Close Menu
    What's Hot

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»கத்தார் வழங்கிய சொகுசு விமானம்..! பறக்கும் வெள்ளை மாளிகை..! டிரம்ப் புகழாரம்..!
    உலகம்

    கத்தார் வழங்கிய சொகுசு விமானம்..! பறக்கும் வெள்ளை மாளிகை..! டிரம்ப் புகழாரம்..!

    Editor web4By Editor web4June 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கத்தார் அரச குடும்பம் சார்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, சொகுசு விமானம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. ஏர் போர்ஸ் ஒன் என்ற இந்திய புதுப்பிக்கப்பட்ட போயிங் 747-8 விமானத்தின் தொடக்க நிகழ்ச்சி மேரிலேண்டில் உள்ள கூட்டு ராணுவ தளத்தில் நடந்தது.

    அதில் கலந்து கொண்டு விமான சேவையை தொடங்கி வைத்து டிரம்ப் பேசினார். அவர் பேசும் போது, விமானத்தின் வடிவம் மற்றும் திறன்கள் ஆகியவற்றை புகழ்ந்து பேசினார். 10 மாதங்கள் என்ற மிக குறுகிய காலத்தில், யாரும் நினைத்து பார்க்க முடியாத வகையில், அது உருமாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இதுவரை யாரும் பார்க்காத வகையில் சொகுசு வசதிகளை கொண்டு, பறக்கும் ஒரு வெள்ளை மாளிகை போன்று காட்சியளிக்கிறது என்றார். ஆனால், இது ஒரு வகையில் லஞ்சம் என எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. ஆனால், அமெரிக்க பாதுகாப்பு துறை கூறும்போது, இந்த பரிசு விவகாரத்தில், லஞ்சத்திற்கு நிகரான விதிமீறல்கள் எதுவும் கிடையாது என்றும் அரசியலமைப்பு அதனை தடை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    இது டிரம்ப்புக்கான பரிசு அல்ல. அமெரிக்காவின் விமான படைக்காக கொடுக்கப்பட்டது. இதன்பின்னர், அதிபர் நூலக அறக்கட்டளைக்கு இந்த விமானம் கொண்டு செல்லப்பட உள்ளது என தெரிவித்தது. இந்த விமானம், பறக்கும் அரண்மனை என அழைக்கப்படுகிறது. ஏனெனில், அந்த அளவுக்கு அதில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    விமானத்தில் ஆடம்பர வசதி கொண்ட படுக்கையறை, ஓய்வறை, கூட்டம் நடைபெறும் அறை, பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட குளியலறைகள் மற்றும் ஒரு பெரிய படிக்கட்டு ஆகியவை உள்ளன. டிரம்புக்காக விமானத்தில் தேவையான சில மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளன. இந்த விமானத்தின் மதிப்பு ரூ.3,413 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

    கடந்த காலத்தில் இதுபற்றி டிரம்ப்பிடம் நிருபர்கள், பதிலுக்கு கத்தார் ஏதேனும் கேட்டார்களா? என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த டிரம்ப், இந்த கேள்வியை என்னிடம் நீங்கள் கேட்பதற்கு வெட்கப்பட வேண்டும்.

    கத்தாரின் ஒரு பெரிய செயல் என்றே நான் நினைக்கிறேன். இதனை வெகுவாக பாராட்டுகிறேன் என்றார். இதுபோன்ற சலுகையை வேண்டாம் என கூறும் நபராக நான் ஒருபோதும் நினைக்கிறேன். இதனை வெகுவாக பாராட்டுகிறேன் என்றார். இருக்கமாட்டேன். இந்த இலவச மற்றும் மிக விலையுயர்ந்த விமானத்தின் மீது எங்களுக்கு விருப்பமில்லை என கூறினால் நான் ஒரு முட்டாளாக இருக்க கூடும். ஆனால், அவர்களின் ஓர் உயர்ந்த எண்ணத்தின் வெளிப்பாடு என்றே இதனை நான் நினைத்தேன் என கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2000 ஆண்டுகள் பழமை..!! வரலாற்றுச் சிறப்புமிக்க தாழிப் பானை கண்டுபிடிப்பு..!!
    Next Article நீட் தேர்வு அச்சத்தால் மாணவிகள் உயிரிழப்பு; மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை  
    Editor web4

    Related Posts

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    June 20, 2026

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    June 20, 2026

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    சட்டமன்ற நிகழ்வுகளை  முழுமையாக நேரலை  செய்யவேண்டும் –  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.