Close Menu
    What's Hot

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»Featured»பாகலூர் அருகே பரபரப்பு!. சீறிய ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு!
    Featured

    பாகலூர் அருகே பரபரப்பு!. சீறிய ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு!

    Editor web3By Editor web3June 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thenpennai River flood
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பாறைகளை பிடித்து உயிருக்கு போராடிய மூதாட்டியை, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி அதிரடியாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாகலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று ஆற்று வெள்ளத்தின் சுழலில் மூதாட்டி ஒருவர் எதிர்பாராதவிதமாக சிக்கி, தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதைப் பார்த்த கரையில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துள்ளனர்.

    தண்ணீரில் அடித்து வரப்பட்ட அந்த மூதாட்டி, நல்வாய்ப்பாக ஆற்றின் மையப்பகுதியில் இருந்த பெரிய பாறைகளுக்கு இடையே சாய்ந்து நின்றார். வெள்ளத்தின் வேகம் அவரை இழுத்துச் செல்ல முயன்றபோதிலும், பாறைகளைத் தன் கைகளால் பலமாகப் பற்றிக்கொண்டு, காப்பாற்றுமாறு சத்தமிட்டு குரல் எழுப்பியுள்ளார்.

    இதனைப் பார்த்த மக்கள் உடனடியாக பாகலூர் காவல் நிலையத்திற்கும், ஓசூர் தீயணைப்பு நிலையத்திற்கும் அவசரத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குப் பாய்ந்து வந்த மீட்புக் குழுவினர், சீறிப்பாய்ந்த வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் இறங்கினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கயிறுகளின் துணையோடு பாறையில் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டியைப் பத்திரமாக மீட்டுக் கரை சேர்த்தனர்.

    வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மூதாட்டிக்குக் கரையில் முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர், அவர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

    Bagalur Elderly woman flood hosur rescued safely Thenpennai River
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசினிமா வசனம் தேவையில்லை; போர்க்கால நடவடிக்கை எப்போது? – முதல்வருக்கு டிடிவி கேள்வி
    Next Article இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை, சிகரெட்டுகள்  பறிமுதல்!. லாரி டிரைவர் கைது!
    Editor web3
    • Website

    Related Posts

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    June 15, 2026

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    June 15, 2026

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.