Close Menu
    What's Hot

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசு ஊழியர்களுக்கு..! இடைக்கால ஓய்வூதிய திட்டம்..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!
    தமிழ்நாடு

    அரசு ஊழியர்களுக்கு..! இடைக்கால ஓய்வூதிய திட்டம்..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!

    Editor web4By Editor web4June 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு ஊழியர்களுக்கான புதிய இடைக்கால ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,

    ”தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்கில் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம்’ கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அதற்கான விரிவான விதிமுறைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் விதிகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை இடைக்கால ஏற்பாடாக மாதாந்திர வாழ்வாதாரத்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அல்லது அதற்குப்பிறகு முறையான பணியில் சேர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (சி.பி.எஸ்.) இடம் பெற்றுள்ள அரசு ஊழியர்கள், கடந்த ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்குப்பிறகு குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்து வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறுபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.

    அவர்களுக்கு கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தின் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதிகமோ அந்தத்தொகையுடன் அகவிலைப்படி நிவாரணத்தின் 50 சதவீதம் சேர்த்து மாதந்தோறும் இடைக்காலத் தொகை வழங்கப்படும். அதேபோல கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதிக்கு பிறகு பணியில் இருக்கும்போது மரணமடையும் அரசு ஊழியர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கும் இடைக்கால குடும்பத்தொகை வழங்கப்படும். இறந்த ஊழியரின் கடைசி அடிப்படை ஊதியத்தின் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதிகமோ அந்தத்தொகையுடன் 50 சதவீத அகவிலைப்படி நிவாரணம் சேர்த்து வழங்கப்படும்.

    இடைக்காலத்தொகை பெற்று வந்த ஓய்வூதியர் பின்னர் மரணமடைந்தால், அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால மாதாந்திரத் தொகையின் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த இடைக்காலத் தொகையைப் பெற விரும்பும் ஓய்வூதியர்கள் மற்றும் தகுதியான குடும்ப உறுப்பினர்கள், அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் உரிய உறுதிமொழி படிவத்தில் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

    இடைக்காலத்தொகை ஓய்வு பெற்ற அல்லது மரணமடைந்த தேதிக்கு அடுத்த நாளில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜி7 உச்சிமாநாடு.. ‘அன்புள்ள நண்பர் நரேந்திரா…’!. இந்தியில் கூறிய மக்ரோன்!.
    Next Article ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள்!. பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் வாழ்த்து!.
    Editor web4

    Related Posts

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    August 4, 2026

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    August 4, 2026

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.