Close Menu
    What's Hot

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    சட்டமன்ற நிகழ்வுகளை  முழுமையாக நேரலை  செய்யவேண்டும் –  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

    மீண்டும் தலைதூக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! செந்தில் பாலாஜி இல்லத்தில் குவிந்த போலீஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் இன்று..! தலைவர்கள் வாழ்த்து..!
    இந்தியா

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் இன்று..! தலைவர்கள் வாழ்த்து..!

    Editor web4By Editor web4June 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரின் தைரியம், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவையில் அவரின் அசைக்க அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.

    தனது பொது வாழ்க்கையில், பல ஆண்டுகளாக நாட்டுக்காக அவர் சிறந்த சேவையாற்றி வருகிறார். குறிப்பாக, பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்டோரின் நல்வாழ்க்கைக்காக சேவையாற்றி வருகிறார். அவரது உறுதியான அர்ப்பணிப்பு, இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமளிக்கக் கூடியதாய் இருந்து வருகிறது.

    அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் தேசத்துக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும். மேலும், ஒடிஸாவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அவரைச் சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    அதேப்போல திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ” மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    எளிய தொடக்கத்திலிருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனது வரையிலான உங்கள் பயணம், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறது. உங்கள் பொது வாழ்க்கை பணிவு, விடாமுயற்சி மற்றும் அமைதியான வலிமையால் நிறைந்துள்ளது.

    உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமழைக்கால சோதனை.. சேறும் சகதியுமாக மாறிய ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்..!! அல்லல்படும் மக்கள்..!!
    Next Article வெப்பம் குறையும்; ஈரப்பதம் நிலவும் – சென்னை மக்களுக்கு ஜில்லுனு ஒரு செய்தி
    Editor web4

    Related Posts

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    June 20, 2026

    சட்டமன்ற நிகழ்வுகளை  முழுமையாக நேரலை  செய்யவேண்டும் –  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

    June 20, 2026

    மீண்டும் தலைதூக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! செந்தில் பாலாஜி இல்லத்தில் குவிந்த போலீஸ்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    சட்டமன்ற நிகழ்வுகளை  முழுமையாக நேரலை  செய்யவேண்டும் –  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

    மீண்டும் தலைதூக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! செந்தில் பாலாஜி இல்லத்தில் குவிந்த போலீஸ்..!!

    குடியரசுத் தலைவரின் சேவை மேலும் சிறக்க வேண்டும் ; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

    மறக்க முடியாத ‘ஹோம் கமிங்’!. மீண்டும் டெல்லி அணிக்கே திரும்பும் ரிஷப் பண்ட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.