Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
    தமிழ்நாடு

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksJune 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 ttv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75,000-க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடனுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருப்பது, தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானதாகும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, RBI வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் நிதிநிலையை காரணம் காட்டி ரூ.50,000 வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களும், பல்வேறு அரசியல் கட்சிகள் எழுப்பிய வலுவான எதிர்ப்பின்  காரணமாகவே தற்போது அந்த வரம்பு ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இது பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையாது எனக் கூறியுள்ளார்.

    காலநிலை மாற்றம், எதிர்பாராத இயற்கை பாதிப்புகள், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தாங்கள் பெற்றுள்ள பயிர்க்கடன் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருப்பதாகவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடிக்குப் பிறகும் மீதமுள்ள தொகையை செலுத்த இயலாத நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், தற்போதுள்ள பயிர்க்கடனை முழுமையாகச் செலுத்தினால் மட்டுமே புதிய பயிர்க்கடன் கிடைக்கும் என்ற சூழல் நிலவுவதால் குறுவை சாகுபடியை தொடங்க முடியாத நிலை உருவாகி, விவசாய உற்பத்தியும் கேள்விக்குறியாகியுள்ளது என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன்,

    மிக முக்கியமாக, தேர்தலுக்கு முன்பு தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெளிவாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னர் தள்ளுபடி வரம்பை சிறிது சிறிதாக உயர்த்துவது, விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும் என சாடியுள்ளார்.

    போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்ற நிலை தொடருமானால், “மாற்றம்” கொண்டு வருவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் என்ன? மக்களின் நலனுக்காக ஆட்சி செயல்பட வேண்டுமே தவிர, ஒவ்வொரு கோரிக்கைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் ஏற்படக் கூடாது.

    எனவே, தமிழக விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

    Crop Loan Waiver ttv dhinakaran TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவில் அடுத்த விக்கெட் காலி;  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்
    Next Article யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்
    Editor TN Talks

    Related Posts

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    June 16, 2026

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    June 16, 2026

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி;  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி;  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்

    புதுச்சேரி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.