Close Menu
    What's Hot

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»நார்வே செஸ் போட்டி : குகேஸை வீழ்த்திய பிரக்ஞானந்தா..!
    விளையாட்டு

    நார்வே செஸ் போட்டி : குகேஸை வீழ்த்திய பிரக்ஞானந்தா..!

    Editor web4By Editor web4June 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 வீர, வீராங்கனைகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். கடந்த 4-ம் தேதி நடந்த இப்போட்டியின் ஓபன் பிரிவில் தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சக நாட்டவரும், உலக சாம்பியனுமான குகேஸை எதிர்கொண்டார்.

    கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா, 34-வது நகர்த்தலில் குகேஸை மடக்கினார். ற்கனவே 5-வது ரவுண்டில் குகேசிடம் தோற்றிருந்த பிரக்ஞானந்தா அதற்கு பதிலடி கொடுத்தார். சரியான நேரத்தில் எழுச்சி பெற்ற அவர், கடைசி 3 ஆட்டங்களில் கிளா சிக்கல் வடிவிலேயே வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளை வசப்படுத்தி ஏற்றம் கண்டார்.

    மற்ற இரு ஆட்டங்களும், கிளாசிக்கலில் டிரா ஆனதால், ஆர்மகேட்டன் முறையில் முடிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவின் வெஸிலி சோ, நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனையும், பிரான்சின் அலிரெஜா பிரோஸ்ஜா, ஜெர்மனியின் வின்செண்ட் கீமரையும் வென்றார்.

    9வது சுற்று முடிவில் வெஸ்லி சோ 15½ புள்ளிகளுடன் முதலிடத்திலும், பிரக்ஞானந்தா 15 புள்ளியுடன் 2-வது இடத்திலும், அலிரெஜா 14½ புள்ளி களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 10-வது மற்றும் கடைசி ரவுண்ட் முடிவில் இவர்களில் பட்டம் வெல்லப்போவது யார் என்பது தெரிய வரும். கடைசி ரவுண்டில் பிரக்ஞானந்தா, ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமருடன் மோதுகிறார். வாகை சூடுவதற்கு கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதே சமயம் ‘நம்பர் ஒன்’ வீரரான உள்ளூர் நாயகன் கார்ல்சென் (10 புள்ளி) பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை இழந்தார்.

    பெண்கள் பிரிவில் நடந்த 9-வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை பிபி சரா அசபயேவா, நடப்பு சாம்பியனான அன்னா முசிசுக்குடன் (உக்ரைன் ) மோதினார். 22-வது காய் நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட ஆர்மகேட்டன் முறையில் முசிசுக் வெற்றி பெற்று 1½ புள்ளிகளை பெற்றார். தோல்வி அடைந்த அசபயேவா வுககு ஒரு புள்ளி கிடைத்தது. அதுவே அவர், பட்டத்தை உறுதி செய்வ தற்கும் போதுமானதாக இருந்தது. 9-வது சுற்று நிறைவில் அசபயேவா 16½ புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

    2-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜூ ஜினெர் (13 புள்ளி) கடைசி ரவுண்டில் வெற்றி பெற்றாலும் அவரை முந்த முடியாது. மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி இருவரும் தோல்வியை தழுவினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிண்டுக்கல் : கழுகு மரம் ஏறிய இளைஞர் கீழே விழுந்ததால் பரபரப்பு..! கோயில் திருவிழாவில் ஏற்பட்ட விபரீதம்..!
    Next Article தமிழ்மொழி செம்மொழியாய் அறிவிக்கப்பட்ட தினம் இன்று!. சுவாரஸிய வரலாறு!.
    Editor web4

    Related Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    June 8, 2026

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    June 8, 2026

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.