Author: Editor web4

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஒரு அடையாளம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனலாம். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ரஜினி, நெல்சனுடன் இணைந்து நடித்திருந்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சுமார் ரூ.600கோடி வரை வசூலையும் ஈட்டியது. இந்த மெகா ஹிட் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாடு என படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘ஜெய்லர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற ஓய்வு பெற்ற…

Read More

கடந்த மாதம் 24-ம் தேதி வெனிசுலாவின் தலைநகரம் உட்பட பல பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 7.1 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால், பல இடங்களில் அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தன. விமான நிலையம் முதல் தெருக்களில் உள்ள வீடுகள் வரை பல இடங்களில் சுவர்களும், மேற்கூரைகளும் இடிந்து விழுந்ததில், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கினர். தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 1900ஆம் ஆண்டிற்குப் பிறகு வெனிசுலாவைத் தாக்கிய மிக மோசமான மற்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. இந்த இயற்கை பேரிடரால் வெனிசுலா நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நேரடிப் பொருளாதார இழப்பு மட்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.95,000கோடிக்கும் அதிகம் என சர்வதேச பேரிடர் மற்றும் அபாயக் கணிப்பு தொழில்நுட்ப நிறுவனமான வெரிஸ்க் தெரிவித்துள்ளது. ஐநா சபையின் சர்வதேச வளர்ச்சி அமைப்பான…

Read More

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்குள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில், கோப்பையநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு உற்பத்தி ஆலையில் இன்று மதியம் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக வேதிப்பொருட்கள் தீப்பற்றி எரிந்து, அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்த வெடி விபத்தின் தாக்கம் காரணமாக ஆலை வளாகத்தில் இருந்த 4-க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. தகவலறிந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆலைக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துக் கொண்டே…

Read More

கடந்த ஜூன் 24-ம் தேதி வெனிசுலாவின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 7.1 மற்றும் 7.5 என ரிக்டர் அளவு கோலில் பதிவான இந்த நிலநடுக்கங்களால், கிட்டத்தட்ட 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 3,000க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடும் பாதிப்பை சந்தித்துள்ள வெனிசுலா நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் தனியார் அமைப்புகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு மருத்துவ உதவி, அவசரகால நிவாரணப் பணிகளுக்காக 2.5 லட்சம் டாலரை பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் வழங்கியுள்ளார். வெனிசுலா மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக கூறிய நெய்மர், அந்தத் தவிக்கும் குடும்பங்களுக்குத் தனது பங்களிப்பு வலிமையுகால்பந்து வீரர் நெய்மர் வழங்கியுள்ளார்.

Read More

திருப்பூரில் சுமார் ஆயிரக்கணக்கான அரசு ஆவணங்கள் மற்றும் கடிதங்களை டெலிவரி செய்யாத தபால்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை கிளை தபால் நிலையத்தில் தபால்காரராக பணியாற்றியவர் செந்தில்குமார். இந்தப் பகுதி மக்களுக்கு வர வேண்டிய முக்கியமான அரசு கடிதங்கள், வங்கி ஆவணங்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் போன்றவை நீண்ட நாட்களாக உரிய நபர்களுக்கு சென்றடையவில்லை என பல புகார்கள் எழுந்தன. இதுகுறித்து திருப்பூர் கோட்ட தபால் துறை அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை அனுப்பினர். அதன்பேரில், தபால் துறை அதிகாரிகள் தபால்காரர் செந்தில்குமார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரக்கணக்கான கடிதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் போன்றவரை 7 பெரிய பெரிய சாக்கு மூட்டைகளில் கட்டி பதுகி வைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அரசு ஆவணங்களைப் பொறுப்பற்ற முறையில் பதுக்கி வைத்தது மற்றும் பொதுமக்களுக்குச்…

Read More

சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், சட்டவிரோதமாக இணையத்தி்ல் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்க்ஷன்ஸ் அளித்த புகாரில், சென்னை சைபர் க்ரைம் போலீஸார், 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரஜினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை கலைக்க…

Read More

அதிமுக மற்றும் மற்ற கட்சிகளில் இருந்து பலர் வெளியேறி தவெகவில் இணைந்து வருகின்றனர். அவ்வாறு அதிமுகவில் அமைச்சர்களாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி இன்று அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் தவெகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்கள் 15,000 பேருடன் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், ”ஒரு தலைவன் சரியான முடிவெடுக்காமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம்தான் இன்றைய அதிமுக. திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்கிறார்கள். தொண்டர்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படவில்லை. உண்மையை எடுத்துச் சொல்பவர்களை துரோகிகள் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. நாங்கள் உருவாக்கிய பொதுச்செயலாளரின் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாடுகிறது. மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர் முதல்-அமைச்சர் விஜய். விஜய் உருவாக்கியது ஒரு தலைமுறை மாற்றம். தமிழகத்தில் இல்லை, இந்தியாவில் அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். போல இனி…

Read More

தருமபுரி மாவட்டத்தில் கடன் பிரச்சினையால் மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு, பின்னர் லாரி மீது இருசக்கர வாகனத்தை மோதச் செய்து உயிரிழந்த தொழிலதிபரின் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (45). டிரேடிங் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கு சரண்யா (35) என்ற மனைவியும், சாத்தியா (14) என்ற மகளும் இருந்தனர். சொந்த ஊரான அன்னசாகரத்தில் இருந்து தருமபுரி கோட்டை கோயில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட கடும் நஷ்டம் மற்றும் அதிகரித்த கடன் சுமையால் சந்தோஷ் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்த தனது மனைவி சரண்யாவை கழுத்தறுத்து கொலை செய்ததாகவும், பின்னர் தனது மகள் சாத்தியாவை எடைக்கல்லால்…

Read More

கடலூர் மாவட்டம் பண்ருட்டி -நெய்வேலி சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி முன்பு இரண்டு இளைஞர்களை, நான்கு இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் காட்சியை பேருந்தில் பயணம் செய்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த பரபரப்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. காடாம்புலியூர் காந்தி நகரை சேர்ந்த இரண்டு இளைஞர்களும் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களும் நேற்று முன்தினம் மணமேடு பாரில் மது அருந்தி உள்ளனர். அப்போது இளைஞர்களிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்ணா பொறியியல் கல்லூரி அருகே மீண்டும் அதே இளைஞர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலானது. இந்த தாக்குதலில் காடாம்புலியூர் காந்திநகர் சேர்ந்த அலெக்ஸ், அமிர்தலிங்கம் ஆகிய இருவர் காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட…

Read More

உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடலில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகனை தரிசிப்பர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் இன்று முதல் செல்போன் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் எதிரொலியாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் முழு பரிசோதனை செய்த பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கட்டண தரிசன வரிசை மட்டுமின்றி கட்டணமில்லா தரிசன வரிசையில் வரும் பக்தர்களையும் நவீன இயந்திரங்கள் மு9உலம் பரிசோதனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பரிசோதனையின்போது தடையை மீறி செல்போன்கள் எடுத்து செல்வது தெரிந்தால், அவற்றை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தரிசனத்திற்கு முன்னதாக கோயிலில் தங்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More