Author: Editor TN Talks
முதலமைச்சர் விஜய் வரையறுத்துள்ள கல்விக் கொள்கை சட்டப்பேரவையில் இடம்பெறும் எனவும் அதன் அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம் எனவும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது:- சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். அவையின் மரபுகள் என்ன என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. சட்டப்பேரவை மரபுகள் குறித்து வல்லுனர்களின் அறிவுரைகள் வழங்கப்பட்டது. திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பணியிடமாறுதல் வழங்கப்படாது. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அடிப்படையில் நியாயமான முறையில் பணி மாறுதல் வழங்கப்படும். கவுன்சிலிங் அடிப்படையில் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு பணி மாறுதல்கள் வழங்கப்படும். கொள்கை முடிவு அடிப்படையில் ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் இருக்கும். உயர்கல்வித்துறையில்…
ஆங்கிலேயர்களின் இந்தியக் காலனியாதிக்கத்தை எதிர்த்து, 1801-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் நாள் மருது சகோதரர்களால் ஜம்புத் தீவு பிரகடனம் வெளியிடப்பட்டது. அதன் 225-வது ஆண்டான இன்று பாரதம் சுயசார்புடன் என்றும் நிற்க எல்லோரும் ஜம்புத்தீவு பிரகடனத்தை நினைவிற் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் அர்லேகர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;- முதல் சுதந்திரப் போருக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, ஆற்காடு நவாப்களுக்கு அடியாள்களாக வந்து அதிகாரத்தைப் பறிக்க முயன்ற ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி விரட்ட ஆயுதப்போர் புரிந்து, மண்ணும் மானமும் பெரிதென்று மாபெரும் போர் செய்த மாவீரர்கள் மருதுபாண்டியர்கள்! பாரதத்தின் கீழ் பகுதி நாவல் பழத்தை ஒத்திருப்பதால் வேதங்களிலும் புராணங்களிலும் ஜம்புத்தீவு என்றும் சங்க இலக்கியங்களில் நாவலந்தீவு என்றும் அழைக்கப்பட்ட பாரத தேசத்தை காப்பதற்கும், மொழியாலும், தொழிலாலும், இனத்தாலும் பிரிவுகள் பல இருந்தாலும் பாரதம் முழுவதும் ஒரே நாடு என்ற நோக்கில்…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நூறு நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்ததோடு, தட்டி கேட்க முயன்ற பெண்களை பெட்ரோல் ஊற்றி தீயிட முயற்சித்த கூலிங்கிளாஸ் ஆசாமியை பெண்கள் தென்னைமட்டையால் வெளுத்து வாங்கியுள்ளனர். கொடையாஞ்சி கிராமத்தில் நூறு நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கூலிங் கிளாஸ் அணிந்த நபர் ஆபாசமாகப் பேசி சில்மிஷம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை சில பெண்கள் தட்டிக் கேட்ட போது ஆத்திரமடைந்த நபர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அங்கு இருந்த தென்னை மட்டையால் தர்ம அடி கொடுத்துள்ளனர். அந்த கூலிங்கிளாஸ் நபரும் அங்கிருந்த பெண்களையும் அவர்களுக்கு ஆதரவாக வந்தவர்களையும் பதிலுக்கு தாக்கியதுடன், தான் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த பெட்ரோல் கேனை எடுத்து அங்கிருந்த பெண்களின் மீது பெட்ரோலை ஊற்றி தீயிட முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட பெண்கள் உடனடியாக…
பெண் படுக்கையில் ஆண் நோயாளி – இது கோவை அரசு மருத்துவமனை அவலம் ; எமெர்ஜென்சி வார்டில் தொடரும் துயரும்
கோவை அரசு தலைமை மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவில் (Emergency Ward), கடுமையான நெஞ்சுவலி காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த பெண் நோயாளி ஒருவரின் படுக்கையிலேயே, மற்றொரு ஆண் நோயாளியையும் அமர வைத்துச் சிகிச்சை அளித்த அநாகரிகமான மற்றும் அதிர்ச்சியூட்டும் நிர்வாகச் சீர்கேடு வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில், அண்மைக் காலமாக அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முடங்கிக் கிடப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதன் உச்சக்கட்டமாக, நெஞ்சுவலி காரணமாக அவசரக் கால சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் நோயாளி ஒருவருக்கு படுக்கை வசதி செய்து தரப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் அதே படுக்கையில் மற்றொரு ஆண் நோயாளியையும் படுக்க வைத்து உள்ளனர். பின்னர், அந்த ஆணை எழுப்பி அதே பெட்டில் அமர வைத்து விட்டு, மீண்டும் மற்றொருவரை அங்கு அமர வைப்பது என அவசரச் சிகிச்சை பிரிவுக்கே உரிய எந்தவொரு அடிப்படை…
தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைச் சுட்டிக்காட்டி காட்டாட்சி வீழ்வது உறுதி என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து பெண்கள், சிறுமிகள், மூதாட்டிகள் என நாள்தோறும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவை சூலுரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது போன்றே, நேற்று கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பீகார் இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருப்பதாக எக்ஸ் தளத்தில் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே? என வினா எழுப்பியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி…
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை பாஜக தலைவர்கள் சந்தித்துப் பேசியது, பல்வேறு ஐயங்களை எழுப்பியுள்ளது. சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான மேனன் அரவிந்த், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை ரஜினிகாந்துக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர்கராத்தே தியகராஜன் , மாநில பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜ் ஆகியோரும் இந்த சந்திப்பில் உடன் இருந்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக நயினார்…
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மே 13-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய அதிமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டதாகவும், அது நிலுவையில் இருந்த போது, மே 25ம் தேதி தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோரும், மே 26 ஆம் தேதி அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் பதவிகளை ராஜினாமா செய்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெக-வில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு தலைமைச் செயலகத்திலேயே தவெக உறுப்பினர்…
கிருஷ்ணகிரியில் கணினி மையத்தில் நுழைந்த திமுக நகராட்சி கவுன்சிலர், அந்த கடையின் உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சீனிவாசன். இவர் எல்ஐசி அலுவலகம் எதிரே உள்ள அவ்வை நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக அந்த பகுதியில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களை கொட்டி வைத்து, சிமெண்ட் சாலை பணிகளையும் செய்து முடித்துள்ளார். இந்த நிலையில் மீதம் இருந்த எம் சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் அந்தப் பகுதியிலேயே இருந்துள்ளது. பின்னர் அவரிடம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் என அந்த எம் சாண்ட் மற்றும் ஜல்லி கற்களை எடுத்துச் சென்று அவரவர் வீடு மற்றும் கடைகளின் முன்பு பள்ளமாக இருந்த பகுதிகளில் கொட்டி தாங்களாகவே சமன் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி…
தமிழ்நாடு அரசின் நிலை நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று மாலை நிதி அமைச்சர் மரிய வில்சன் வெள்யிடுகிறார். 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான தவெக தலைவர் ச.ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து வெள்ளை அறிக்கை எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு கிளம்பியது. அண்மையில் தூத்துக்குடி பனிமய மாதா கோவிலுக்கு வருகைதந்திருந்த நிதி அமைச்சர் மரியவில்சனிடம் நிருபர்கள் வெள்ளை அறிக்கை தொடர்பாக கேள்வி கேட்டபோது அவரும் விரைவில் முதலமைச்சரின் ஒப்புதலுடன் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை 05.30 மணியளவில் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையினை (WHITE PAPER ON THE FISCAL MANAGEMENT OF TAMIL…
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைக்கியா பாராட்டு தெரிவித்துள்ளனர். பர்மிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் ஷபாலி வர்மா (6), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (1) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்சில் 9 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் இடம் பெற்றன. ஹர்மன்ப்ரீத் கவுர் 36 ரன்கள் சேர்த்தார். இறுதிக்கட்டத்தில் ரிச்சா கோஷ் 17…