Author: Editor web4
மயிலாடுதுறையில் காதலர்கள் தற்கொலை விவகாரத்தில் இறந்த பார்த்திபனின் தந்தை பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், தரங்கம்பாடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உயிரிழந்த பார்த்திபனின் தந்தை மாரிமுத்து பொறையார் காவல் நிலையத்தில் புகார். பெண் வீட்டார் ஆணவ கொலை செய்துள்ளதாகவும், நேற்று இரவு வெளியூரிலிருந்து வெளிநபர்கள் தங்கள் ஊருக்கு வந்திருந்ததாகவும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் மோகன்குமார், அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏராளமானோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். மாவட்டத்தின் பொறுப்பு எஸ்.பி ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தரங்கம்பாடி சாலைக்கு…
இது குறித்து நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, சாத்தங்குடி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபனும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பிரியதர்ஷிணியும் ஒருவரையொருவர் நட்புடன் பழகி வந்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்றுக்காலையில் அவ்விருவரும் அப்பகுதியில் உள்ள தோப்பு ஒன்றின் கூரைக் கொட்டகையில் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ள கொடூரமான சம்பவம் பேரதிர்ச்சி அளிக்கிறது. இச்சம்பவத்திற்கு முன்னதாக காவல்நிலையத்தில் பெண்ணைக் காணவில்லை என்கிற முன்திட்டமிடலோடு பொய்யான புகார் ஒன்றையும் பெண்ணின் பெற்றோர் அளித்திருக்கின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணின் சித்தப்பா ‘உங்களை சென்னை { அ}பெங்களூர் அனுப்பி, வாழ வைக்கிறேன்’ என்று அவ்விருவரையும் நம்ப வைத்து, பெண்ணை மட்டும் ஒருநாள் முழுவதும் வேறோர் இடத்தில் தங்க வைத்துள்ளனர். பின்னர், அப்பெண் மூலமாகவே பார்த்திபனுக்கு போன் செய்து வரவழைத்திருக்கின்றனர். இதற்குப் பின்னரே பெண்ணின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கொட்டகையில் மர்மமான…
சென்னை எழும்பூர் நடைபாதையில் தூங்கிய சிறுவன் மீது சொகுசு கார் ஏற்றி மரணம் ஏற்படுத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் குற்றவாளி என சென்னை கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. EMPEE குழுமத்தின் தலைவர் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி. இவர் EMPEE நிறுவனத்தின் இயக்குனர் ஆவர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் 22 தேதி சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நள்ளிரவில் மது போதையில் வந்த ஷாஜி தனது சொகுசு காரை ஏற்றி உள்ளார். இதில் 12 வயதான முனிராஜ், இடுப்பு எலும்பு முறிவு மற்றும் வயிறு பகுதியில் ஏற்பட்ட படுங்காயங்களினால் சிகிச்சை பலனின்றி மே 24 அன்று இறந்து விட்டான். இதே போல். வாசு (8), சுப ரஞ்சிதா (7), ராஜா மொகைதீன்,(19) மணி (19) ஆகிய நான்கு பேர்…
பிலிப்பைன்ஸின் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள தால் எரிமலையின் பிரதான எரிமலை வாய்ப் பகுதியில் நேற்று எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. இந்த நீராவி-மக்மா வெடிப்பை பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பினால் எரிமலைவாய்ப் பகுதிக்கு மேலே 1,200 மீட்டர் உயரத்திற்கு கரும் சாம்பல் புகைகள் எழுந்தன. எரிமலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பைவோல்க்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கண்காணிக்குமாறும், மற்றும் தயார்நிலை குறித்த உள்ளூர் அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பைவோல்க்ஸின் அதிகாரப்பூர்வ தகவலின் படி இந்த தால் எரிமலையில் ஏற்பட்ட பெரும் வெட்டிபு ஏறத்தாழ நானரை நிமிடங்கள் நீடித்தாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் பதிவு செய்த வீடியோ மற்றும் வெப்ப காட்சிப்படங்களை வெளியிட்டனர். எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து உடனடியாக குறிப்பிடத்தக்க நில அதிர்வுகளோ அல்லது நில உருக்குலைவு அதிகரிப்புகளோ பதிவாகவில்லை. தற்போது வரை இந்த எரிமலை மீது எச்சரிக்கை…
ஆழ்துளை கிணற்றில் விலங்குகளும், சிறுவர்களும் விழுவதும் அவர்களை மீட்பதற்கு நடத்தப்படும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகளால் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கிராமப்புறங்களில் உள்ள ஆழ்துளை கிணற்றுகளை மூடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் நிர்வைர் என்ற நான்கு வயது சிறுவன் நேற்று காலை தனது தாத்தா மற்றும் தந்தையுடன் வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது தாத்தா வேலை செய்துகொண்டிருக்க நிர்வைரின் தந்தை தான் கொண்டுவந்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஆள்துளை கிணற்றில் மண் சரிந்து விழுந்துள்ளான். சிறுவனின் கூச்சல் சத்தம் கேட்டு அவனது தாத்தாவும், தந்தையும் ஓடிவந்து பார்த்து சிறுவனை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் சிறுவனை மேலே கொண்டுவர முடியவில்லை. பிறகு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தனர் அதிகாரிகள். தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும்…
தேசிய மருத்துவர்கள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய 20ம் நூற்றாண்டில் மருத்துவ உலகம் பல்வேறு வகைகளில் முன்னேறி இருக்கிறது. மனித உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்ப புது புது இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. தீர்க்கவே முடியாது என்று இருந்த வியாதிகளுக்கு மருத்துவர்கள் மருந்துகளை தயாரித்து மக்களை காப்பாற்றி வருகின்றனர். அப்படி இருக்க, நாட்டின் முதல் பெண் மருத்துவர் பட்ட கஷ்டங்களை நாம் நினைவு கூர்வது அவசியம்.. 1886-ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தவர் முத்துலட்சுமி ரெட்டி. புதுக்கோட்டை அரசர் கல்லூரித் தலைவராக இருந்த நாராயணசாமி ஐயர் என்பவரது மகளான இவர், தந்தையின் வழிகாட்டுதல் படி, ஆடவர் பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார். அப்போதெல்லாம் பெண்கள் வீட்டின் அடுப்பங்கறையில் மட்டும் இருந்தால் போதும் என்ற காலகட்டம். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் பிறந்தாலே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் அளவிற்கு இருந்தனர் மக்கள். அப்படியிருக்க, அந்தக் காலகட்டத்தில் பள்ளிக்கூடம் ஏறி படித்தார்…
நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பணிக்காலம் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், உபேந்திர திரிவேதி பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. அப்பொது அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாட்டின் 31-வது ராணுவத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 1986-ல் ராணுவதில் சேர்ந்த தீரஜ் சேத், ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்பு படை, பாலைவனப் பகுதிகளில் கவசப் படைப்பிரிவு என ஏறக்குறைய 40 ஆண்டுகள் கடுமையான சூழல்களில் பணியாற்றியவர்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பராசக்தி. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட பீடியாட்ரிக் படமாக வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷனை வசூல் செய்தது. இந்த நிலையில், இப்படத்தில் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும், அதனை பெற்றுத் தரக் கோரியும் இயக்குநர் சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், ”பராசக்தி படத்திற்காக ரூ.8.39கோடி ஊதியம் வழக்கப்படவில்லை. இதனால் பராசக்தி படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் மூலம் கிடைத்த வருமானத்தின் முழு விவரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஜூலை 10-ம் தேதி வெளியாகவுள்ள அதர்வாவின் இதயம் முரளி திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 8-ம் தேதி வரை இப்படத்தின் செயர்கைக் கோள் வழி வெளியீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்…
பொதுவாகவே தமிழக வெற்றிக் கழகத்தை ரீல்ஸ் கட்சி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது உண்டு. அதற்கேற்றார் போல, அமைச்சர்கள் முதல் கடைநிலை நிர்வாகிகள் வரை, தவெகவை சேர்ந்தவர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் வீடியோவாக எடுத்து அதனை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக் கொண்டுள்ளனர். அப்படி, விருதுநகர் மாவட்டம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் என்பவர் அங்குள்ள போலியோ சொட்டு மருந்து முகாமொன்றில் நுழைந்து அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாக எடுத்து, சினிமா பாடலுடன் எடிட் செய்து ரீல்ஸாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேலை, 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கம் செய்வதாக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கட்சியின் ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கும் முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை இந்த நடவடிக்கை”…
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் தொடங்கி பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு மரியாதை செய்திருந்தனர். பாக்யராஜின் சிஷ்யனான பார்த்திபன், அவரது இறுதி நொடி வரை உடனிருந்தார். இந்த நிலையில், இன்று மீண்டும் பாக்யராஜ் இல்லத்திற்கு சென்றவர், மரியாதை செலுத்தினார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ” கடைசி வரை யாரோ? பாடிய கண்ணதாசனுக்கே காடு வரை தானே? பாரதிராஜா சாருக்கும் அப்படித்தான் மதுரை காட்டுராடு வரை சென்றேன் -அதுவே விளிம்பு. அதற்கு பின் மண்ணுக்குள் அவர் மட்டும் சென்று விட்டார். இன்று என் குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட்நகர் மின் தகனம் வரை. எழுதுதட்டை அதில் சில வெண்காகிதங்கள் அதில் ‘அன்புடன் உங்கள் பாக்யராஜ்’ கொட்டை எழுத்துக்களில் அவர் இதயப் பகுதியில்…