Close Menu
    What's Hot

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»4 புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: அனுமதி வழங்க சீமான் எதிர்ப்பு!
    தமிழ்நாடு

    4 புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: அனுமதி வழங்க சீமான் எதிர்ப்பு!

    Editor web2By Editor web2June 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    seeman 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் 4 புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டடததுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

    திமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNCZMA) சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழில் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.

    தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்க வேண்டாம்” என வலியுறுத்தி உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleச.ஜோசப் விஜய் முதலமைச்சராகி 35 நாட்கள்- தொடரும் பாலியல் வன்கொடுமைகள்; அலறும் பெண்கள்  
    Next Article சினிமா வசனம் தேவையில்லை; போர்க்கால நடவடிக்கை எப்போது? – முதல்வருக்கு டிடிவி கேள்வி
    Editor web2
    • Website

    Related Posts

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    June 15, 2026

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    June 15, 2026

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    பருவமழை எதிரொலி!. சென்னையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க திட்டம்!. மாநகராட்சி அதிரடி!

    10 ரூபாயா, வேலையா…  எது முக்கியம்? – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.