Close Menu
    What's Hot

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு
    Featured

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 CM VIJAY f
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது டெல்லியில் நாளை ஜூன் 11ஆம் தேதி நிதி ஆயோக்கின் 11வது கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும்  ஆளுநர்கள், மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தனி விமானத்தில் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    முன்னதாக காலையில் அவர், மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    008 CM VIJAY b

    இதன்பின்னர் டெல்லி புறப்பட்டு வந்த முதலமைச்சரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அதிகாரிகள் வரவேற்றனர்.

    008 CM VIJAY a

    இதைத் தொடர்ந்து முதலமைச்சருக்கு அளிக்கப்பட்ட காவல்துறையினர் மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

    008 CM VIJAY

    அங்கு சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய் முதன்முறையாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

    008 CM VIJAY c

    இதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டவர், துணைக் குடியரசுத் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினார்.

    008 CM VIJAY d

    இந்த சந்திப்புகளுக்குப் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியை, ஜன்பத் சாலையில் உள்ள இல்லத்திற்கு சந்திக்க சென்றார். அவரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும், சோனியா காந்தியும் வரவேற்றனர்.
    008 CM VIJAY e

    இருவரையும் சந்தித்து சிறிது நிமிடம் பேசியவர் மீண்டும் தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பினார்.

    Delhi Visit Joseph Vijay President Meeting
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்
    Next Article திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது
    Editor TN Talks

    Related Posts

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    June 10, 2026

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    June 10, 2026

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.