Author: Editor web4

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், சினிமாவில் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி விஜய்சேதுபதியாக அசத்தியவர், ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். ஆகையால் அவரது பெயர் மாஸ்டர் மகேந்திரன் என அழைக்கப்படுகிறார். அன்மையில் வெளியான 29 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மகேந்திரன். இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. பட புரோமோஷனுக்காக கொடுக்கப்படும் பேட்டிகளின் போது அவர் பேசும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தும். அவ்வாறு சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியின் போது, மின்வெட்டு குறித்து பேசியிருந்தார். சில மாதங்கள் பொறுத்துக் கொள்ள முடியாதா?”, “தேவைப்பட்டால் என் வீட்டு மின்சாரத்தைக் கூட எடுத்துக் கொள்ளுங்கள்” என பேசியிருந்தது பலரது எதிர்ப்பை சம்பாதித்தது. மகேந்திரனின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அவர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் குறுகிய…

Read More

ராயபுரம் தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு, கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், ராஜினாமா செய்த அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சென்னை இராயபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.வி.விஜய் தாமு, திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சுபேர் கானை விட 14,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமுவின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சுபேர் கான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதேபோல கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தளவாய் சுந்தரம், திமுக வேட்பாளர் ஆர்.மகேஷை விட, 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தளவாய் சுந்தரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் ஆர்.மகேஷ் தேர்தல் வழக்கு தாக்கல்…

Read More

டெல்லி த்ரிலோக்புரி பகுதியில் வீடற்று, சாலையோரம் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பார்வையற்ற பெண்மணி கடந்த வியாழக் கிழமை அன்று கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் அத்துமீறல்கள் நடந்தது உறுதி செய்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதே பகுதியை சேர்ந்த 28 வயதான விஷ்ணு என்ற இளைஞர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மூதாட்டியை தர தரவென இழுத்து வந்து, கல்லை கொண்டு தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார். மூதாட்டி மயக்க நிலையில் இருந்தப் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து தீவிர தேடுதலுக்கு பிறகு விஷ்ணுவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் தீவிர போதைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர் மீது…

Read More

காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் கேபிஒய் பாலா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இப்படத்தில் பவிஷ் நாராயண், நாகா துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம்…

Read More

திருச்சியில் மது போதையில் தவெக நிர்வாகியின் மனைவிக்கு தவெக நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்த நிலையில் காவல் நிலையத்தில் குவிந்த கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தில் உள்ள நிர்வாகிகள் ஒரு சிலர் கரிகாலன் அணி என்றும் ஒரு சிலர் மற்ற நிர்வாகிகளை சுட்டிக்காட்டி பல அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வேதாத்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலு, இவருடைய மனைவி பவானி. இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நேற்று இரவு சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் மண்டபத்தில் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு…

Read More

இயக்குநர் மாலிக் ராம் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர். ‘சூப்பர் சுப்பு’ ஜூலை 2 அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’, சுப்பிரமணியம் சில்லுகுரி ராவ் (சுப்பு) என்ற நேர்மையான இளைஞரின் வாழ்க்கையை காட்டுகிறது. மாகிபூர் என்ற கிராமத்தில் செக்ஸ் எஜூகேஷன் ஆஃபிசராக வேலை கிடைத்ததும் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அனுபவமின்றி பாடத்திட்டத்தையும், கிராம மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற சூழலில் அங்கு செல்கிறார் சுப்பு. ஆனால் ஆர்வம், குழப்பம் மற்றும் நான்கு சுவர்களுக்குள் உரையாடல் என சிக்கிக் கொள்கிறார். சுப்புவுக்கு இந்த குறுகிய காலப் பணி, வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறுகிறது. ஆனால் அவர் தன்னிடமே ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அதாவது, இந்த புதிய சூழ்நிலையில் வாழ்வதற்காக தனது காதல், குடும்பம் மற்றும் தொழிலை ஆபத்தில்…

Read More

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 2 மாத பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்காக பெற்ற தாயே விற்றதும், சினிமா பாணியில் கைமாறிய குழந்தையை நாமக்கலில் போலீசார் மீட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு , தரைகாடு பகுதியை சேர்ந்தவர் மாற்றுத் திறனாளியான ஷபீர். இவரது மனைவி ஜபீனா திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் ஜபீனாவை ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு காயிதேமில்லத் தெருவை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான அயூப் மகன் ரஷித் அஹ்மத் என்பவர் அணுகி, நீயே பிச்சை எடுத்து கஷ்டப்பட்டு வருகிறாய். அதனால் உன்னுடைய குழந்தையை என்னிடம் கொடுத்து விடு அதற்கு உனக்கு பணம் தருகிறேன்’ எனக்கூறி சம்மதிக்க வைத்துள்ளார். பின்னர், கடந்த மாதம் 20ம் தேதி நரியம்பட்டில் ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அந்த பெண்…

Read More

தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சங்கீதா லண்டனுக்கே சென்று தனது பெற்றோருடன் செட்டில் ஆகி விட்டதாகவும், குழந்தைகளும் அங்கேயே அவருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது வெறும் வதந்தி எனக் கூறப்பட்டாலும் கூட, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த மனுவில் தனது கணவருக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தேர்தலுக்கு முன்பாக இந்த விவகாரம் பொது வெளியில் வெளியானதால், பல காரசார விவாதங்கள் பறந்தன. இருப்பினும் தேர்தலில் அவர் வெற்றி பெற்று முதலமைச்சரும் ஆகிவிட்டார். இந்த நிலையில், சங்கீதா தொடர்ந்திருந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, விஜய் தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணை ஜூன் 15…

Read More

கடலில் மீன்வளத்தை பெருக்க, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் கோடைகாலத்தில், நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஏப்.15 முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலான 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடைக்காலத்தில் தங்கள் படகுகள், வலைகளைச் சீரமைக்கும் பணிகள், படகுகள் மற்றும் இயந்திரங்களில் பழுது நீக்குதல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர். அந்த வகையில், புதுச்சேரி அடுத்த காரைக்காலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட…

Read More

உத்தரப்பிரதேசத்தில் காதல் திருமணம் செய்த மகளை காவல்நிலையத்தில் வைத்தே தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண் ஷிவானி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த லலித் வர்மா என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் அப்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த மே மாதம் 18-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் தங்களின் திருமணத்தை முறைப்படி பதிவும் செய்து கொண்டனர். இதற்கிடையில் ஷிவானியை காணவில்லை என்றும், லலித் வருமா அவரை கடத்திச் சென்று விட்டதாகவும் ஷிவானியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இருவரும் அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை அவர்களை கைது செய்து…

Read More