Close Menu
    What's Hot

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கோவை : பள்ளிப் பேருந்துகளுக்கு அப்பார்ட்மெண்ட் நிர்வாகம் தடை..! குடியிருப்பு வாசிகள் போராட்டம்..!
    Featured

    கோவை : பள்ளிப் பேருந்துகளுக்கு அப்பார்ட்மெண்ட் நிர்வாகம் தடை..! குடியிருப்பு வாசிகள் போராட்டம்..!

    Editor web4By Editor web4June 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை சரவணம்பட்டியில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், பள்ளிப் பேருந்துகள் உள்ளே வருவதற்கு அப்பார்ட்மெண்ட் சங்க நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்ததைக் கண்டித்து, அங்கு வசிக்கும் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் குதித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ​சரவணம்பட்டி எஸ்.என்.எஸ் கல்லூரிச் சாலை அருகே உள்ள அந்தப் பிரம்மாண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள வீடுகளில் வசிக்கும் நூற்றுக் கணக்கான சிறுவர், சிறுமியர்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணிப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    இவர்களைக் காலையில் அழைத்துச் செல்லவும், மாலையில் கொண்டு வந்து விடவும் அந்தந்தப் பள்ளிகளின் பேருந்துகள் மற்றும் வேன்கள் தினசரி அப்பார்ட்மெண்ட் வளாகத்தின் உள்ளே வந்து செல்வது வழக்கமாக இருந்தது.
    இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் நலச் சங்க (Apartment Association) நிர்வாகத்தினர் ஒரு விசித்திரமான புதிய விதியை அறிவித்தனர்.

    அதில், “கனரகப் பள்ளிப் பேருந்துகள் மற்றும் வேன்கள் தினசரி அப்பார்ட்மெண்ட் வளாகத்தின் உள்ளே வந்து செல்வதால், வளாகத்திற்குள் உள்ள தார்ச் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் (Paver Block) கற்கள் அடியோடு சேதம் அடைகின்றன. எனவே, இனிமேல் எந்தவொரு பள்ளிப் பேருந்தும், வேனும் அப்பார்ட்மெண்ட் பிரதான கேட்டைத் தாண்டி உள்ளே வரக் கூடாது,” என அதிரடியாகத் தடை விதித்து உள்ளனர்.

    ​சங்க நிர்வாகத்தின் இந்தத் தன்னிச்சையான முடிவால், பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் அப்பார்ட்மெண்டிற்கு வெளியே சாலையிலேயே நிறுத்தப்படும் சூழல் உருவானது. இந்த நாள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம்​ சென்று பேருந்து ஏறிச் செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது. நிர்வாகத்தின் இந்த அராஜகப் போக்கைக் கண்டு ஆத்திரம் அடைந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் பெற்றோர், அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர்.

    தங்களது பள்ளிச் செல்லும் சிறு குழந்தைகளையும் கைகளில் பிடித்துக் கொண்டு, சங்க நிர்வாகிகளுக்கு எதிராகப் பெற்றோர் கொதித்தெழுந்து சரமாரியாகக் கேள்விகளை அடுக்கினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமரணத்தை வென்ற நம்பிக்கை ; உதாரணமாகி இருக்கும் எவரெஸ்ட் வழிகாட்டி!
    Next Article இந்திய அணியில் புதிய சுழல் பந்துவீச்சாளர் அறிமுகம்!. யார் இந்த மானவ் சுதர்?
    Editor web4

    Related Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    June 8, 2026

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    June 8, 2026

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.