Author: Editor web4

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரின் தைரியம், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவையில் அவரின் அசைக்க அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. தனது பொது வாழ்க்கையில், பல ஆண்டுகளாக நாட்டுக்காக அவர் சிறந்த சேவையாற்றி வருகிறார். குறிப்பாக, பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்டோரின் நல்வாழ்க்கைக்காக சேவையாற்றி வருகிறார். அவரது உறுதியான அர்ப்பணிப்பு, இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமளிக்கக் கூடியதாய் இருந்து வருகிறது. அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் தேசத்துக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும். மேலும், ஒடிஸாவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அவரைச் சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதேப்போல திமுக…

Read More

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன், தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனது சொந்த தயாரிப்பில், சமந்தா நடித்துள்ள ’மா இண்டி பங்காரம்’ என்ற திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பி.வி.நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழில் ’எங்கள் தங்கம்’ என்ற பெயரில் விரைவில் வெளியாகவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் அதிரடி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். சண்டை காட்சிகளிலும், வீட்டில் அமைதியான அடக்கமான மருமகளாகவும் மிரட்டியிருக்கிறார் சமந்தா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ’மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் உலகளவில் முதல் நாளிலேயே…

Read More

உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிரது. இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதி முடிவடையும் முன்பே பிரேசில் வீரர் ரபின்ஹாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் ஆட்டத்தை தொடர முடியாமல் வெளியேறினார். அவருக்கு பதிலாக ரயன் களமிறக்கப்பட்டார். இதன்மூலம் ரயன் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அறிமுகமானார். பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் ஏற்கனவே காயம் காரணமாக அணிக்கு திரும்பாத நிலையில், ரபின்ஹாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரபின்ஹாவின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே அவர் அடுத்த போட்டிகளில் விளையாடுவாரா என்பது குறித்த தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Read More

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் மற்றும் ஹைதி அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் பிலடெல்பியாவில் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணியில் 23-வது நிமிடத்தில் மதேயுஸ் குன்ஹா கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசிலுக்கு 36வது நிமிடத்தில் மீண்டும் குன்ஹா கோல் அடித்து அணியின் கணக்கை 2ஆக உயர்த்தினார். முதல் பாதியில், பிரேசில் நட்சத்திர வீரர் வினீசியஸ், ஜூனியர் அணிக்கான 3-வது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கோல் அடித்து போட்டிக்குள் மீண்டும் வர ஹைதி அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. ஆனால் பிரேசில் அணியின் தடுப்பாட்டம் காரணமாக அந்த அணியால் கோல்…

Read More

அமெரிக்கா – ஈரான் இடையேயான போரால், உலக நாடுகள் பல்வேறு விதமான இன்னல்களை சந்தித்தன. குறிப்பாக இந்தாவுக்கு ஹார்மூஸ் நீர்முனை வழியே வர வேண்டிய கச்சா எண்ணெய் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், பெட்ரோல், டீசல் தொடங்கி சிலிண்டர் வரை விலை ஏறியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. 14 அம்சங்கள் இடம் பெற்றுள்ள இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. இதில் ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க கடற்படையின் முற்றுகை திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமைதி ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டதை போல் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அனைத்து கடற்படை முற்றுகையையும் அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு அறிவித்துள்ளது.

Read More

கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி. உலகம் முழுவதும் இவரது ஆட்டத்திற்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தற்போது 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை அளித்து வருகிறார் மெஸ்ஸி. அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்த வெற்றிக்கு பிறகு, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா (FIFA) சமூக வலைதளங்களில் மெஸ்சியை பாராட்டும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரசிகர்களிடையே பிரபலமான “தல” என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. தோனி மற்றும் மெஸ்சி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த போஸ்டரை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். அப்படி தோனிக்கு, மெஸ்ஸிக்குமான ஒற்றுமைகள் என்னென்ன என்று பார்ப்போமா? * அமைதியான…

Read More

அரசு ஊழியர்களுக்கான புதிய இடைக்கால ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்கில் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம்’ கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அதற்கான விரிவான விதிமுறைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் விதிகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை இடைக்கால ஏற்பாடாக மாதாந்திர வாழ்வாதாரத்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அல்லது அதற்குப்பிறகு முறையான பணியில் சேர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (சி.பி.எஸ்.) இடம் பெற்றுள்ள அரசு ஊழியர்கள், கடந்த ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்குப்பிறகு குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்து வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறுபவர்கள்…

Read More

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் எ பிரிவில் இடம்பெற்றுள்ள செக் குடியரசு மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் இன்று மோதின. அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் 6வது நிமிடத்திலேயே செக் குடியரசு அணி தனது முதல் கோலை அடித்தது. செக் குடியரசு அணியின் அலெக்சான்டர் சோஜ்கா வழங்கிய அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி மைக்கேல் சடிலேக் கோலை அடித்தார். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே செக்குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பிடித்தது. ஆட்டத்தின் முதல் பாதி வரை செக்குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் நீடித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின. இதற்கு பலனாக 83-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தன. ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் வெற்றிக்கான கூடுதல் கோலை அடிக்க…

Read More

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 26-வது லீக் சுற்று குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்விட்சர்லாந்து மற்றும் போஸ்னியா அணிகளுக்கு இடையே லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலையும் அடிக்கவில்லை. 2வது பாதியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய ஸ்விட்சர்லாந்து அணி, ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ஜோஹன் மன்சாம்பி கோல் அடித்ஹு அணியை முன்னிலை பெற வைத்தார். அதனை தொடர்ந்து 84வது நிமிடத்தில் ரூபன் வர்காஸ் கோல் அடித்து ஸ்விட்சர்லாந்தை முன்னிலையிலேயே வைத்தார். அடுத்த 6வது நிமிடத்தில் மீண்டும் ஜோஹன் மன்சாம்பி மீண்டும் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய போஸ்னியா அணிக்கு எர்மின் மஹ்மிக் ஒரு கோல் அடித்து முன்னிலை வித்தியாசத்தை…

Read More

உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள கனடா அணியும், கத்தார் அணியும் வான்கூவரில் இன்று மோதின. தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கனடா அணியில் ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் சைல் லார் முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பாதைக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜொனாதன் டேவிட் தனது முதல் கோலை பதிவு செய்தார். இதனையடுத்து கத்தார் அணியின் அனைத்து கோல் முயற்சிகளையும் கனடா வீரர்கள் முறியடித்தனர். முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் மீண்டும் ஜொனாதன் டேவிட் மீண்டும் கொல் அடித்து அசத்தியதன் மூலம் கனடா அணி முதல் பாதி முடிவில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் கனடா அணி முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. 64-வது நிமிடத்தில் நாதன் சலிபா கோல் அடித்து…

Read More