Close Menu
    What's Hot

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ; வரலாற்று சாதனை படைத்த பி.வி.சிந்து – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

    BLASTU.. BLASTU..!! களைகட்டும் ‘ஜனநாயகன்’ திருவிழா..!! திருப்பூரில் டி-ஷர்ட்-க்கு குவியும் ஆர்டர்கள்..!!

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அணி தாவுகிறாரா ஜி.கே.வாசன்? – தேஜகூவில் இருந்து வெளியேறும் தமாகா..?
    Featured

    அணி தாவுகிறாரா ஜி.கே.வாசன்? – தேஜகூவில் இருந்து வெளியேறும் தமாகா..?

    Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 gkvasan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 1996-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் வெளியேறிய ஜி.கே.மூப்பனார் தொடங்கியதுதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. இக்கட்சி 1996 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி போட்டு 41 தொகுதிகளில் போட்டியிட்டு 39 இடங்களில் வென்றது. அதேஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி போட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது.

    அதன்பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி போட்டதை எதிர்த்து வெளியேறிய ஜி.கே.மூப்பனார்,  புதிய தமிழகம், விசிகவுடன் கூட்டணி போட்டு தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்தார்.

    இதனால் 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 32 தொகுதிகளில் போட்டியிட்டு 23 இடங்களில் வென்றது.

     

    2001இல் மூப்பனார் மறைவுக்குப் பின்னர் தலைவரான அவரது மகன் ஜி.கே.வாசன் தமாகாவை 2002இல் காங்கிரசுடன் இணைத்தார். அதன்பின்னர் 2014 வரை காங்கிரஸில் தொடர்ந்தவர்,  அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ர தேர்தலின் போது காங்கிரசில் இருந்து வெளியேறி மீண்டும் தமாகாவை தொடங்கினார்.

    இதன்பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தும் செயல்பட்டு வந்தவர் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்த நிலையில், தேர்தலில் தமாகா போட்டியிட்ட இடங்களில் தோல்வியை சந்தித்தது.

    தற்போதைய அரசியல் சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா என அக்கட்சியின் செயற்குழு கூடி முடிவு செய்த நிலையில்,

    இன்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தேஜகூவில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மூன்று மாதங்கள் கழித்து திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைய போவதாகவும் கூறப்படுகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் தாங்கள் விருப்பப்பட்ட தொகுதிகள் தங்களுக்கு வழங்கப்படாதது விலகல் முடிவுக்கு  ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியா கூட்டணியில் பதற்றம்: ராகுலின் அணுகுமுறை சரியாக இல்லை..!! பினராயி விஜயன் சாடல்..!!
    Next Article பிரான்சில் மோடி – டிரம்ப் சந்திப்பு!. உலகளாவிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!
    Editor TN Talks

    Related Posts

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ; வரலாற்று சாதனை படைத்த பி.வி.சிந்து – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

    July 19, 2026

    BLASTU.. BLASTU..!! களைகட்டும் ‘ஜனநாயகன்’ திருவிழா..!! திருப்பூரில் டி-ஷர்ட்-க்கு குவியும் ஆர்டர்கள்..!!

    July 19, 2026

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ; வரலாற்று சாதனை படைத்த பி.வி.சிந்து – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

    BLASTU.. BLASTU..!! களைகட்டும் ‘ஜனநாயகன்’ திருவிழா..!! திருப்பூரில் டி-ஷர்ட்-க்கு குவியும் ஆர்டர்கள்..!!

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    குதிரை பேரம் விவகாரம் – கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு ’சீல்’  

    தேசிய திரைப்பட விருதுகள் வென்ற தமிழ் திரையுலக கலைஞர்கள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.