Author: Editor web4

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் அட்லாண்டா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 3.30மணிக்கு நடைபெற்ற சி பிரிவு லீக் ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஹைதி அணிகள் மோதின. போட்டியின் 10-வது நிமிடத்தில் ஹைதி அணிக்காக, யாசின் பவ்னவ் முதல் கோலை அடித்ததால், 1-0 புள்ளி கணக்கில் ஹைதி அணி முன்னிலை வகித்தது. அதன்பின்னர் மொராக்கோ வீரர் அச்ரப் ஹகீமி 39வது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். இதனால் போட்டி சமனானது. தொடர்ந்து 43-வது நிமிடத்தில் ஹைதியின் வில்சன் இசிடோர் 2-வது கோலை அடிக்க, ஹைதி அணியின் கை ஓங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது பாதியில் அதிரடி காட்டிய மொராக்கோ அணியின் இஸ்மாயில் சாய்பாரி 46வது நிமிடத்திலும், சவுபியான் ரகீமி 78வது நிமிடத்திலும், கெஸ்சிம் யாசின் 89வது நிமிடத்திலும் கோல் அடிக்க, மொராக்கோ அணியின்…

Read More

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரும், அதன் முதல் தலைவருமான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தையொட்டி பா.ஜ‌.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், ”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உறவினர்கள் தான் ஆளுநராக நியமனம் செய்யப்படுகிறார்கள் என்ற அமைச்சர் நிர்மல் குமாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், நிர்மல் குமார் சட்டப்படித்து இருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி உத்தரவைக்கூட நிறைவேற்ற முடியாது என சொன்னால் அவர் அமைச்சராக நீட்டிக்க தகுதியில்லாதவர். தமிழக வெற்றி கழகம் போன்ற சாதாரண கட்சி இல்ல பா.ஜ.க. இனி வரக்கூடிய காலத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் பா.ஜ.க. தான் இந்தியாவை ஆளப்போகிறது. சட்டமன்றத்தில்…

Read More

தமிழ் சினிமாவுல தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் வெற்றிமாறன். உண்மை சம்பவங்களை தழுவி சமுதாயத்தில் நடக்கக் கூடிய அரசியலை தெளிவாக படமாக்கக் கூடிய அவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படி அவரது வட சென்னை திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலரது நடிப்பில் வடசென்னையை சுற்றி நடக்கும் அரசியலை இயல்பாக படமாகி இருந்தார் வெற்றிமாறன். இப்படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வடசென்னை 2 படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். படத்தின் போஸ்டர், ப்ரோமோ என அனைத்தும் செம ஹிட். அப்படி இருக்க, வடசென்னை 2 கதையின்படி, தனுஷின் அன்பு கதாபாத்திரமும், சிம்புவின் அரசன் கதாபாத்திரமும் நேருக்கு நேர் சந்திப்பதற்கான ஒரு வலிமையான சூழல்…

Read More

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்கின. இதில், ஈரானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் வளைகுடா நாடுகள், அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தன. அந்நாடுகளில் அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைக்கப்பட்டன. இதனால், அந்த நாடுகளையும் ஈரான் தாக்கியது. அதில், கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் பகுதியில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்றுமதி முனையம் குண்டுவீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டது இதனால் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன. நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதிப்பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதனால் பதற்றம் சற்று தணிந்தது. இதனை தொடர்ந்து, கத்தார் அரசு தனது மூடிக்கிடந்த எரிவாயு ஏற்றுமதி முனையத்தை மீண்டும் இயக்கி, உற்பத்தியை தொடங்க திட்டமிட்டது. இதற்காக, ஊழியர்கள் மற்றும் என்ஜினீயர்கள் அங்குள்ள பர்சான் எரிவாயு வினியோக ஆலையில் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.…

Read More

வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு, கடந்த 21-ம் தேதி மீண்டும் நாடு முழுவதும் நடைபெற்றது. பீகார் மாநிலத்தில் நீட் மறுதேர்விலும் பல முறைகேடுகளுக்கான முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. பயோமெட்ரிக் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்ட சில ஊழியர்கள், போலி தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களுடன் கூட்டு சேர்ந்து, சரிபார்ப்பு பணியில் அலட்சியமாக இருந்ததாக தெரியவந்தது. பணியில் அலட்சியமாக இருந்ததாக தெரியவந்தது. இத்தகைய 18 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். லக்கிசாரையில், பதிவு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வில் பங்கேற்ற 9 பேர் பிடிபட்டனர். கயா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த அங்கித் ராஜ் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். இதேப் போல் முறைக்கேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் சாட்ஜிபிடி மூலம் உருவாக்கப்பட்ட போலி நீட் வினாத்தாள்களை இன்ஸ்டா வழியாக ரூ.50 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். போலியான…

Read More

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் நேற்று காலை அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. அப்போது இந்த நிறுவனத்தில் வேலைப்பார்த்த சுமார் 60-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு, அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அமோனியா வாயு கசிவை சுவாசித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”12 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாளர்கள் என்று அதிர்ச்சி அடைகிறோம். இந்த வாயுனால் கழுத்து பகுதிகள் உடம்பு பின்புறம் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. தீவிரமான சிகிச்சை அவர்களுக்கு…

Read More

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட மகுடம் என்ற படத்தில் விஷால் நடித்து வந்தார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், இயக்குநர் ரவி, இப்படத்தில் இருந்து விலக, தானே இப்படத்தை இயக்குவதாக அறிவித்தார் விஷால். இது தொடர்பான அறிவிப்பை கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியிட்ட அவர், டத்தின் போஸ்டரில் “கதை – ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – விஷால்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் 17 இரவுகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அந்த கிளைமேக்ஸ் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ ரசிகர்கள்…

Read More

புதுச்சேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சங்கம் சார்பில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. புதுச்சேரி அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மனுக்களை அரசு செயலர் மற்றும் இயக்குனரிடம் வழங்கியபோதும் கடந்த 2 வருடமாக இயக்குனர் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதால் சுகாதாரத்துறை இயக்குனருக்கு எதிராக மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, மருத்துவர்களுக்கு விடுமுறை வழங்காமல் பணிகளை மேற்கொள்ள சொல்வது, மருத்துவ விடுப்பு வழங்க மறுப்பது, மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நடைபெறும் பிரச்சனைகளை இயக்குனர் கண்டு கொள்ளாமல் இருப்பது, மருத்துவர் சங்கம் மூலம் இயக்குனரை பார்த்து கோரிக்கை வைக்க அனுமதி மறுப்பது, முதலமைச்சர்…

Read More

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு வெளியில் இருந்தும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பறெ இயலாது என ஐயுஎம்எல் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்ற ஐயுஎம்எல் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த உடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வதென ஐயுஎம்எல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், “ தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வந்துவிடும் என்று எதிர்பார்த்தோம். 60 ஆண்டு காலமாக திமுக தலைமையிலான கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து பயணித்து வந்தது. ஸ்டாலின்…

Read More

கத்தார் அரச குடும்பம் சார்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, சொகுசு விமானம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. ஏர் போர்ஸ் ஒன் என்ற இந்திய புதுப்பிக்கப்பட்ட போயிங் 747-8 விமானத்தின் தொடக்க நிகழ்ச்சி மேரிலேண்டில் உள்ள கூட்டு ராணுவ தளத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு விமான சேவையை தொடங்கி வைத்து டிரம்ப் பேசினார். அவர் பேசும் போது, விமானத்தின் வடிவம் மற்றும் திறன்கள் ஆகியவற்றை புகழ்ந்து பேசினார். 10 மாதங்கள் என்ற மிக குறுகிய காலத்தில், யாரும் நினைத்து பார்க்க முடியாத வகையில், அது உருமாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுவரை யாரும் பார்க்காத வகையில் சொகுசு வசதிகளை கொண்டு, பறக்கும் ஒரு வெள்ளை மாளிகை போன்று காட்சியளிக்கிறது என்றார். ஆனால், இது ஒரு வகையில் லஞ்சம் என எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. ஆனால், அமெரிக்க பாதுகாப்பு துறை கூறும்போது, இந்த பரிசு விவகாரத்தில், லஞ்சத்திற்கு நிகரான விதிமீறல்கள்…

Read More