Close Menu
    What's Hot

    தேர்வு சீர்திருத்தங்களுக்காக உயர்நிலைக் குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

    மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி- சாய் பல்லவி நடிக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

    “தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்!” – பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் உருக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்
    Featured

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    Editor TN TalksBy Editor TN TalksJune 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 pengamine
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட செயலாளருமான பெஞ்சமின், திமுகவில் இணைந்துள்ளார்.

    அதிமுகவில் கடந்த 1988ஆம் ஆண்டு இணைந்த பெஞ்சமின், 15 ஆண்டுகள் வில்லிவாக்கம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றி உள்ளார். சென்னை 145-வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு, மாநகராட்சி துணை மேயராகவும் இருந்துள்ளார். ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டங்களை முன்னின்று நடத்துவதில் தீவிர அக்கறையும் ஆர்வமும் காட்டி வந்த பெஞ்சமினுக்கு  கடந்த 2016-இல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார். அதில் வெற்றி பெற்ற பெஞ்சமின் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்

    கடந்த 2021 மற்றும் 2026 தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டும் ஜெஞ்சமினால் வெற்றி பெற முடியவில்லை. தற்போதைய தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் இரண்டு அணிகளாகப் பிரிந்து மீண்டும் இணைந்துள்ளனர். இந்தச் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலரது மாவட்டச் செயலாளர் பதவியையும் காலி செய்தார். அதில் பெஞ்சமினின் பதவியும் பறிக்கப்பட்டதால், மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று கண்ணீர் விட்டார்.

    தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை எனப் பேட்டியும் தட்டினார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பெஞ்சமின் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.என்.பி. வெங்கட்ராமன் மே மாதம் 28ஆம் தேதி திமுகவில் இணைந்தார். அதன் பின்னர் செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கஜேந்திரனும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது பெஞ்சமினும் இணைந்துள்ளார். இதேபோல், அதிமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் குழந்தை வேலு திமுகவில் இணைந்துள்ளார்.

    ஒருபுறம் அதிமுகவில் இருந்து ஆளும்கட்சியான தவெகவுக்கு படையெடுகும் நிலையில், ஒரு சிலர் திமுகவுக்கும் ஜாகை மாற்றி வருகிறார்கள்.

    மொத்தத்தில் அதிமுக என்பது வரும் காலங்களில் கரைந்து காணாமல் போய்விடுமா என்னும் கேள்விதான் தமிழ்நாடு அரசியல் அரங்கில் மேலோங்கி நிற்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது
    Next Article எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    தேர்வு சீர்திருத்தங்களுக்காக உயர்நிலைக் குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

    July 26, 2026

    “தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்!” – பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் உருக்கம்

    July 26, 2026

    காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்வு சீர்திருத்தங்களுக்காக உயர்நிலைக் குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

    மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி- சாய் பல்லவி நடிக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

    “தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்!” – பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் உருக்கம்

    காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.