Author: Editor web4

பொன்னேரி அருகே இருவேறு கிராமங்களில் 2வீடுகளின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் திருடப்பட்ட நிலையில், காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆசானபூதூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் குழந்தைகளின் கல்விக்காக குடும்பத்துடன் பொன்னேரியில் வசித்து வருகிறார். காலையில் தினந்தோறும் ஆசான பூதூர் கிராமத்திற்கு சென்று விவசாய பணிகளை முடித்துவிட்டு வீட்டை பூட்டிக் கொண்டு மீண்டும் பொன்னேரிக்கு திரும்பி விடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார். இன்று காலை இவரது வீடு திறந்து இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 2 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த 15000 ரொக்க பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதே போல அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வரும் சரண்யா…

Read More

சென்னை கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள இருவர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். விழுப்புரத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்துவந்த இலங்கை தமிழ் பெண்ணான யான்சியும், சென்னையில் உள்ள அவரது தோழிகளும் கடந்த மே 30ஆம் தேதி, கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உள்ள மதுபான பாருக்கு சென்றுள்ளனர். அங்கு நடனமாடும் போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்களை, பவுன்சர்கள் வெளியேற்றினர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தில் தோழியுடன் சென்ற யான்சி மீது காரை மோதியுள்ளனர். தூக்கி வீசப்பட்ட யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஃபவுசியாவும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போலீசார் தியாகராஜன், பாரதி உள்ளிட்ட 7 பேரை ஜூன் 4ஆம் தேதி கைது செய்துள்ளனர். கைது…

Read More

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சுமார் 3.1 கிமீ உயரத்தில் வடக்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வடக்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. 12-06-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை மற்றும்…

Read More

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் Green power and renewable energy sector 25வது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அவர், “நமது தமிழக வெற்றி கழகத்தின் அரசு அமைந்து வெறும் ஒரு மாத காலமே ஆகியுள்ளது நான் அமைச்சராக பொறுப்பேற்ற மூன்று வாரங்கள் பணி முடிவுபெற்றுள்ளது , இந்த துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு செய்யப்பட்ட ஆய்வுகளில் கடந்த அரசு கொண்டு வந்த திட்டங்களில் பல்வேறு விரிசல்கள் உள்ளது என தெரியவந்தது , சூரிய ஒளி மின்சாரம் தயாரித்தல் , விநியோகித்தால் ஆகிய பல்வேறு துறைகளில் நான் அமைச்சரவை பொறுப்பு பெற்றவுடன் அனைத்து இடங்களிலும் உள்ள திட்டங்களை ஆய்வு செய்துள்ளோம் , ஆய்வுக்கு பிறகு இந்திய முழுவதும் அனைத்து திட்டங்களும் சீரமைக்கபட வேண்டிய தேவை உள்ளது.…

Read More

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையிலும் கூட அடிக்கடி அறிவிகப்படாத மின்வெட்டு ஏற்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மின்வெட்டு மணிக்கணக்கில் ஏற்படுவதால், தூக்கமின்றி மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின்வாரிய அலுவலகத்தில் பின்புறம் உள்ள மின்சார கேபிள் பெட்டியிலிருந்து 14 பியூஸ் கேரியர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஆவடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், விசாரணையை தொடங்கிய போலீசார், அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், வினித்குமார் ஆகிய 2 பேர் திருட்டியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் 17 பியூஸ் கேரியர்களை செங்குன்றம் அருகே ரூ.1,500க்கு விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட…

Read More

முல்லன்பூரில் நடைபெற்ற ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 3வது நாளில் வெற்றியை உறுதி செய்தது இந்திய அணி. முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழக்குப்பு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் களம்கண்ட ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 152 ரன்களில் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் பெரும் பின்னடைவை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி, பாலோ-ஆன் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 2வது இன்னிங்ஸிலும், அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய 12வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தொடர்ந்து 15 போட்டிகளில் தோல்வியின்றி விளையாடிய சாதனையையும் இந்தியா பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அணிக்கு…

Read More

கடலூர் மாவட்டத்தில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தற்போது மீன்பிடித் தடைக்காலம் நிலவுவதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சி.புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ், மனோகர் மற்றும் புதுவை மாநிலத்தை செரெந்த நாகவேல் ஆகியோர் கடந்த 2-ம் தேதி மதியம் 2.30மணியளவில் புதுப்பேட்டையை சேர்ந்த வீரவேல் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். மறுநாளே அவர்கள் கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரைக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், படகில் தேடிச் சென்றும் அவர்களை கண்டறியமுடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மீனவ கிராம மக்கள் அன்னங்கோவில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மீனவதுறை அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடலோர காவல் படை மூலம் மாயமானவர்களை தேடி வருவதாகவும், தெரிவித்தனர். விரைவில் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

கோவை சரவணம்பட்டியில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், பள்ளிப் பேருந்துகள் உள்ளே வருவதற்கு அப்பார்ட்மெண்ட் சங்க நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்ததைக் கண்டித்து, அங்கு வசிக்கும் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் குதித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ​சரவணம்பட்டி எஸ்.என்.எஸ் கல்லூரிச் சாலை அருகே உள்ள அந்தப் பிரம்மாண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள வீடுகளில் வசிக்கும் நூற்றுக் கணக்கான சிறுவர், சிறுமியர்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணிப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களைக் காலையில் அழைத்துச் செல்லவும், மாலையில் கொண்டு வந்து விடவும் அந்தந்தப் பள்ளிகளின் பேருந்துகள் மற்றும் வேன்கள் தினசரி அப்பார்ட்மெண்ட் வளாகத்தின் உள்ளே வந்து செல்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் நலச் சங்க (Apartment Association) நிர்வாகத்தினர் ஒரு விசித்திரமான புதிய விதியை அறிவித்தனர்.…

Read More

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் இருந்து தலை இல்லாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று காலை 8 மணியளவில் செண்ட்ரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்திற்கு மின்சார ரயில்கள் செல்லும் 4-வது நடைமேடையில் இருந்து பெரம்பூர் ஜமாலியாவுக்கு இறங்கி செல்லும் படிக்கட்டு அருகே நீலநிற டிராலி சூட்கேஸ் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. ரெயில் பயணிகளுக்கு இடையூறாக, நீண்டநேரம் கேட்பாரற்ற நிலையில் இருந்த அந்த சூட்கேஸ் பற்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் பயணிகள் சிலர் தெரிவித்தனர். உடனடியாக ரெயில்வே போலீசார், ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் சூட்கேஸாக இருக்கும் என எண்ணி எடுத்து வைக்க முயன்றனர். ஆனால் அந்த சூட்கேஸ், வழக்கத்துக்கு மாறாக அதிக பாரமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த சூட்கேசை திறந்து பார்த்த போது, அதில் தலை, கை,…

Read More

கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள “பாலன் தி பாய்” ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவின் Marche du Film-ல் வெற்றிகரமான திரையிடலுக்குப் பிறகு, “பாலன் தி பாய்” படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் அறிவிப்பு மற்றும் முதல் போஸ்டர் வெளியீட்டில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டிரெய்லர், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களால் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. அஜய் தேவ்கன் (இந்தி), சூர்யா சிவகுமார் (தமிழ்), நாக சைதன்யா (தெலுங்கு), ராஜ் பி.ஷெட்டி (கன்னடம்) ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தப் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்து, படத்திற்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். டிரெய்லர், அடையாளம், பொறுப்புணர்வு மற்றும் உயிர்பிழைப்பு ஆகிய ஆழமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட உணர்ச்சிபூர்வமான…

Read More