென்னையில் இருந்தும் திரைப்பிரமுகர்கள் இறுதி அஞ்சலி நிகழ்வில் வந்து கலந்து கொண்டனர். பாரதி ராஜாவின் இறுதி சடங்குகளை அவரது உடன்பிறந்த சகோதரரும், மனைவியும்  செய்தனர். அமைச்சர்கள் நிர்மல்குமார்,…

Read More

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சிறப்பு சட்டம் வகுக்கப்படவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;- தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக அபிசெல்வி என்ற இளம் பெண், அவரது அண்ணன் சிவஞானம் மற்றும் தாய் எஸ்தர் பாலின் ஆகியோரால் திட்டமிட்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இக்கொடூரத்தை மறைக்க, அந்தப் பெண் ‘விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்’ என நாடகமாடி, உடலை அவசர அவசரமாக இறுதி சடங்கு செய்ய முயன்ற குடும்பத்தினரின் செயல், சாதி வெறி மனிதநேயத்தை எவ்வளவு தூரம் மரத்துப் போகச் செய்யும் என்பதற்குச் சான்றாகும். காவல்துறையின் துரித விசாரணையால் உண்மை வெளிச்சத்திற்கு வந்து, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது ஆறுதல் அளித்தாலும், இதுபோன்ற சாதியப் படுகொலைகளுக்கு என்றுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. கைது செய்யப்பட்டுள்ள…

Read More

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 60 திட்டப்பகுதிகளில் ரூ.3 ஆயிரத்து 766.24 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாக  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைமை அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையிலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையிலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ப.ராஜ்குமார் அவர்கள் தெரிவிக்கையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னையில் 21 திட்டப்பகுதிகளில் ரூ. ஆயிரத்து 230.42 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 179 அடுக்குமாடி குடியிருப்புகளும், இதர மாவட்டங்களில் 39 திட்டப்பகுதிகளில் ரூ.2 ஆயிரத்து 535.82 கோடி மதிப்பீட்டில்    21  ஆயிரத்து 372 அடுக்குமாடி…

Read More

தமிழ்நாட்டின் மீது மத்திய பாஜக அரசின் பாரபட்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளதாவது;- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய திட்டமாகும். ஆனால் இந்தத் திட்டத்தில்கூட தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரியது. 2022–23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ₹9,743 கோடி வழங்கிய மத்திய அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒதுக்கீட்டைக் குறைத்து, 2025–26 ஆம் ஆண்டில் வெறும் ₹7,585 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதாவது மூன்று ஆண்டுகளில் ₹2,000 கோடிக்கும் அதிகமான குறைப்பு. இதுவே போதாதென்று புதிய VB-GRAM சட்டத்தின் மூலம் மேலும் ஒரு அநீதியை தமிழ்நாட்டின் மீது திணித்துள்ளது. மத்திய அரசு வழங்கும் ₹7,585 கோடியைப் பயன்படுத்தவே தமிழ்நாடு தனது சொந்த நிதியில் இருந்து ₹5,056 கோடி…

Read More

அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி ஈரானைக் குற்றம்சாட்டிய அமெரிக்கா, கடந்த பிப்ரவரியில் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் தொடுத்தது. இதனைத் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் உலக நாடுகளுக்கு கப்பல்களில் எண்ணெய் கொண்டு செல்வது தடைப்பட்டது. பின்னர் அமெரிக்கா பேச்சு வார்த்தையை மேற்கொண்ட நிலையில், இந்த தடை வாபஸ் பெறப்பட்டது. இதனிடையே அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கூறி வந்தது. இந்தச் சூழலில் ஈரானின் ஹெலிகாப்டர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. அத்துடன், அந்த கடல்வழியில் சரக்குகப்பல்கள் உள்பட அனைத்துவிதமான போக்குவரத்தும் மூடப்படுவதாகவும், தங்கள் உத்தரவை மீறி கடக்கமுயன்ற 2…

Read More

ஜெயலலிதாவுக்கு சசிகலா, மு.க.ஸ்டாலினுக்கு சபரீசன் போன்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வீழ்ச்சிக்கு ஜான் ஆரோக்கியசாமி காரணமாகலாம் என பரபரப்பு கிளம்பியிருக்கிறது. தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சருக்கு, அவரது கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணித்து சிறப்புக் குழு வாரம் ஒருமுறையோ அல்லது மாதத்துக்கு இருமுறையோ அறிக்கை தரும். அந்த அறிக்கையைப் படித்துவிட்டு, அதன்பேரில் அமைச்சர்களை மாற்றுவதோ, அதிகாரிகளை மாற்றுவதையோ முதலமைச்சர் மேற்கொள்வார். இப்படி கண்காணிப்பு சிறப்புக் குழு தரும் அறிக்கை முதலமைச்சர் பார்வைக்கு செல்வதற்கு முன்பே அவரது தனிப்பட்ட உதவியாளர்கள் தங்கள் கைகளில் கிடைக்கச் செய்து அதன்வழியாக தங்கள் காய்நகர்த்தலை ஆடுவது உண்டு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு தரப்படும் அறிக்கையை முதலில் சசிகலா படித்து விடுவதாகவும், அதனை வைத்து அமைச்சர்களையும், அதிகாரிகளையும் மிரட்டி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதே போல் கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு தரப்படும் அறிக்கையை அவரது மருமகன்…

Read More

தமிழ்நாடு அரசு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில், மாநிலம் முழுவதும் போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-ன் கீழ் உரிமம் பெற்ற அனைத்து FL2 மற்றும் FL3 வளாகங்களிலும் பின்வரும் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும். 21 வயதிற்குக் குறைவான எந்த நபருக்கும் மதுபானம் விற்கப்படவோ, வழங்கப்படவோ, விநியோகிக்கப்படவோ அல்லது பரிமாறப்படவோ கூடாது. ஒருவரின் வயது குறித்து சந்தேகம் இருப்பின், மதுபானம் வழங்குவதற்கு முன் அவரின் வயதிற்கான செல்லுபடியாகும் ஆவணச் சான்றுகள் சரிபார்க்கப்பட வேண்டும். அனைத்து FL2 உரிமம் பெற்ற கிளப்புகளும் தங்களது பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு,…

Read More

தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநர் இமயம் எனக் கொண்டாடப்பட்டவர் பாரதிராஜா. தமிழகக் கிராமங்களை தனது காமிராக் கண்களால் வெள்ளித்திரையில் நடமாடமிட்டதோடு, குறிப்பிட்ட சமூகத்தினரின் பிடியில் இருந்த திரைப்படத் துறையை எல்லோருக்கும் பொதுவாக்கியவர்களில் குறிப்பிடத் தக்கவர் பாரதிராஜா. தனது திரைப்படங்களின் மூலம் எளிய மக்களின் கதைகளை முன்வைத்ததோடு, சாதி மறுப்பு திருமணம், மதங்களைக் கடந்த காதல் என சமூகப் புரட்சியையும் ஊட்டியவர் பாரதிராஜா. இளையராஜா, வைரமுத்து என அவர் அறிமுகப்படுத்தியவர்கள் இன்றளவும் தமிழ்சினிமாவில் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருப்பார் என்னும் எழுதப்படாத திரைப்பட விதிகளை அடித்து உடைத்து, 16 வயதினிலே படத்தில் கோமணத்துடன் நடமாடும் சப்பாணியை ஹீரோவாகக் காட்சிப் படுத்தியிருந்தார். தமிழ்த் திரைப்படத்தின் போக்கையே மாற்றியதோடு, பாரதிராஜா பாணி என இயக்குநர்களை அணிவகுக்க வைத்ததும் தமிழ்சினிமாவில் அவர் காட்டிய வெற்றிதான். இயக்கம், நடிப்பு என தனி ராஜாங்கம் நடத்தி வந்த பாரதிராஜா வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக…

Read More