Author: Editor web4
ஒரு கட்சிக்கும், மற்றொரு கட்சிக்கும் இடையே கொள்கை ரீதியாக மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஒரு தலைவர் மற்றொரு அரசியல் தலைவரை பொதுவெளியில் விமர்சிப்பதை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். ஆனால் நேரில் ஒருவரை ஒருவர்பார்த்துக் கொள்ளும் போது ஒன்றுமே நடக்காதது போல், ஒருவரை ஒருவர் வரவேற்று நலம் விசாரித்துக் கொள்வர். அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என மக்களும் கடந்து சென்று விடுவர். சில இடங்களில் அதிகாரத்தில் மேலிடத்திலிருப்பவர்கள், கீழே பணியாற்றுபவர்களை வெறுப்பதும் உண்டு. அப்படி தற்போது மேயர் பிரியாவுக்கும், தவெக எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மேயரான திமுகவை சேர்ந்த பிரியா, திமுக ஆட்சியில் இருந்தப் போது பரபரப்பாக வேலை பார்த்து வந்தார். ஆனால் தற்போது தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அவரது பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் குறைந்துள்ளது. இன்று காலையில் திரு.வி.க.நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பில் உள்ள உருது பள்ளியில்…
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்துல நடிகர் சூர்யா திரிஷா உட்பட பலர் நடிப்புல வெளியான கருப்பு திரைப்படம் இரண்டு வாரங்களை தாண்டி வெற்றிக்கரமா திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. நீதிமன்றங்களில் நடைபெறும் அநீதிகளை எதிர்க்க மக்களோடு கருப்புசாமி நேருக்கு நேர் போராடுவது போன்ற கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 15-ம் தேதி வெளியான இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300கோடி வசூலை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், படத்தின் எடிட்டரான கலைவாணன் சமீபத்திய பேட்டியில், படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ படத்தில் இருந்து எந்தவொரு நீண்ட காட்சியும் நீக்கப்படவில்லை. சில கௌரவத் தோற்றங்கள் மற்றும் துணைக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற குறுகிய காட்சிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த நேரம் 20 முதல் 30 நொடிகள் வரைதான் இருக்கும்” என்றார். மேலும், ஆர்யாவின் கௌரவத் தோற்றம், இரட்டை மருத்துவர் சகோதரர்கள்…
பிரிட்டனின் டெவான் பகுதியில் நடைபெற்ற ராணுவ பயிற்சியின் போது ராயல் நேவி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், மூன்று கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சோர்டன் அருகேயுள்ள பயிற்சி பகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளானது ராயல் நேவியின் Merlin Mk4 வகை ஹெலிகாப்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் காவல்துறை மற்றும் அவசர மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த மூன்று வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அவர்களின் அடையாள விவரங்கள் இதுவரை வெளியிடப்பாவில்லை. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துள்ள ராயல் நேவியின் தலைமை அதிகாரி ஜெனரல் சர் க்வின் ஜென்கின்ஸ் இந்த விபத்து கடற்படை சமூகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.…
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் ஜூன் 4-ம் தேதி வாக்கில் துவங்க வாய்ப்புள்ளது. சுமார் 1.5 கிமீ உயரத்தில் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழகம் வரை, மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலங்கானா மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (4-06-2026): தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளான, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு…
இசைக்கு எப்படி இளையராஜா முடிசூடா மன்னனோ, அதேப் போல குரல்களின் மன்னன் எஸ்.பி.பாலசுப்ரமணியன். இன்று அவரது 80வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. என்னதான் அவர் இன்று உலகில் இல்லையென்றாலும் கூட அவரது குரலால் அவர் பாடிச் சென்ற ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் இன்று வரையிலும் நம்முடன் கலந்து இருக்கிறார். அவர் படைத்த சாதனைகளின் தொகுப்பு இதோ..! * எஸ்.பி.பாலசுப்ரமணியன் சுமார் 40,000 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். *6 முறை சிறந்த பின்னணிப் பாடகருகான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். *எஸ்.பி.பி முறையாக கர்நாடக இசையை பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். *இதுவரை 4 மொழிகளுக்கு தேசிய விருதினை பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. *தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை…
டெல்லியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழ்நாட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விளையாட்டு மாநிலமாக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முக்கிய முன்மொழிவுத் திட்டங்களை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தொலைநோக்குப் பார்வை மிக்க தலைமையின் கீழ், தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாஅக் கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும். ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில், தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. விளையாட்டின் மூலம் இளைய தலைமுறையினருக்கு அதிகாரமளித்து, அவர்களை நாளைய சாதனையாளர்களாக உருவாக்கும் பணியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு…
தன்னுடைய மகனுக்கு TVK என பெயர் சூட்ட இருப்பதாக தவெக எம்.எல்.ஏ பல்லவி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட பல்லவி வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த பல்லவி, வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இவரது கட்சிப்பணியால் தலைமை நெகிழ்ச்சியடைந்தது. திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.எஸ்.ராமச்சந்திரனை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். 36 வயதான தவெக வேட்பாளர் எம்.ஆர்.பல்லவி, 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய் தொடங்கியது முதலே அக்கட்சியில் பல்லவி பணியாற்றி வருகிறார். அதனால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன அவர், அதன்பிறகு சில தினங்களில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு TVK என பெயர் வைக்க இருப்பதாக பல்லவி…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, பரமன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஏரல் பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான சொத்தினை ரூ.90லட்சத்திற்கு விலை பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக ரூ.72லட்சத்தை முன்பணமாக கோபி செலுத்தியுள்ளார். இதனை பெற்றுக் கொண்ட ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் இருவரும், மீதித் தொகை ரூ.18லட்சத்தை வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் வழங்கி கிரைய ஆவணம் செய்து கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளனர். வங்கி கணக்கில் ரூ.72 லட்சம் பணம் ஏறியவுடன், ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகியோர் சொத்தை கிரயம் செய்து தராமல் கோபியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர். மேலும் தங்கள் வீட்டை பூட்டி விட்டு, ஊரை காலி செய்து தலைமறைவாகினர். இதனால் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டப் போது முன்னுக்குப் பின் முரணாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.…
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திருமணமாகி குழந்தைகள் வந்த பிறகும் கூட, சினிமாவில் கோலோச்சி நிற்கிறார் நயன்தாரா. அதேப் போல சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரையும் பெற்றிருந்தார் நயன் தாரா. தற்போது அந்த பெருமையை ஓவர் டேக் செய்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட திரைப்படங்கள் மூலம் தனது திரையுலகில் பயணத்தை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார். பான் – இந்தியா கிரஷ் என அன்போடு அழைக்கப்படும் ராஷ்மிகா, திருமணத்திற்கு பிறகும் கூட பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர்…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பொது மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சை பிரிவும் இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மகப்பேறு சிகிச்சை பிரிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர் ஒருவர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிகப்படும் சிகிச்சைக்கான ஊசி மூலம் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், மருந்துகள், உட்கட்டமைப்புகள் சரியானதாக இல்லை என மக்கள் புலம்பும் நிலையில், இப்படி அலட்சியமாக தூய்மை பணியாளர் ஊசிகளை கையாள்வது மக்களின் உயிருடன் விளையாடும் செயலாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.