Close Menu
    What's Hot

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விசிகவை வீழ்த்த விரும்புகிறார்கள் சிலர் –  திருமா அதிர்ச்சி தகவல்
    Featured

    விசிகவை வீழ்த்த விரும்புகிறார்கள் சிலர் –  திருமா அதிர்ச்சி தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து திமுகதான் பதில் அளிக்க வேண்டும் என செய்தியாளரின் கேள்விக்கு திருமா பதில் அளித்துள்ளார்.

    திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்  எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை தொடபான கேள்விக்கு  திராவிட முன்னேற்றக் கழகம் தான் பதில் சொல்ல வேண்டும் எனவும் கருத்து சொல்வதற்கு தனக்கு ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்தார்.

    தவெகவின் ஒரு மாத கால ஆட்சி தொடர்பான கேள்விக்கு,

    6மாதம் பொறுத்திருப்போம், ஆட்சி குறித்து விமர்சனங்களை வைப்போம் என நிலைப்பாட்டை எதிர்க்கட்சியினர் எடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரே மாதத்தில் ஆட்சி நிர்வாகம் குறித்து எந்த மதிப்பீட்டையும் சொல்ல இயலாது.

    இப்போது அவர்களுக்கு கற்றுக் கொள்ளக்கூடிய காலம் எனவே, ஒரு மாத கால ஆட்சி பற்றி மதிப்பீடு சொல்ல இயலாது எனக் கூறினார்.

    அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்த கேள்விக்கு, அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியவில்லை, இது அவர்களுடைய உட் கட்சி விவகாரம்.

     மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்த பதவியை ராஜினாமா செய்கிற அளவுக்கு உள்ளே என்ன  நெருக்கடி என்பது அவர்களுக்கு தான் தெரியும். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

    அதிமுக ஒரு திராவிட இயக்கம் என்ற முறையில் அந்த கட்சி வலுவாக, சிதறாமல் இருப்பது தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன்.

    எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றிய அதிமுக கட்டுக்கோப்பாக இருந்தால் நல்லது என வேதனை தெரிவித்தார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளுநர் ஷாநவாஸ், புதிய கட்சி ஆரம்பித்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போகிறார் என வார இதழில் வெளியான செய்தி குறித்த கேள்விக்கு,

    அந்த வார இதழுக்கு ஏதோ தனிப்பட்ட உள்நோக்கம் உள்ளது. அது தவறான தகவல். ஆளூர் ஷாநவாச் தலைமையோடு தொடர்பில் இருக்கிறார். வெளிநாடு சென்று தற்போது திரும்பி இருக்கிறார். விரைவில் என்னை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

    அவருக்கு இருக்கிற வருத்தம் அவருடன் கலந்து பேசி முடிவு எடுக்கவில்லை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

    வன்னிஅரசு அமைச்சரான போதும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பதவி ஏற்கும் பொழுது அவர் தாமதமாக வந்த நிலையில் அவருடைய வாகனம் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், திட்டமிட்டு ஒரு  வார ஏடும் நாளிதழும், திரும்பத் திரும்ப விடுதலை சிறுத்தை குறிவைத்து அவதூறுகளை பரப்பி வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி எளிய மக்களுக்கான இயக்கம். இந்த இயக்கத்தை உடைத்து இங்கே என்ன சாதிக்கப் போகிறார்கள். ஏன் இப்படி திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என்று விளங்கவில்லை.

    தமிழ்நாட்டை பாதுகாப்பதற்கு விசிகவை  வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த அளவு விசிக தமிழ்நாட்டுக்கு எதிரான காட்சியா என்பது விளங்கவில்லை.

    ஒரே ஒரு நாளிதழும், வார ஏடும் தான் திரும்பத் திரும்ப இதை செய்து கொண்டிருக்கின்றனர் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை எந்த பிரச்சனையும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    Thiruma Speech Thol Thirumavalavan VCK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமெஸ்ஸி மேனியா!. 17,000 கி.மீ சைக்கிள் பயணம் செய்து உலகக் கோப்பையைக் காண வந்த ரசிகர்கள்!
    Next Article கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் ’சத்தியவான் சாவித்ரி’..! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
    Editor TN Talks

    Related Posts

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    June 17, 2026

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    June 17, 2026

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    முதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?

    லாக் அப் டெத்?. 101 நாட்களுக்கு பின் ஆகாஷ் டெலிசன் உடல் தகனம்!. கதறிய பெற்றோர்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.