Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»சினிமா வசனம் தேவையில்லை; போர்க்கால நடவடிக்கை எப்போது? – முதல்வருக்கு டிடிவி கேள்வி
    அரசியல்

    சினிமா வசனம் தேவையில்லை; போர்க்கால நடவடிக்கை எப்போது? – முதல்வருக்கு டிடிவி கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksJune 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 ttv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் – வளர்ச்சி திட்டங்களுக்குக் கால அவகாசம் கேட்பது நியாயமாக இருக்கலாம்; ஆனால் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும், அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் எப்போது உணரப்போகிறார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்கேள்வி எழுப்பியுள்ளார்.

    சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர்

    சங்கரன்கோவில் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி

    ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது மாணவி

    கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை

    என கடந்த இரு தினங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் பட்டியல் தொடர்கிறது.

    இதில் கும்மிடிப்பூண்டியில் பால் மனம் மாறா பச்சிளம் குழந்தை காம வெறியர்களால் சிதைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாக வரும் செய்தி மனதை உலுக்குவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    பச்சிளம் குழந்தைகளில் தொடங்கி வயதான மூதாட்டிகள் வரை தமிழகத்தில் நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் இத்தகைய குற்றச் சம்பவங்களையும், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களையும் இன்னும் எத்தனை நாட்கள் தான் சகித்துக் கொள்ள வேண்டும்  என ஆதங்கம் தெரிவித்துள்ள டிடிவிதினகரன்,

    பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும் என கடுங்கோபத்துடன் சினிமாவில் பேசுவது போல வசனம் பேசும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தில் அரங்கேறும் தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்  என கேள்வி எழுப்பியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: அனுமதி வழங்க சீமான் எதிர்ப்பு!
    Next Article பாகலூர் அருகே பரபரப்பு!. சீறிய ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு!
    Editor TN Talks

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.