Author: Editor web4
தமிழ்நாடு முழுவதும் வரும் 28-ம் தேதி சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் 28 ஜூன் 2026 அரசு (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இம்மையங்களில் 52.91 லட்சம் 0–5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஏற்கனவே 0-5 வயதுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். முகாம் நடைபெறும் நாட்களில் முக்கியப் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும்…
சென்னையில் இன்று போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, என் ஆனந்த், வெங்கட்ராமன் மற்றும் தலைமைச் செயலர் சாய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் இறுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேடையில் பேசினார், அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் விளையாட்டு துறை எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும், நம்முடைய ஆட்சியில் விளையாட்டு துறையையும் விளையாட்டு வீரர்களையும் முன்னேற்றுவோம். அனைவரும் நன்றாக விளையாட வேண்டும், விளையாடினால்தான் வலிமையாக இருக்கும். இனிமேல் நாம் விளையாடுவதுதான் நம்முடைய பாடத்திட்டமாகவும் இருக்கும். இந்திய வரலாற்றிலேயே 3 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் யாருமே இல்லை நம்முடைய முதலமைச்சர் தான். காலையில் சீக்கிரமே எழுந்து மக்களோடு மக்களாக மாரத்தான் ஓடி இருக்கிறார், அதுவும் நிறுத்தாமல் ஓடி இருக்கிறார். இனிமேல் விளையாட்டுத்துறையில்…
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ’எப்’ பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் துனிசியா அணிகள் மோதின. இந்திய நேரப்படி காலை 4.30மணிக்கு கான்சாஸ் சிட்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்தது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் துனிசியா வீரர் எல்லீஸ் ஸ்கிரி தவறுதலாக ஓன் கோல் அடித்ததால் நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது. அதன் பின்னர் 7-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் பிரையன் ப்ரோபி கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். இதன்பிறகு இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், முதல் பாதியில் மேலும் கோல் எதுவும் பதிவாகவில்லை. இரண்டாவது பாதியில் துனிசியா அணி தீவிரமாக தாக்குதல் நடத்த தொடங்கியது. அதன் பலனாக 54-வது நிமிடத்தில் ஹசெம் மஸ்தூரி கோல் அடித்து அணிக்கான முதல் கோலை பதிவு செய்து, கோல் வித்தியாசத்தை 2-1 ஆக குறைத்தார். துனிசியாவின் பதிலடிக்கு பின்னர் மீண்டும் தாக்குதல்…
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எஃப் பிரிவில் உள்ள ஜப்பான் – ஸ்வீடன் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி, இந்திய நேரப்படி இன்று காலை 4.30மணிக்கு டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்றது. தொடக்கம் முதலே சமபலத்துடன் இரு அணிகளும் விளையாடின. தாக்குதல் மற்றும் தற்காப்பில் சிறப்பாக இரண்டு அணி வீரர்களும் செயல்பட்டதால், முதல் பாதி முழுவதும் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு ஜப்பான் அணி ஆட்டத்தை தீவிரப்படுத்த, 56-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்வீடன் அணி 62-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தது. பிறகு இரு அணி வீரர்களும் வெற்றிக்கான 2வது கோலை அடிக்க கடுமையாக போராடிய போதும், எந்த அணியாலும் கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டி டிராவில் நிறைவடைந்தது.
ஸ்டாட் run ஸ்டாப் drugs போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். சென்னை, காமராஜர் சாலை, பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் முன்னிட்டு நடைபெறும் “ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026″யை முதலமைச்சர் தொடங்கி வைத்து, கலந்து கொண்டார். சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘Start Run Stop Drugs’ என்ற பெயரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. தமிழக அரசு விளையாட்டை சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவியாகக் கருதி செயல்பட்டு வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான பாதையில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலம்…
திருவாரூர் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், ”நாட்டில் மின்வெட்டுப் பிரச்சனை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை என்பது பிரச்சனைகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லி பேசினார். ஆனால் முதலமைச்சராக உள்ளவர் எங்கே உங்கள் அப்பாவை காணோம் என்றார். அப்பாவை அங்கே தேடாதீர்கள் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். சட்டமன்றத்தில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன் என்பதை உங்களிடத்தில் கூறிக் கொள்கிறேன். கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாக தான் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வராக இருந்தபோது சென்றிருக்கிறேன் நான் ஆய்வு கூட்டம் நடத்தியதை போல யாரும் செய்திருக்க மாட்டார்கள், கோட்டையில்தான்…
சுதந்திரத்திற்கு பிறகு ஒட்டுமொத்த இந்தியாவும் நிலைகுலைந்த நாள் இன்று. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதற்கு பின் பல அரசியல் காரணங்கள் கூறப்படுகிறது. இந்திய வரலாற்றில் இன்றைய நாள் ஒரு கருப்பு தினமாகவே பார்க்கப்படுகிறது. ரேபரேலி தொகுதியில் 1971-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பல குளறுபடிகள் நடந்ததாவும், இந்த வெற்றி செல்லாது எனக் கூறி அவரை எதிர்த்து போட்டியிட்ட சோஷிலிஸ்ட் கட்சியின் ராஜ் நரேன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 1975-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூண்டேறி சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திரா காந்தி மேல்முறையீடு செய்தார். வழக்கு விசாரணை முடிவும் வரை…
சென்னை அமைந்த கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக பாஜக ஊடகப்பிரிவு தலைவர் ரங்கலு குடும்ப விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், ”எனக்கு ரொம்ப வேண்டிப்பட்டவர் செங்கோட்டையன் 1991 ஆம் ஆண்டிலிருந்து அமைச்சராக இருந்தவர் 96 இல் இருந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலையில் அவருடன் தங்கி இருந்தேன். அதன் பின்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நானும் செங்கோட்டையனும் தான் பயணங்களுக்கு ரூட் போட்டு பல இடங்களுக்கு சென்றிருக்கிறோம். அதனால் என்னை பற்றி நன்றாகவே செங்கோட்டையன் அவர்களுக்கு தெரியும் செங்கோட்டையன் பற்றி நன்றாகவே மிக நன்றாகவே எனக்கு தெரியும் அதனால் அவர் அடக்கி வாசித்தால் மிகவும் நல்லது என விமர்சனம் செய்த அவர், ஜெயலலிதா காலத்திலிருந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் ஆஜராகி பல இடத்தில் மாட்டிக் கொண்டவர்தான் செங்கோட்டையன் என கூறிய நயினார், நான் மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பம்…
கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் உள்ள காரைத்திட்டு கிராமத்தை சேர்ந்த 14 வயது தனது வீட்டில் பாத்ரூம் வசதி இல்லாததால் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளியில் மறைவான இடத்திற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது அதே காரைத்திட்டு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன், அஜய் ஆகிய இருவரும் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் சிறுமி கூச்சல் போடாத வகையில் இருவரும் அந்த பள்ளி சிறுமியை மிரட்டி சிறுமியின் வாயில் துணியை திணித்து வலுக்கட்டாயமாக மகேஸ்வரனின் வீட்டு மொட்டை மாடிக்கு தூக்கி சென்றதாக கூறப்படுகிறது. அங்கு இருவரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அவர்களின் இச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து சிறுமி போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அந்த சிறுமியை தலையில் கட்டையால் தாக்கி விட்டு…
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இன்று காலை 3.30மணிக்கு மோதின. இந்தப் போட்டியில் சுமார் 981 நாட்களுக்கு பிறகு பிரேசில் அணிக்காக விளையாட மைதானத்திற்கு வருகை தந்ததார் நட்சத்திர வீரர் நெய்மர். இந்தப் போட்டியின் 7வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் முதல் கோலை அடித்தார். அதன் பின்னர் இரு அணியினரும் கோல் அடிக்க முயன்றும், அதிரடியான ஆட்டத்தில் இரு அணிகளும் முதல் பாதியின் இறுதி வரை கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி முன்னிலை வகித்தது. 2-வது பாதியின் 3வது நிமிடத்தில் வினிசியஸ் மற்றொரு கோலை பதிவு செய்ததால், 2-0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றியை நோக்கி சென்றது. தொடர்ந்து 60-வது நிமிடத்தில் மேத்யூஸ் குன்ஹா 3-வது கோலை அடித்தார். கடைசி வரை முயன்றும் ஸ்காட்லாந்து அணியால்…