Author: Editor web4

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதில் ”தமிழ்நாட்டிலேயே 12 கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது கவலைக்குரியது. ஒரு காலத்தில் பொறியியல் படிப்பு நடுத்தர குடும்பங்களின் கனவாக இருந்தது. இன்று அது அதிக கட்டணம் வசூலிக்கும் வணிகமாக மாறிவிட்டது. லாபம் கிடைக்கும் வரை மாணவர் சேர்க்கை; லாபம் குறைந்தவுடன் கல்லூரிகளுக்கு பூட்டு. இதுதானா புதிய இந்தியாவின் கல்விக் கொள்கை? ஆர்எஸ்எஸ் சிந்தனையால் வழிநடத்தப்படும் மத்திய கல்வி அமைச்சகம், கல்வியை ஒரு அடிப்படை உரிமையாகப் பார்க்காமல், சந்தைப் பொருளாக மாற்றிவிட்டது. புதிய கல்விக் கொள்கை (NEP) குறித்து பெரிய விளம்பரங்கள் செய்தாலும், அதன் மத்தியில் உயர்கல்வியின் அடிப்படை பிரச்சினைகள்—கல்விக் கட்டண உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, தரமான அரசு முதலீட்டின் குறைவு, கல்வி நிறுவனங்களின் வணிகமயமாக்கல்—தீர்க்கப்படவில்லை. இதன் விளைவு என்ன? நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 12 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் படிப்பை…

Read More

இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் முருகன் கதாபாத்திரல் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். முருகப்பெருமானை அடிப்படையாகக் கொண்டு புராணக் கதையாக இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டரில், முருகன் வடக்கில் பிறந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்! தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி “என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு…

Read More

ஈரோட்டில் காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் காதலியின் கழுத்தில் காதலன் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் காவிரி சாலையை சேர்ந்த 19 வயதான பெண்ணும், சேலத்தை சேர்ந்த கபிலனும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்ததுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கபிலன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நந்தினியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்‌. ரத்தவெள்ளத்தில் சரிந்த இளம்பெண்ணை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் தப்பிச்சென்ற காதலன் கபிலனை வடக்கு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read More

தெலுங்கானா மாநிலம் கரிமா நகர் பகுதிய சேர்ந்தவங்க 55 வயதான லட்சுமி. கூலித் தொழிலாளியான இவங்க கடந்த 1-ம் தேதி வழக்கம் போல வேலைத் தேடி வீதி வீதியா போயிருக்காங்க. அப்போ அங்க வந்த இளைஞர் ஒருத்தரு, தன்னோட விவசாய நிலத்தில் வேலை இருப்பதாகக் கூறி, லட்சுமியை இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்றுள்ளார். லட்சுமியின் கிராமத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நஸ்டுலாபூர் பகுதிக்கு அழைத்து சென்று, ஆள்நடமாட்டமற்ற விவசாய நிலத்தில் வைத்து லட்சுமி அணிந்திருந்த 5 கிராம் தாலி, கம்மல் ஆகியவற்றை மிரட்டி பறித்துள்ளார். அத்தோடு இது குறித்து வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, லட்சுமியை அங்கிருந்த ஆழமான கிணற்றில் தள்ளி விட்டுள்ளார். கிணற்றில் இருந்த கயிறை பிடித்துக் கொண்ட லட்சுமி மேலே வர முயன்றப் போது, அந்த கயிற்றை இளைஞர் அறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஜூலை 1 ம் தேதி காலை 10.30 மணிக்கு…

Read More

திருப்பூர் பூங்கா சாலை மற்றும் குமரன் சாலை இணைப்பு பகுதியில் சுரங்க பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக குழி தோண்டப்பட்டு பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் தண்ணீர் ஊற்று ஏற்பட்டு நீர் நிறைந்து காணப்படுகிறது. இன்று காலை இதில் இளைஞர் ஒருவர் சடலமாக மிதப்பது கண்டு பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் திருப்பூர் தெற்கு போலீசார் அவர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவர் பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியை சேர்ந்த முகமது சல்மான் 24 என்பதும் திருப்பூர் லட்சுமி நகரில் தங்கி ராயபுரம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. பனியன் நிறுவனத்தில் சென்று விசாரித்த போது நேற்று அவர் வரவில்லை என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவருக்கு வந்த அழைப்பில் இந்தியில் பேசிய நபர் பெண்களிடம் அரைகுறை ஆடையுடன்…

Read More

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேல் திருப்பதி செல்வதற்கு, பொதுவாக படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழி போக்குவரத்திலும் செல்லலாம். சில பக்தர்கள் வேண்டுதல் வைத்து சுமார் 3,550 படிக்கட்டுகள் ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்வர். அப்படி, கர்நாடாகவை சேர்ந்த 116 வயது மூதாட்டி 9 கிலோ மீட்டர் பயணம் செய்து 3,550 படிக்கட்டுகள் ஏறிச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். வெங்கடேஸ்வர சுவாமி மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியால் திருப்பதிக்கு வந்த அவர், குடும்பத்தினர் உதவியுடன் நடைபயாமாக மலைப்பாதையில் 3,550 படிக்கட்டுகள் ஏறிச் சென்றவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள், இரண்டாம் கட்ட சுற்றுகள் முடிந்து 3-ம் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அப்படி நடைபெற்ற 3-ம் கட்ட சுற்றின் 89-வது போட்டியில் பராகுவே அணியும், பிரான்ஸ் அணியும் மோதின. அதிகாலை 2.30 மணிக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயன்றும் பலனில்லாமல் போனது. 2-வது பாதியில் பிரான்சின் கைலியன் எம்பாப்பே 70-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் இத்தொடரில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் மெஸ்ஸியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார் எம்பாப்பே. இதனால், 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் முன்னிலையில் இருந்தது. அதன் பின்னும் இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோல் அடிக்க முயன்றும் அடிக்கமுடியாமல் போனதால், பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Read More

நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும், ஜனநாயகன் படம் மட்டுமே தனது கடைசி திரைப்படம் என அறிவித்திருந்தார். இந்தாண்டு தொடக்கத்தில் பொங்கலை ஒட்டி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், படத்தின் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து தணிக்கை சான்றிதழில் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால், கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகியும் சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். அத்தோடு ஜனநாயகன் படமும் இணையத்தில் வெளியாகி கிட்டத்தட்ட 10கோடிக்கும் அதிகமானோர் அப்படத்தை பார்த்தும் விட்டனர். இந்த நிலையில், ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ’ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை சான்றிதழ் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வன்முறை, ஆபாச வார்த்தைகளை குறைக்க மொத்தம் 13 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், ஆங்கில கெட்ட வார்த்தைகளை மியூட் செய்யவும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு…

Read More

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கருமாரபாளையம் அடுத்த மூகாம்பிகை நகர் குடியிருப்பு பகுதியில் லைன் வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.‌ விரைந்து சென்ற வடக்கு காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டின் உள்ளே பெண் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கைகள் கருகிய நிலையில் கிடந்துள்ளார். அவரது கணவர் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் பெண் இறந்து இரண்டு நாட்கள் ஆனது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணகுமார் – ஸ்ரீமதி. இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், சரவணக்குமார் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது சம்பவம் நடந்த மூகாம்பிகை நகர் பகுதியில்…

Read More

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் சுமார் 18 பேர் உயிரிழந்தனர். பலர் இன்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அம்மோனியா வாயுவை பாதுகாப்புடன் அகற்றுவது குறித்தும் மேலும் அகற்றப்படும் அமோனியா வாயுவை எடுத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து வருவாய்த்துறை மருத்துவ குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதே போன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். சரியாக எட்டு மணி அளவில் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு எடுக்கப்பட உள்ள நிலையில் அனைத்து நிலை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், ,” மக்கள் பீதியடைய வேண்டாம். தொழிற்சாலையில் உள்ள அமோனியாவை பாதுகாப்போடு வெளியே எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு தினங்களாக முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவ குழு காவல்துறையினர்…

Read More