Author: Editor web4

நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. பொங்கலை ஒட்டி இந்தாண்டு ஜனவரி மாதமே இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சென்சார் பிரச்னையில் படம் சிக்கியது. சென்சார் சான்றிதழ் பெறாததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இன்று வரையில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. சென்சார் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இதற்கிடையில் இப்படம் இணையதிதில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் இந்தப் படத்தை இணையம் வழியே பார்த்து அதற்கான ரிவியூவை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்தப் படம் ஓடிடியில் பெரும் தொகைக்கு விற்பனையானது. ஆனால் படம் எப்போது வெளியாகும் என்பதே தெரியாத நிலையில், ஓடிடி உரிமையையும் வாங்கிய நிறுவனம் ரத்து செய்துவிட்டது.…

Read More

14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 வீர, வீராங்கனைகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். கடந்த 4-ம் தேதி நடந்த இப்போட்டியின் ஓபன் பிரிவில் தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சக நாட்டவரும், உலக சாம்பியனுமான குகேஸை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா, 34-வது நகர்த்தலில் குகேஸை மடக்கினார். ற்கனவே 5-வது ரவுண்டில் குகேசிடம் தோற்றிருந்த பிரக்ஞானந்தா அதற்கு பதிலடி கொடுத்தார். சரியான நேரத்தில் எழுச்சி பெற்ற அவர், கடைசி 3 ஆட்டங்களில் கிளா சிக்கல் வடிவிலேயே வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளை வசப்படுத்தி ஏற்றம் கண்டார். மற்ற இரு ஆட்டங்களும், கிளாசிக்கலில் டிரா ஆனதால், ஆர்மகேட்டன் முறையில் முடிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவின் வெஸிலி சோ, நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனையும், பிரான்சின் அலிரெஜா பிரோஸ்ஜா, ஜெர்மனியின் வின்செண்ட் கீமரையும் வென்றார். 9வது சுற்று…

Read More

அய்யலூர் அருகே திருவிழாவில் கழுகு மரம் ஏறிய இளைஞர் 60 அடி உயரத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது கோம்பை மலை கிராமம் இப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 3-ம் நாளான நேற்று கழு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது இந்த கழு மரம் கழு ஏறும் நிகழ்வில் 60 அடி உயரமுள்ள இரண்டு கழு மரங்கள் அமைக்கப்பட்டு ஊரில் உள்ள இளைஞர்கள் இரண்டு கழு மரத்திலும் போட்டி போட்டுக் கொண்டு ஏறினர். அப்போது கழுமரத்தின் 60 அடி உச்சிக்கு சென்ற சின்ராஜ் என்ற இளைஞர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்தவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பிடிக்கும் போது பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் 60 அடி…

Read More

தமிழக ஆளுநர் திரு.ராஜேந்திர அர்லேகர் தனது மனைவியுடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் , ஏகாம்பரநாதர் கோயில்களில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார். தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், தனது மனைவியுடன் ஒரு நாள் பயணமாக நேற்று மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் வருகை புரிந்தார். சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு காஞ்சி காமாட்சி அம்மன் குங்குமம் மற்றும் சிறப்பு பிரசாதங்கள் புகைப்படங்கள் ஆகியவை கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார். திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நிலா திங்கள் துண்ட பெருமாளை தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மஹாஸ்வாமி பிருந்தாவனத்தில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். அதன்பின் விஜேயந்திர சரஸ்வதி சாமிகள், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி…

Read More

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், இரண்டு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப் போல, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நாஐ மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வெப்பநிலை படிப்படியாக குறையக் கூடும் எனவும், அரபிக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Read More

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ’சாரா எர்ரானி – ஆண்ட்ரியா வவசோரி’ கூட்டணி 4-6, 6-3 (10-4) என்ற செட் கணக்கில் கேப்ரியலா டாப்ரோஸ்கி ( கனடா ) – இவான் கிங் (அமெரிக்கா) இணையை தோற்கடித்து பட்டத்தை தக்கவைத்தது. அவர்களுக்கு ரூ.1.35 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மூத்த வீராங்கனை சாரா எர்ரானி கிராண்ட்ஸ்லாமில் வென்ற 10-வது இரட்டையர் பட்டம் இதுவாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் நம்பர் 8 வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக்கை 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

Read More

திருச்சி தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாநகர் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்களுக்கு இன்று மதியம் வெடிகுண்டு மிரட்டல் குறுஞ்செய்தி மெயில் மூலம் வந்துள்ளது. அந்த மெயிலில் பாஸ்போர்ட் ஆபீஸ் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்களில் ஆர் டி எக்ஸ் பாம் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து திருச்சி மாநகர காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் திருச்சி மாவட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் தீவிரமாக சோதனை செய்தனர். திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் வேலுச்சாமி உதவி ஆய்வாளர்கள் அருளானந்தம் ரமேஷ் அன்பழகன் உள்ளிட்டோர் தலைமையில் அங்குலம் அங்குலமாக சோதனை நடைபெற்றது. பாம் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது இதில்…

Read More

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் 34 ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பல மாவட்டங்களில் பல மணி நேரம் மின்வெட்டு இரவு நேரங்களில் ஈடுபடுவதால், மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்துறை சார்ந்த ஆய்வில் ஈடுபட்டார். கடந்த மாதம் மே 16, 17 ஆகிய தேதிகளில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் குறைவான ஊழியர்கள் இருந்த சமயத்தில் சுமார் 10 ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த ஹார்டு டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல் டெண்டர் தொடர்பான தகவல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ்…

Read More

மருத்துவ உயர் படிப்பில் 151 இடங்களை மத்திய அரசிடம் சரண்டர் செய்யக்கூடாது என்று எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ”உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும். கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள்…

Read More

குன்னூர் நகர மன்ற கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் படத்தின் அருகே திமுகவினர் ஸ்டாலின் படத்தையும் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி படத்தையும் மாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த 30 வார்டுகளில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. தலைவர் சுசிலா, மற்றும் துணை தலைவர் வாசிம் ராஜா ஆணையாளர் கிருஷ்ணா ராம் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் துவங்கிய போது தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தலைவரும் துணை தலைவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து கூட்டத்தை துவங்கினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் திமுக கவுன்சிலர்கள் தவெக முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் அருகே திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு…

Read More