Author: Editor web4

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டின் நலனையும், நம் மாநிலத்திற்குரிய பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் ‘Fair Delimitation’ மேற்கொள்ள வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் தி.மு.க. இப்போதும் உறுதியாக இருக்கிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை. நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. முறையற்ற தொகுதி மறுசீரமைப்பால் இந்திய அளவில் ஏற்படவுள்ள ஆபத்தை முதன்முதலாக எடுத்துரைத்து, அதற்கெதிரான வலுவான கருத்தை உருவாக்கி, ஒருமித்த குரல்களை ஒன்றிணைத்ததே தி.மு.க.வும் எங்கள் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும்தான் என்பதை நாடறியும். சென்னையில்…

Read More

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி பேரணியாக வருகை தந்து கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த வகையில் தூத்துக்குடி அண்ணா நகர் சந்திப்பு முன்பாக இருந்து முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர், அமைதி பேரணியாக வருகை தந்து கலைஞர் அரங்கம் முன்பாக உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன்…

Read More

புதுச்சேரியில் பெய்த கனமழையால் தனியார் நிறுவனத்தின் மதில் சுவர் சாலையோர தள்ளுவண்டி டிபன் கடை மீது இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இரவு 8.30 மணியளவில் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் கனரக ஊர்திகள் முனையம் அருகே செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் சுமார் 25 அடி நீளமும், 15 அடி உயரமும் கொண்ட மதில் சுவர் திடீரென சரிந்து சாலையோரத்தில் இயங்கி வந்த தள்ளுவண்டி டிபன் கடை மீது விழுந்தது. அப்போது அந்த கடையை நடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த கங்காமணி (60), சாமுண்டீஸ்வரி (50), செங்கேணி (40) ஆகிய மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர், மாவட்ட ஆட்சியர்  குலோத்துங்கன் மற்றும்…

Read More

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் இரவு காவலாளியின் ஊதியத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சண்முகசுந்திரத்திற்கு நாள் தோறும் 762 ஊதியமாக வழங்கபட்டு வருகிறது. ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லதா என்பவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களியிடம் அவர்களுக்கு வரும் ஊதியத்தில் இருந்து ஒரு பகுதியை மாதா மாதம் மிரட்டி வாங்கி வந்தாக கூறப்படுகிறது. மேலும் தராதவர்கள் மீது வேலை செய்ய முடியாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு காவலாளி சண்முகசுந்தரத்திடமிருந்து ஊதியத்தில் ஒரு பங்கை…

Read More

19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு நடைப்பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவையில் இருந்து தொடங்கியுள்ளனர். மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் மாநில பொருளாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். ஆறுமுகம் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். நடைப்பயணத்தின் போது பொதுமக்களை நேரில் சந்தித்து, 19 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்கி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர். ஆகஸ்ட் 6 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார நடைப்பயணம் மூலம், மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தெரிவித்தார்.

Read More

இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திரைத்துறை பிரபலங்கள், விஐபிக்கள் கோயிலுக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம். இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலைத் திருக்கோயில்களில், இனிவரும் காலங்களில் பின்வரும் வழிமுறைகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். VIP தரிசனம் :  திரைத்துறை பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் அல்லது VIP-க்கள் திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக இருந்தால், குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாகவே, அவர்கள் வரவிருக்கும் திருக்கோயில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களையும் எனது அலுவலகத்திற்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். செல்போனுக்கு தடை : வருகின்ற 01.09.2026 முதல், அனைத்து முதுநிலைத் திருக்கோயில்களிலும் பக்தர்கள் மொபைல் போன்களை கோயிலுக்குள் கொண்டு செல்லும் நடைமுறை முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும். இதற்காக, பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க லாக்கர் வசதிகள்…

Read More

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணிக்கு சென்று வந்த நிலையில் இரவு தனது நண்பர்கள் வீட்டில் படுத்து உறங்கி உள்ளார். அப்போது நள்ளிரவில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த இரண்டு நண்பர்கள் அஸ்வினின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு,கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொலை செய்யப்பட்ட அஸ்வின் முன்பு செல்ஃபி எடுக்கப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்களை சக நண்பர்களுக்கு பகிர்த்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் அஸ்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறங்கிக் கொண்டிருந்த நண்பனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அந்த…

Read More

’கல்ட் கிளாசிக்’ அந்தஸ்து கிடைக்கும் சில திரைப்படங்கள் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை. கா லப்போக்கில், புதிய ரசிகர்களை ஈர்த்து, வெளியான பல ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் ‘மூடர் கூடம்’. 13 ஆண்டுகளுக்கு முன்பு, வித்தியாசமான நகைச்சுவை, வினோதமான கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த ‘மூடர் கூடம்’, தற்போது புதிய பரிமாணத்துடன் மீண்டும் திரும்பி வருகிறது. படத்தின் தலைப்பும், முதல் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத் இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இது வெறுமனே சீக்வல் படமாக இல்லாமல், முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் தனித்துவமான டார்க் காமெடி மற்றும் கதை சொல்லலை தக்கவைத்துக்கொண்டு, அதிரடி, கற்பனை மற்றும் உலகளாவிய பின்னணியுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல்…

Read More

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சின்ன வேப்பம்பட்டு ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரை வருவாய்த்துறையினர் பிடித்து, 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர். சின்ன வேப்பம்பட்டு ஏரியில் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையில், வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் உரிய அனுமதியின்றி ஏரியில் இருந்து மண் அள்ளி கடத்தப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை கைது செய்து, மேல்நடவடிக்கைக்காக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து…

Read More

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தவெக அரசு, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பட்ஜெட்டை அமைச்சர்கள் மரிய வில்சன் மற்றும் வினோத் ஆகியோர் தாக்கல் செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தவெக பட்ஜெட் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”மடிக்கணினி திட்டம், வீடு கட்டுவதற்கு 5 லட்சமாக நிதி அதிகரித்தது பாராட்டத்தக்கது. தேர்தல் வாக்குறுதிகளை ஆளுங்கட்சி நிறைவேற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அம்மாவால் கொண்டுவரப்பட்டு, திமுகவால் நிறுத்தப்பட்ட திட்டங்களை தற்போது பட்ஜெட்டில் கொண்டு வந்துள்ளனர். மடிக்கணினி திட்டம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக ஆட்சி வந்துள்ளதால் அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். வருகின்ற காலத்தில் வாக்குறுதிகளை ஆளுங்கட்சி நிறைவேற்ற வேண்டும். அத்திக்கடைவு அவிநாசி திட்டம் இரண்டு தமிழக வெற்றி கழகம் செயல்படுத்த வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அதை கிடப்பில்…

Read More