Close Menu
    What's Hot

    ஃபிஃபா அப்டேட்; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அல்ஜீரியா – ஆஸ்திரியா;  முடிவுக்கு வந்தது ஈரானின் கனவு !

    ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; பஹ்ரைன் கடும் கண்டனம்! –  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை

    போலியோ சொட்டு மருந்து முகாம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமைதி ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா – ஈரான் இடையே மோதல்..! மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..!
    Featured

    அமைதி ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா – ஈரான் இடையே மோதல்..! மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..!

    Editor web4By Editor web4June 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 27
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    அதேவேளை, பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளின் முயற்சியால் அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்க் கட்டணம் விதிக்கப்படும் என்று ஈரான் அறிவித்தது. மேலும், தங்கள் அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

    அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடந்ததாக கூறி சரக்கு கப்பல் மீது ஈரான் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் தெற்கு துறைமுக நகரமான தஹிரியொ பெரி நகரில் ஏவுகணை, டிரோன் மற்றும் ஆயுதக்கிடங்குகள், ரேடார் கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

    ஈரான் மீது தொடர்ந்து 2வது நாளாக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் குவாசம் தீவில் உள்ள சிரிக் நகர், ஹர்முஸ்கன் மாகாணத்தில் உள்ள பண்டர் இ லெங்கா ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    America Iran War World News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 மகளிர் உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான்!
    Next Article மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் : வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது அயர்லாந்து
    Editor web4

    Related Posts

    ஃபிஃபா அப்டேட்; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அல்ஜீரியா – ஆஸ்திரியா;  முடிவுக்கு வந்தது ஈரானின் கனவு !

    June 28, 2026

    ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; பஹ்ரைன் கடும் கண்டனம்! –  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை

    June 28, 2026

    போலியோ சொட்டு மருந்து முகாம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஃபிஃபா அப்டேட்; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அல்ஜீரியா – ஆஸ்திரியா;  முடிவுக்கு வந்தது ஈரானின் கனவு !

    ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; பஹ்ரைன் கடும் கண்டனம்! –  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை

    போலியோ சொட்டு மருந்து முகாம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    கபாடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

    FIFA UPDATE;  இங்கிலாந்து வரலாற்றில் அதிக உலகக்கோப்பை கோல்கள் அடித்த வீரராக ஹாரி கேன் சாதனை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.