பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ளது ’சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம். மிஷ்கினும், கீர்த்தி சுரேஷூம் வழக்கறிஞராக நடித்துள்ள இப்படத்தில், பால சரவணன், பாலாஜி சக்திவேல், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜீ ஸ்டூடியோ தயாரிப்பிலும், சாம்.சி.எஸ் இசையிலும் உருவாகியுள்ள இப்படம், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில், ‘சத்தியவான் சாவித்திரி’ படம் அடுத்த மாதம் 24-ந்தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
