Author: Editor web4
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 69வது லீக் ஆட்டத்தில் கொலம்பியாவும், போர்ச்சுகல் அணியும் இன்று காலை 5 மணிக்கு மியாமியில் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற தவறின. மேலும், இரு அணிகளின் தற்காப்பு ஆட்டம் சிறப்பாக இருந்ததால் முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது. 2-வது பாதியிலும் முதல் கோலை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக முயற்சித்தன. ஆனால், கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் வீரர்களின் உறுதியான தற்காப்பும் கோல் கீப்பர்களின் அபாரமான சேவ்-களால் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், பரபரப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் தலா ஒரு புள்ளியைப் பெற்றன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல்…
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதேவேளை, பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளின் முயற்சியால் அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்க் கட்டணம் விதிக்கப்படும் என்று ஈரான் அறிவித்தது. மேலும், தங்கள் அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடந்ததாக கூறி சரக்கு கப்பல் மீது ஈரான் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. சரக்கு கப்பல் மீது…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட வாளையார், வேலந்தாவளம் மற்றும் வீரப்பனூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் அமைச்சர் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். குறிப்பாக, தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி, கனிம வளங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவை உரிய அனுமதியின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கு கடத்தப்படுவதைத் தடுப்பதில் காவலர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதேபோல், கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு வரப்படுவதையும், மருத்துவக் கழிவுகள் அத்துமீறி தமிழக எல்லைக்குள் கொட்டப்படுவதையும் முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் விஜய் : முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ்…
பெங்களூருவில் தந்தை, தாய் மற்றும் தங்கையை கொலை செய்த இளம்பெண் ஸ்வேதா புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அவரது காதலன் கென்னத்தையும் புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியரான ஸ்வேதா, ஆந்திராவைச் சேர்ந்த கென்னத்தை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வசித்து வந்தனர். இதற்கிடையில், கிரெடிட் கார்டு மூலம் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கிய ஸ்வேதா, அந்த கடனை அடைப்பதற்காக பெற்றோரிடம் சொத்தில் தனது பங்கை கேட்டதாகவும், அவர்கள் மறுத்ததால் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, தனது தாய், தந்தை மற்றும் தங்கையை தனித்தனியாக அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து, காதலன் கென்னத்துடன் இணைந்து மூவரையும் கொலை செய்துவிட்டு இருவரும் தலைமறைவாகினர். இந்த சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில், புதுச்சேரியில் ரோந்து பணியில் இருந்த உருளையன்பேட்டை…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவருக்கும், ஓட்டப்பிடாரம் வட்டம் ஓசனூத்தைச் சேர்ந்தர் சுரேஷ் என்பவருக்கும், கடந்த மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது. இருவரும் மாலை கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர், மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு சென்ற தம்பதியினர், கையில் வைத்திருந்த பழங்களை குரங்குகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஏராளமான குரங்குகள் சூழ்ந்ததால் பயந்துபோன அனிதா, நிலைதடுமாறி மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற கழுகுமலை தீயணைப்பு மீட்புப் படையினர், போலீசாருடன் இணைந்து அனிதாவின் உடலை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கழுகுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில்…
வெனிசுலாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 7.1, 7.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால், வெனிசுலா நகரமே உருக்குலைந்து போயுள்ளது. தலைநகர் கராகசில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாகுவைரா நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் உட்பட நாடு முழுவதையும் புரட்டிப் போட்டுள்ளது. பல அடுக்குமாடி கட்டடங்கள் அடியோடு இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேப் போல நாட்டின் முக்கிய சர்வதேச நிலையமான வெனிசுலாவின் மைகுயெட்டியா விமான நிலையம் சேதமடைந்து மூடப்பட்டுள்ளது. சாலைகள் இரண்டாக பிளந்து, சலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி சேதம் அடைந்தன. பொதுமக்கள் பலர் வீதிகளில் தஞ்சமடைந்தனர். பேரழிவின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அந்நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.…
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் டி பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் துருக்கி அணிகள் மோதின. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன் பயனாக அமெரிக்க வீரர் ஆஸ்டன் ட்ரஸ்டி ஆட்டத்தின் 3வது நிமிடத்திலேயே ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார். 10-வது நிமிடத்தில் துருக்கி வீரர் ஆர்தா குலர் கோல் அடிக்க இரு அணிகளும் சமநிலைக்கு வந்தது. 31-வது நிமிடத்தில் மீண்டும் துருக்கி வீரர் ஓர்குன் ஒரு கோல் அடிக்க, தொடர்ந்து முயன்றும் முதல் பாதியில் அமெரிக்காவால் அடுத்த கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் துருக்கி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய அமெரிக்கா, செபாஸ்டியன் பெர்ஹால்டர் அடித்த கோலின் மூலம் ஆட்டத்தை 2-2…
திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலத்திற்குட்பட்ட 55 வது வார்டு பெரிச்சி பாளையம், வீரமாத்தி அம்மன் கோவில் வீதி, மாகாளியம்மன் கோவில் வீதி பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் 15 நாட்களுக்கு இரு முறை குடிநீர் விநியோகித்து வந்தனர். தற்போது ஒரு மாதங்களாக குடிநீர் முறையாக வருவதில்லை இதனால் அன்றாட பயன்பாட்டிற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. கிணற்று நீரை பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து கேட்டபோது பழைய குடிநீர் குழாய் தண்ணீர் அடைத்து விட்டதாகவும், புதிய குடிநீர் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்ட இணைப்பிற்கு மட்டும் தண்ணீர் திறந்து விடுவதாக தெரிவித்தனர். எங்கள் பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு குழாய் இதுவரை இணைக்கப்படவில்லை எனவே புதிய குடிநீர் இணைப்பில் இணைக்க வேண்டும். இணைக்கும் வரை பழைய…
போதையில் இருந்து இளைஞர்களை திசை திருப்பும் வகையில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் *ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ்* எனும் வாசகத்தை முன்னிறுத்தி மாரத்தான் ஓட்டம் தமிழ் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் கொட்ட போட்டியை ஆட்சியர் சினேகா துவக்கி வைத்தார். இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இளைஞர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று நிறைவு செய்தனர். பங்கேற்றுவதற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா காவல் அரங்கத்தில் நடைபெற்றது இதில் அமைச்சர் தென்னரசு மாவட்ட ஆட்சியர் சினேகா கலந்து கொண்ட வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக பெண்ணுறுவர் பெரியவர் என அமைச்சர் மற்றும் ஆட்சியர் காலில் விழுந்தபோது அலறியடித்தவாறு இருவரும் விலகி இது ஒருபோதும் செய்யக்கூடாது என்ற அனைவருக்கும் பொதுவாக அறிவுரை கூறினார்.