Close Menu
    What's Hot

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீட் தேர்வு அச்சத்தால் மாணவிகள் உயிரிழப்பு; மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை  
    Featured

    நீட் தேர்வு அச்சத்தால் மாணவிகள் உயிரிழப்பு; மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை  

    Editor TN TalksBy Editor TN TalksJune 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 neet ttv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு குளறுபடிகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என மத்திய அரசை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

    வினாத்தாள் கசிவு குறித்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாக கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிப்பதாக டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    மருத்துவராக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை, நீட் தேர்வு பறித்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறமும், தேர்வு நடைமுறைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் குளறுபடிகள், வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் குழப்பங்கள் மறுபுறமும் மாணவ, மாணவியர்களின் மனநிலையை கடுமையாகப் பாதித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன்,

    நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல, எந்தவொரு தேர்வின் முடிவும் ஒருவரின் எதிர்காலத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் முடிவுக்கு கொண்டுவராது என்பதையும் உணர்ந்து மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வை அச்சத்துடனோ பதற்றத்துடனோ அணுகாமல் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு நீட் தேர்வு மாணவர்கள் மீது மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும். எனவே, நீட் தேர்வைச் சுற்றியுள்ள நடைமுறை சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வெளிப்படையான, நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

    Education News NEET Controversy Student Death
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகத்தார் வழங்கிய சொகுசு விமானம்..! பறக்கும் வெள்ளை மாளிகை..! டிரம்ப் புகழாரம்..!
    Next Article மறக்க முடியாத ‘ஹோம் கமிங்’!. மீண்டும் டெல்லி அணிக்கே திரும்பும் ரிஷப் பண்ட்!
    Editor TN Talks

    Related Posts

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    June 20, 2026

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    June 20, 2026

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    சட்டமன்ற நிகழ்வுகளை  முழுமையாக நேரலை  செய்யவேண்டும் –  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.