Author: Editor web4

பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ரூ.100கோடிக்கு மோசடி செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிபிசிஐடி விசாரணை ஒருபக்கம், திமுக நிர்வாகிகள் வீட்டில் சோதனை ஒருபக்கம் என விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் எச்.ராஜாவை தொடர்புப்படுத்தி அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொள்ளாச்சியில் நடந்த என்.ஜி.ஓ. கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது என்னுடைய பெயரை இழுத்து விட்டு தன் பக்கத்தில் நியாயம் இருப்பது போல் அண்ணாமலை பேசி இருக்கிறார். அதில் கோவில் இடத்தை பராதீனப்படுத்தலாம் என்று நான் கூறியதாக கூறி இருக்கிறார். இப்போதைய முதலமைச்சர் விஜய் அரசில் சபாநாயகர் சட்டசபையில் பைபிளில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். ஏன் குரானில் இருந்து தேவார பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டவில்லை? அப்படியானால் இந்த அரசு ஜனநாயக அரசு இல்லையா? இதை கண்டிக்க துணிச்சல் இல்லாத அரசியல்…

Read More

இந்திய திரையுலகை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்ற இயக்குநர்களில் மிக முக்கியமானவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரது பாகுபலி திரைப்படம் வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அளவில் அதிக வசூலை குவித்ததுடன், பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கி இருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் பாகுபலியை போன்றே பான் இந்தியா திரைப்படமாக உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அத்தோடு இப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு கூத்து பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவரது அடுத்த லட்சியப் படைப்பான வாரணாசி திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சுமார் ரூ.1,400கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் கி.பி.512 முதல் தற்காலம் வரை திரேதா யுகம் முதல் கலியுகம் வரை எனப் பல காலகட்டங்களை இணைக்கும் ஒரு அறிவியல் புனைகதை மற்றும் ஆன்மீக…

Read More

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம் 1 என்ற ராக்கெட்டை தயாரித்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று 11.30 மணிக்கு விண்ணில் எவப்பட இருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியது. தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து 20 நிமிட கவுண்டன் மீண்டும் தொடங்கி, 12.05 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம் 1 நண்பகல் 12.05க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 எடுத்துச்சென்ற செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான ‘காஸ்மிக் புளூம்’ மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு…

Read More

சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து நேற்று நள்ளிரவு மதுரை நோக்கி 20 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் அயன்பேரையூர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது தீடீரென பேருந்து தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதனை அறிந்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்து நிறுத்தியதுடன், பயணிகளை கீழே இறக்கினார். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகுகளும் கட்டுமாவடி, புதுக்குடி, ஆர்.புதுப்பட்டிணம், முத்துக்குடா போன்ற நாட்டுப் படகு மீனவர்களும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி படகுகளை பாதுகாப்பான இடத்தில் கரையேற்றி வைக்கவும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி வைக்குமாறு மீன்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Read More

உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16-வது பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் அப்படியே அணியில் நீடிக்கின்றனர். இந்திய பெண்கள் அணி : கோல் கீப்பர்கள் : 1. சவிதா 2. பிச்சுதேவி கரிபாம் பின்களம் : 1. இஷிகா 2. சுஷிலா சானு 3. லால்தன்ட்லுவாங்கி 4. ஜோதி 5. ஷில்பி தபாஸ் நடுகளம் : 1. நிக்கி பிரதான் 2. சாஷி ராணா 3. சுனேலிதா டாப்போ 4. சலிமா ( கேப்டன் ) 5. நேகா 6. தீபிகா முன்களம் : 1. லால்ரெம்சியாமி 2. ருதுஜா 3.…

Read More

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் அமைந்துள்ள அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவிலில் முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுவதால், ஒவ்வொரு ஆடி வெள்ளியன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பலர் நேர்த்திக்கடனாக கூழ் ஊற்றி வழிபாடு செய்ததுடன், குடும்பத்தினருடன் அம்மனை தரிசித்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் ரூ.200 கட்டணத்தில் சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் என இரண்டு பிரிவுகளில் தரிசன ஏற்பாடுகளை செய்திருந்தது. எனினும், பொது தரிசன வரிசையில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பல மணி நேரமாக காத்திருந்த நிலையில், கட்டண சிறப்பு தரிசன பக்தர்களை மட்டும் தொடர்ந்து விரைவாக அனுமதிப்பதாகக் கூறி…

Read More

சென்னை தலைமை செயலகத்தில் தினமும் காலை, மாலை என இருநேரமும் முதலமைச்சர் வரும் போது மக்கள் அவரை காண வேண்டும் என காத்திருப்பர். பொதுமக்கள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுக்க வந்த புகார்தாரர்கள் என அனைவரும் முதலமைச்சர் செல்லும் நேரத்தை அறிந்து வழியில் நின்று, “தலைவா, தளபதி, முதலமைச்சரே” என வாழ்த்து கோஷங்களை எழுப்புவது வழக்கம். தினமும் பொதுமக்களுக்கு கையசைத்தவாறு செல்லும் முதலமைச்சர், இன்று சென்னையில் திடீரென பெய்த கனமழையிலும், தலையில் பாலித்தீன் கவர்கள், கைக்குட்டைகளுடன் மழையில் நனைந்தவாறு நின்றிருந்த பொதுமக்களை பார்தார். கொட்டும் மழையிலும் பொதுமக்கள் நின்று கொண்டிருப்பதை கண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், வழக்கம் போல் கையசைக்காமல், இரு கரங்களையும் கூப்பி வணக்கம் வைத்தவாறு தலைமைச் செயலகத்தில் இருந்து தனது கான்வாய் வாகனத்தில் புறப்பட்டார். முதலமைச்சரின் இந்த செயலை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி கோஷம் எழுப்பினர். செல்போன்களில் படம் எடுத்து ஆரவாரத்துடன் முதலமைச்சரை…

Read More

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ”உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2- 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும். வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிக அளவில் இருக்கும். சென்னையில் அதிகபட்ச வெயில் 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதன்படி, வரும் 21ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், மாலை, இரவு நேரத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கும் கடலோர மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி அறநிலையத்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாஜிதா தீவிர விசாரணை மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு மோசடிப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பழநி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழநி அடிவாரம் போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி…

Read More