Author: Editor web4

தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,212 ஆசிரியர்கள் இந்த தேர்வை 4 தேர்வு மையங்களில் எழுதினர். இந்த நிலையில் ஸ்ரீ பெல் ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளி வளாகத்தில் இடைநிலை தேர்வில் கலந்து கொள்ள அரக்கோணம் பகுதியிலிருந்து வந்த பெண் ஆசிரியர் ஒருவர் சில நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தாமதம் மற்றும் ஒரிஜினல் ஆதார் கார்டை எடுத்து வராததால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் கெஞ்சிய காட்சி காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், இன்னாள் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாக தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு. தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்! கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை? தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல்…

Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தன்னை கொல்ல எதிர்க்கட்சியினர் முயற்சித்ததாகவும், அப்போது தனது சகோதரரும், மைத்துனரும் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்துக்குப் பின், தனக்கும், தனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் 2021ஆம் ஆண்டு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார். தற்போது தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவதால் இதுசம்பந்தமாக சென்னை, விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இதுசம்பந்தமான வழக்குகளையும், புகார்களையும் சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கை…

Read More

முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்​செந்​தூர் அருகே ஆத்​தூர் பகு​தி​யில் ஜூன் 20 ஆம் தேதி முன்​னாள் முதல்​வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்​னிட்​டு, திமுக சார்​பில் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பேசிய, திருச்​செந்​தூர் தொகுதி திமுக எம்​எல்​ஏ ​அனிதா ரா​தாகிருஷ்ணன், முதல்​வர் விஜய் குறித்து ஒரு​மை​யிலும், அவதூறாக​வும் பேசி​ய​தாக, தவெக நகரச் செய​லா​ளர் செல்​வம், ஆத்​தூர் காவல் நிலையத்​தில் புகாரளித்​தார். இந்த புகாரின் அடிப்படையில், அனிதா ​ரா​தாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீ​ஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், இந்த பேச்சுக்கு அவதூறு வழக்கு…

Read More

திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருவதால், பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளர்கள் உள்பட 74 பேர் மயக்கமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 அரசு மருத்துவமனைகள் மற்றும் 2 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சை பலனின்றி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 11 பேர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் என 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 15 வயது சிறுமிகள் 2 பேரும் அடங்குவர். உயிரிழந்தவர்களின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்…

Read More

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்- – கூடுவாஞ்சேரி நகராட்சி, துலுக்காணத்தம்மன் கோவில் தெருவில், நேற்று காலை, தெரு குழாயில், பெண்கள் சிலர் குடிநீர் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அதே தெருவில் சுற்றி திரிந்த குரங்கு, தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த இரு பெண்களை கடித்துவிட்டு ஓடியது. பின், அப்பகுதியில் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற குழந்தைகளையும், தெருவில் நடந்து சென்றவர்களையும் அதே குரங்கு கடித்து விட்டு தப்பியது. குரங்கு கடிக்கு ஆளாகிய எட்டு நபர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். சம்பவம் அறிந்த வனத்துறையினர், அந்த பகுதிக்கு வந்து, கூண்டுகளை வைத்தனர். ஒரு மணி நேரத்தில், குரங்கு கூண்டில் சிக்கியது. பின், அடர்ந்த வனப்பகுதியில் குரங்கை பத்திரமாக விட்டனர்.

Read More

வருக்கால வைப்பு நிதி அதாவது PROVIDENT FUND-ல் அதிரடியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு பணியாளர்கள் மத்தியில் வரவேற்புக் கிடைத்திருக்கிறது. வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 8 கோடி ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. அதாவது, * புதிய விதிகளின்படி, மாதம் ரூ.15,000 வரை அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 12 சதவீத பி.எப். பங்களிப்பு கட்டாயமாக இருக்கும். * அதன்படி, ஊழியரும் நிறுவனமும் தலா அதிகபட்சம் ரூ.1,800 வரை மாதந்தோறும் கட்டாயமாக செலுத்த வேண்டும். * ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தாலும், கட்டாய பி.எப். பிடித்தம் ரூ.1,800 மட்டுமே இருக்கும். * அதற்கு மேல் ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்க விரும்பும் ஊழியர்கள், தாங்கள் விரும்பும் அளவில் கூடுதல் தொகையை பி.எப். கணக்கில் செலுத்தலாம். * நிறுவனங்களும் அந்த கூடுதல் தொகைக்கு இணையான பங்களிப்பை வழங்கலாம். இருப்பினும்,…

Read More

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், சாமர்த்தியமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை நேரடியாக ஜிப்மர் மருத்துவமனைக்குள் செலுத்தி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தைச் சேர்ந்த 30 வயதான ஐஸ்வர்யா என்ற பெண், சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்து கோரிமேடு பகுதியை நெருங்கியபோது, ஐஸ்வர்யாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சூழ்நிலையின் அவசரத்தை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு, பேருந்தை நேரடியாக கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திற்குள் இயக்கி, அவசர சிகிச்சைப் பிரிவு முன்பு நிறுத்தினார். பின்னர், பயணிகள் உதவியுடன் ஐஸ்வர்யாவை உடனடியாக பேருந்தில் இருந்து இறக்கி, ஜிப்மர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.…

Read More

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணிப் போடும் வகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு லீக் சுற்றிலும், ஒவ்வொரு அணிகளும் தங்களது முழு பலத்தையும் காண்பித்தன. லீக் சுற்றுகள் முடிந்து 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன். அந்த வகையில் இன்று நடைபெற்ற 84-வது போட்டியில், போர்ச்சுக்கல் மற்றும் குரோஷியா அணிகள் மோதின. கனடாவின் டொரண்டோ மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். எனினும், கோல் அடிக்க முடியவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-0 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. 2-வது பாதியில் இரு அணிகளும் முதல் கோலுக்காக கடுமையாக மல்லுக்கட்டின. அப்போது ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் அணியின் முதல் கோலை பதிவு செய்தார். இதையடுத்து தாக்குதல் ஆட்டத்தை போர்ச்சுகல் தீவிரப்படுத்தியநிலையில், ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை…

Read More

தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட மேலும் 5 பேரை ஜூலை 16 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், ஆளும் தவெக கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் சொல்லும் படி நடந்து கொள்ள வேண்டும். அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜாவிடம் சிலர் தொலைப்பேசி மூலம் பேரம் பேசியுள்ளனர். இதுதொடர்பாக தவெக எம்எல்ஏ என். இளையராஜா, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜை சில நாள்களுக்கு முன்பு சந்தித்து புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்குபப்திவு செய்த திருவல்லிக்கேணி போலீசார்,  சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு,  திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன்…

Read More