Author: Editor TN Talks

அதிமுகவில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,  இஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை தனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் நகரக் கழக செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி தன்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

Read More

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் வெளியேறிய ஜி.கே.மூப்பனார் தொடங்கியதுதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. இக்கட்சி 1996 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி போட்டு 41 தொகுதிகளில் போட்டியிட்டு 39 இடங்களில் வென்றது. அதேஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி போட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி போட்டதை எதிர்த்து வெளியேறிய ஜி.கே.மூப்பனார்,  புதிய தமிழகம், விசிகவுடன் கூட்டணி போட்டு தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்தார். இதனால் 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 32 தொகுதிகளில் போட்டியிட்டு 23 இடங்களில் வென்றது.   2001இல் மூப்பனார் மறைவுக்குப் பின்னர் தலைவரான அவரது மகன் ஜி.கே.வாசன் தமாகாவை 2002இல் காங்கிரசுடன் இணைத்தார். அதன்பின்னர் 2014 வரை காங்கிரஸில் தொடர்ந்தவர்,  அந்த…

Read More

பாமர மக்களுக்கு உதவி செய்வதற்கான பரிந்துரைகளை  ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன் , ஜனநாயகத்தில் மக்களே தெய்வம் என திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாவட்ட கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சரும் திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பெ. விஸ்வநாதன் பேசினார்.. திருவாரூர் பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் திருவாரூர்மாவட்ட காங்கிரஸ் கமிட்டி  சார்பில்  மாவட்டத் தலைவர் நீலன்அசோகன் தலைமையில் காங்கிரஸ் கமிட்டியின் மாநில ,மாவட்ட, நகர, வட்டார  நிர்வாகிகள் , இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்  ஒன்றிணைந்து தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை அமைச்சரும் , திருவாரூர்மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பெ. விஸ்வநாதன் பதவிஏற்று முதன்முறையாக திருவாரூருக்கு வருகை தந்ததற்கு  வரவேற்ப்பு அளித்து வெகுவிமர்சையாக பாராட்டுவிழா  நடத்தினர் , தொடர்ந்து இக்கூட்டத்தில்  உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் பேசியதாவது – தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர், மதுரை மேலூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ, மற்றும் திருவாரூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ஆகிய…

Read More

சென்னையில் நடைபெற்ற திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, மிஸ்டர் சீப் மினிஸ்டர் எனக் கூறி கலாய்த்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- தேர்தலுக்கு முன்பு வெல்லும் தமிழ் பெண்கள், மண்டல மாநாடுகள், வீடு வீடாகச் சென்று பிரசாரம், சமூக வலைத்தள செயல்பாடுகல் என மகளிர் அணியினர் மல்டி டாஸ்க்கிங் பணிகளை எழுச்சியுடன் செய்து முடித்தீர்கள். திமுக பெற்றுள்ள வாக்குகளுக்கு உங்களின் முயற்சிகள் முக்கியம். அதற்கு நன்றிகள். எதிர்க்ட்சியாக இருக்கும் நாம், மீண்டும் ஆளும் கட்சியா மாற வேண்டும் என்றால், நீங்கள் இன்னும் சுறுசுறுப்பாவும் ,வேகமாகவும் செயல்படவேண்டும். அதுக்கான களமாகத்தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. 6 மாசம் கூட இந்த ஆட்சி நடக்குமா?  என நான் கலந்து கொண்ட நிகழ்வுகளில் பேசினேன். அதனை உண்மைக்கு மாறாக திரித்து,  ஆட்சியைக் கவிழ்க்க சதியா என எதிரிகள் அழ ஆரம்பித்துவிட்டனர். திமுக கழகம் பொறுப்பான…

Read More

தனது பெயரில் போலியான அலைபேசி எண் உருவாக்கப் பட்டுள்ளதாக நடிகை மீனாட்சி சவுத்ரி ரசிகர்களை எச்சரித்துள்ளார். தொழில்நுட்ப வசதியான இணையம் எந்த அளவுக்கு வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதோ, அதற்கு சற்றும் குறையாமல் மோசடி பேர்வழிகளும் இணையத்தைப் பயன்படுத்தி பலரையும் ஏமாற்றி வருகிறார்கள். வங்கிகளின் பெயரில் மெசேஜ் அனுப்புவது, நண்பர்களின் பெயரில் தகவல் அனுப்புவது, தற்போது நடிகர் நடிகைகளின் பெயரில் தொலைபேசி எண்களை உருவாக்கி இணையத்தில் பதிவிட்டு ஏமாற்றுவது என நூதன முறைகளைக் கையாண்டு வருகின்றனர். இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் உஷாராக இருக்கும்படி நடிகை மீனாட்சி சவுத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை…. ஆமாம், இணைய மோசடி பேர்வழிகள் மீனாட்சி சவுத்ரி பெயரில் தொலைபேசி எண் உருவாக்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற ஒரு பதிவைப் பகிருந்துதான், இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி மீனாட்சி சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்தப் பதிவில் உள்ள எண் நான் இல்லை. எனது பெயரில் வரும் அழைப்புகளையோ குறுஞ்செய்தியையோ…

Read More

தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளை முன்வைத்து, நாடு தழுவிய அளவில் பெரிய அளவிலான மாணவர் மாநாடுகளை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னின்று வழிநடத்துகிறார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எம்.பி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் பெரிய அளவிலான மாணவர் மாநாடுகளை முன்னெடுக்கவுள்ளார். இதன் முதல் மாநாடு ஜூன் 17 அன்று கொடா (கோட்டா)வில் நடைபெறுகிறது.   “ராகுல் காந்தி ஜூன் 17 அன்று கொடாவில் தொடங்கி, ஜூலை 10 அன்று அலகாபாத், ஜூலை 11 அன்று பாட்னா மற்றும் ஜூலை 14 அன்று டெல்லியில் பெரிய அளவிலான மாணவர் மாநாடுகளை நடத்தவுள்ளார்.   தேர்வு முறைகேடுகளால்…

Read More

அசாம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள விமானப்படை தளத்தில், இந்திய விமானப்படையின் ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் இன்று தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்ததை இந்திய விமானப்படையும் உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர் அங்கு துரித நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகந்துள்ளதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்தும் இன்னும் தகவல் வெளியாக வில்லை. இந்திய விமானப்படை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Read More

கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்து, தப்பி ஓடிய ,ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிம்முடு அஜித் குமார். இவர் கார் விற்பனை செய்பவர்களின் தகவலை பெற்று , OLX செயலியில் தனது கார் என்பதை போல பதிவேற்றம் செய்து பல லட்சம் மதிப்புடைய காருக்கு  ஒரு சில லட்சங்கள் மட்டும்  அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இவர் மீது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 30 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட பிம்முடு அஜித்குமார், உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆந்திராவில் இருந்து தப்பிய  அவர் , திருப்பூர் மாவட்டத்தில் இதேபோல கார் விற்பனை செய்வது போல இருவரிடம் பணம் பெற்று மோசடி செய்து உள்ளார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்…

Read More

சென்னையில் நடைபெற்ற நூறுசாமி படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில், இயக்குநர் மிஷ்கின் நடிகை சுவாசிகாவின் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சசி கடந்த 2016ஆம் ஆண்டில் இயக்கிய பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருந்தார். வித்தியாச கதையம்சம் கொண்ட இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றி அடைந்தது. தற்போது சசியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மீண்டும் நடித்துள்ள நூறுசாமி திரைப்படம்  ஜூன் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சுவாசிகா, கருணாஸ், லிஜிமோல் ஜோஸ், முனீஸ்காந்த், அஜய் தீஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கணவனை இழந்த பெண் மறுமணம் செய்வது தொடர்பான  உணர்வுப்பூர்வமான கதையமைப்புடன் நூறு சாமி படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.  நூறுசாமி படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசுவதற்காக மேடையேறத் தயாரான இயக்குநர் மிஷ்கின், அருகிலிருந்த நடிகர் விஜய் ஆண்டனிக்கு கைகொடுத்ததோடு,…

Read More

 70 ஆண்டுகளாக வைகை அணையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது எனக்கூறியுள்ள அமைச்சர் நிர்மல்குமார், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் தூர்வாரும் பணி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில்  சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு மேற்கொண்டார் . கோடை வெப்பத்தால் வைகை அணையின் நீர்மட்டம் கடுமையாக சரிந்து 20 அடி வரை சென்ற நிலையில் அணையில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் இதனைத் தொடர்ந்து வைகை அணை பகுதியில் அமைச்சர் நிர்மல் குமார் மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதனுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் , வைகை அணையில் தூர்வாரும் பணிகள் குறித்து தற்போது வரை ஆய்வு நடத்திக் கொண்டு வருகிறோம். இதற்காக மத்திய அரசிடம் ஒப்புதலை கேட்டு…

Read More