தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சங்கீதா லண்டனுக்கே சென்று தனது பெற்றோருடன் செட்டில் ஆகி விட்டதாகவும், குழந்தைகளும் அங்கேயே அவருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது வெறும் வதந்தி எனக் கூறப்பட்டாலும் கூட, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த மனுவில் தனது கணவருக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தலுக்கு முன்பாக இந்த விவகாரம் பொது வெளியில் வெளியானதால், பல காரசார விவாதங்கள் பறந்தன. இருப்பினும் தேர்தலில் அவர் வெற்றி பெற்று முதலமைச்சரும் ஆகிவிட்டார். இந்த நிலையில், சங்கீதா தொடர்ந்திருந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, விஜய் தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி, சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு நாளை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இரு தரப்பிலும் நாளை வழக்கறிஞர்கள் ஆஜராகலாம் எனக் கூறப்படுகிறது.
