ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்று களம் கண்டு வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக், ஜெர்மனியின் ஜேன்-லெனார்டு ஸ்ட்ரப் உடன் மோதினார்.
இதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்ப்டுத்திய அலெக்சாண்டர் பப்ளிக் முதல் செட்டை 7-6 (7-3) என வென்றார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை 6-3 என ஜெர்மன் வீரர் கைப்பற்ரினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பப்ளிக் 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில், பிரான்ஸ் வீரர் பெரிகார்டை, அலெக்சாண்டர் பப்ளிக் எதிர்கொள்கிறார்
