Author: Editor web4

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திருமணமாகி குழந்தைகள் வந்த பிறகும் கூட, சினிமாவில் கோலோச்சி நிற்கிறார் நயன்தாரா. அதேப் போல சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரையும் பெற்றிருந்தார் நயன் தாரா. தற்போது அந்த பெருமையை ஓவர் டேக் செய்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட திரைப்படங்கள் மூலம் தனது திரையுலகில் பயணத்தை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார். பான் – இந்தியா கிரஷ் என அன்போடு அழைக்கப்படும் ராஷ்மிகா, திருமணத்திற்கு பிறகும் கூட பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர்…

Read More

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பொது மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சை பிரிவும் இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மகப்பேறு சிகிச்சை பிரிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர் ஒருவர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிகப்படும் சிகிச்சைக்கான ஊசி மூலம் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், மருந்துகள், உட்கட்டமைப்புகள் சரியானதாக இல்லை என மக்கள் புலம்பும் நிலையில், இப்படி அலட்சியமாக தூய்மை பணியாளர் ஊசிகளை கையாள்வது மக்களின் உயிருடன் விளையாடும் செயலாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Read More

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவைகளில் ஒன்றாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னனி வீர, வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்று தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் சபலென்காவும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா, 7-5, 6-3, என்ற செட் கணக்கில் ஒசாகாவை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் சபலென்கா, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதவுள்ளார்.

Read More

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்று வரையிலும் சினிமாவில் காலோச்சி நிற்பவர். சமீபத்தில் இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த கருப்பு திரைப்படம் ரூ.180கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தொடர் ஹிட்களை கொடுத்து வரும் திரிஷா அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். தற்போதைய முதலமைச்சர் விஜய்யுடன் அவர் அடிக்கடி பொது இடங்களுக்கு சென்று வருவதால், அவரை நெட்டிசன்கள் பல கேலி, கிண்டல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர். குறிப்பாக விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது திரிஷா கலந்து கொண்டு கண்ணீர் வடித்தது, மனைவியுடன் விவாகரத்து வழக்கு சென்று கொண்டிருப்பதாக செய்தி வெளியானதும், திருமணம் ஒன்றிற்கு இருவரும் சேர்ந்து சென்றது, சமீபத்தில் அஜித்குமாரின் தாயார் இறப்பிற்கு இருவரும் சேர்ந்து சென்றது என பல விஷயங்களில் திரிஷாவை பலரும் பலவிதமாக…

Read More