Author: Editor web4
சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ”எடப்பாடி பழனிசசாமி நம்மை விட அதிகமாக புகழ்ந்தவர்கள் தான் இன்று அதிமுகவிலிருந்து வெளியேறியுள்ளார்கள். அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்கள் எல்லாம் மண்ணை கவ்வப்போகிறார்கள். உங்களை வளர்த்த அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சாதாரண தொண்டர் சென்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் அதிமுக கட்சியை வைத்து முழுமையாக பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு துரோகம் செய்துவிட்டு விட்டு சென்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் சிலர் அங்கு சென்று வேஷம் போடுகிறார்கள் மீண்டும் அவர்கள் தாய்க் கழகத்தில் இணையும் காலம் விரைவில் வரும் எனவும்,முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுடன் அ.தி.மு.க.வினர் த.வெ.க.வில் இணைந்துள்ளதாக கூறுவது ஒரு செட்டப். அ.தி.மு.க.உண்மை தொண்டகள் ஒரு நாளும் கட்சி மாற மாட்டார்கள். மின்னட்டாம் பூச்சிகள் சென்றுவிட்டால் அதிமுக கட்சி அழிந்து விடாது. எம்ஜிஆர்,ஜெயலலிதா…
இயக்குநரும், நடிகருமான பாக்யராத் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது மறைவுக்கு பலரும் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் அவரது இல்லத்திற்கு சென்று அவரது புகைப்படத்திற்கு மரியாதை செய்வதை அவ்வப்போது புகைப்படமாக எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இது குறித்து பட்டுக்கோட்டை பிரபாகர் பார்த்திபனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”மதிப்பிற்குரிய சீனியர் திரு.ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களுக்கு.. ஜூனியர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிக்கொண்டது. நீங்கள் அதீத சோகத்தின் காரணமாக மனதளவில் நலமில்லை என்பதறிவேன் என்பதால் நலமா என்று சம்பிரதாயமாகக் கேட்கவில்லை. நம் குருவான திரு. கே.பாக்யராஜ் சாரின் இழப்பு தரும் வலியும், வேதனையும், கண்ணீரும், கவலையும் உங்கள் ஒருவருக்கு மட்டுமில்லை. அவர் மீது கொள்ளை கொள்ளையாய் பாசமும், பிரியமும், அன்பும், அபிமானமும் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நண்பர்களுக்கும் இருக்கிறது. இன்னும் தொடர்கிறது. நீங்கள் அதைத் தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் பதிவு செய்கிறீர்கள். மற்றவர்கள் தொடர்ந்து…
இந்திய ரயில்வே சார்பில் இணையதளம் வாயிலாக பயணிகள் தங்களது டிக்கெட்களை புக் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம். இதன் மூலம் ஜெனரல் டிக்கெட் முதல் ப்ரீமியம் தக்கல் வரை வீட்டில் இருந்தவாரே மக்கள் தங்களது பயனத்திற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்யமுடியும். தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர். ஆனால், தட்கல் முன்பதிவின்போது, அடிக்கடி ‘சர்வர்’ பிரச்சினை ஏற்படுகிறது. ‘கேப்ட்சா’ குறியீடுகளும் கடினமாக இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறுகளால் டிக்கெட் முன்பதிவின் போது அடிக்கடி தோல்வியில் முடிவதாக பயணிகள் சார்பில் பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டது. இந்தநிலையில், பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் கல்லாடி பகுதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அங்கு மாயமாகித் தேடப்பட்டு வந்த இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விக்ரம் ரானா என்பவரது உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த நிலச்சரிவில் சிக்கி மாயமானதாகப் புகாரளிக்கப்பட்ட அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதால், கடந்த சில நாட்களாகத் தீவிரமாக நடைபெற்று வந்த மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட விக்ரம் ரானாவின் உடலை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். கல்லாடி பகுதியில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு பெரும் உயிர்ச்சேதத்தையும், பரவலான சொத்துச் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), கேரளா காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து, நிலச்சரிவு ஏற்பட்ட நாள் முதல் இரவு பகலாக இந்தத் தீவிரத் தேடுதல்…
டென்னிஸில் உயரியப் போட்டியான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர் லண்டனில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டம் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான யானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொண்டார். முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார் ஸ்வெரேவ். தொடக்க செட்டை இழந்த சின்னர், அதன்பிறகு தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார். இதன் மூலம் 6-7, 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வரேவை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார் சின்னர். இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் டென்னிஸில் தனது ஆதிக்கத்தை சின்னர் மேலும் வலுப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், முதல் விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் கனவுடன் களமிறங்கிய ஸ்வெரேவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில் ஒ. பன்னீர்செல்வம், இசக்கி சுப்பையா, ஜோஸ் சார்லஸ் மார்டின் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தற்போது பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி வாக்காளர் காந்திமதிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். போடிநாயக்கனூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஒ.பன்னீர்செல்வம் வெற்றிபெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர் டி.கண்ணன் என்பவரும், சென்னையை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவரும் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷணன் வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்…
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் பகுதியில் காஞ்சி குளோபல் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை 900 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். பிள்ளையார்பாளையம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில் மின்தடை காரணமாக காஞ்சி குளோபல் பள்ளிக்கு இன்று விடுமுறை அளித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளது. பள்ளி விடுமுறை என்பது தெரியாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவியர் சிரமத்துடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி செல்கின்றனர். இதுக்குறித்து பொதுமக்கள் கூறுகையில், மின்தடை காரணமாக வாட்ஸ்-ஆப் செயலி மூலம் குறுஞ்செய்தி காலை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் உள்ளூரில் இருந்து வரும் மாணவர்களைவிட வெளியூரில் இருந்து பல்வேறு மாணவர்கள் வருகை புரிவதால் மிகுந்த…
தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்படி கரூரில் பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 41 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதன் பிறகு தேர்தல் முடிந்தும் கூட விஜய் கரூர் பக்கம் செல்லவில்லை. மாறாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னை வரவழைத்து இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகும், முதலமைச்சர் ஆன பிறகும் முதல் முறையாக கரூருக்கு செல்கிறார் விஜய். வரும் 10ம் தேதி அவர் கரூருக்கு செல்ல இருப்பதால், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கரூர், வெண்ணைமலை அடுத்துள்ள அட்லஸ் கலையரங்கம் மைதானத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் அமைக்கும் பணிகள், நிகழ்வு நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5000 பேருக்கும் QR உடன் கூடிய…
கரூர் மாவட்டம் குளித்தலையில், வருவாய்த்துறை உதவியாளரை கிராம நிர்வாக அலுவலர் (V.A.O) ஒருவர் ஆபாச வார்த்தைகளால் மிகக் கொடூரமாக திட்டி மிரட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1-ம் தேதி குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை டவுன் வி.ஏ.ஓ அழகர் என்பவர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்துள்ளார். அப்போது, அங்கு பணிபுரியும் வருவாய்த்துறை உதவியாளர் ஒருவருக்கு போன் செய்த வி.ஏ.ஓ அழகர், “டேய் எங்கடா இருக்க?” என்று தொடங்கி, கேட்க முடியாத அளவிற்கு மிக மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார். ”பிணத்துக்கிட்டே உட்கார்ந்திரு 10 மாசம் சம்பளம் வாங்க மாட்ட… உனக்கு என்ன வேலை? என்ன தாசில்தார் வேலை பாக்குறியா? உடனே வந்து அந்த பிணத்துக்கிட்டே உட்கார்ந்திருக்கணும். சாயங்காலம் வரைக்கும் உனக்கு அதான் வேலை” என்று அதிகார…
தர்மபுரி மாவட்டம் தேங்காய் மரத்துப்பட்டி கிராமத்த சேர்ந்த ஷீலா என்கிற இளம் பெண், நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் அதேப் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 3 வருடங்களாக நீடித்த இந்த காதல், ஷீலாவின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் கண்டித்ததால், ஷீலா சின்னசாமியுடனான காதலை முறித்துள்ளார். 6 மாதங்களாக காதலை முறித்துக் கொண்ட கோபத்தில் இருந்த சின்னசாமி சம்பவத்தன்று, வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஷீலாவை, கத்தியால் கழுத்தில் ஒரு முறையும், வயிற்றில் இரு முறையில் குத்தியதில் நிலை தடுமாறி ஷீலா கீழே விழுந்தார். தப்பியோட முயன்றவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைந்தனர். காயமடைந்த ஷீலா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷீலாவின் அக்கா. அதில், “என்…