Author: Editor web4

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தனக்கு தெரியும் எனக் கூறி மாநிலம் முழுவதிலும் பல தனியார் பள்ளிகளில் இருந்து சுமார் ரூ.100கோடிகும் மேல் வசூல் செய்துள்ளார் திமுகவை சேர்ந்த அரசகுமார். இது தொடர்பாக அரசகுமார் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அரசகுமாரை கைது செய்தனர். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்​கீ​காரம், டி.டி.சி.பி. மற்​றும் சி.எம்.​டி.ஏ. அங்​கீ​காரம் உள்​ளிட்ட பிற சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களை பெற்​றுத் ​தரு​வ​தாக கூறி, தமிழகம் முழு​வதும் பல தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிடம் இருந்து ரூ.100 கோடிக்​குமேல் வசூலித்து மோசடி செய்​துள்​ள​தாக அளிக்​கப்​பட்ட புகாரின் பேரில், அரசகுமார் மீது இந்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பி.டி.அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

Read More

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி பாலிவுட் வரை தனது நடிப்பு திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அதேப் போல தமிழ் இயக்குநர்களில் மிகவும் தனித்துவமான இயக்குநர் என்றால் அது மிஷ்கின். இவரது படங்கள் அனைத்தும் மக்களின் மனதை வருடம் விதமாக இருக்கும். அப்படியான மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது ’டிரெயின்’ திரைப்படம். இந்த படத்தில் நடிகை சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், நாசர், மற்றும் நடிகர் நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஒரே இரவில் ரயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டார்க் திரில்லர் படமாகும். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், டீசரை படக்குழு சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து படத்தின் இசை…

Read More

சென்னை மாவட்ட ஆட்சியரின் சீரிய முயற்சியின் காரணமாக பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் வாயிலாக சென்னை மாவட்டத்தில் உள்ள 18 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.70லட்சம் செலவில் 900பெஞ்ச், டெஸ்க் வழங்கும் விழா சென்னை எழும்பூர் மாகாண மகளிர் மேநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சென்னை ஆட்சியர் மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்களுக்கு பெஞ்ச், டெஸ்குகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஹூண்டாய்மொபிஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் ஹூமின் ஹோ, நரசிம்மன் தலைவர் பெருநிறுவன சமூக பொறுப்புத்துறை நிகழ்வில் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் விழாவில் நன்றியுரை ஆற்றினார். உடன் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Read More

கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், அடுத்தடுத்து வெவ்வேறு நாடுகளில் புதிய தொற்றுகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் ’சைக்ளோஸ்போரியாசிஸ்’ என்ற கடுமையான குடல் சார்ந்த பாக்டீரியா/ ஒட்டுண்ணித் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை நாட்டின் 31 மாநிலங்களில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் 86-க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்றால் மிச்சிகன் மாநிலம் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு மட்டுமே 1,562 வழக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கமாக அங்கு ஆண்டுக்கு 40 முதல் 50 வழக்குகள் மட்டுமே பதிவாகும் நிலையில், இந்த திடீர் உயர்வு சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது தவிர ஒஹாயோ, நியூயார்க், இல்லினாய்ஸ், டெக்சாஸ் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. சைக்ளோஸ்போரியாசிஸ் என்றால் என்பது இது…

Read More

கரூர் மாவட்டம், குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்த 25 வயதுடைய திருமணமான பெண் ஒருவர், குளித்தலை தனியார் மெடிக்கலில் பணி புரிந்து வருகிறார். இப்பெண்ணுக்கு தமிழக வெற்றிக் கழக கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர், வரகூர் தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர், அப்பெண் பணிபுரியும் மெடிக்கல் கடைக்கு எதிரே நின்றுக் கொண்டு அவருக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டி வந்ததாக கூறப்படுகிறது. அத்தோடு, அப்பெண் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது, பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக பேசுவதும், சைகை காட்டுவதுமாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண்ணின் கணவருக்கு தெரியவர, கடந்த 2 மாதங்களாக அப்பெண்ணை அவரது கணவரே வேலைக்கு அழைத்து செல்வதும், கூட்டி வருவதுமாக இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவரது கணவரால் வர முடியாமல் போக, தனது தங்கையோடு வீடு திரும்பிய அப்பெண்ணை வழிமறித்த ரமேஷ், தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.…

Read More

திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் கடல் மற்றும் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இங்கு கடந்த மாதம் 21-ம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத் தொழிலாளர்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விபத்துக்கு பிறகு தொழிற்சாலை மூடப்பட்டு அமோனியா வாயு அகற்றும் பணி சுமார் 4 நாட்களாக நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அலுவலகம், குடோன், தளவாட அறை, குடியிருப்பு உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். தொழிற்சாலையில் கழிவுநீர் அகற்றும் பணியுடன், வளாகத்தில் உள்ள சுமார் 20…

Read More

நடிகர் விஜய் கடைசியாக நடித்து கிடப்பில் கிடக்கிறது ஜனநாயகன். தேர்தலில் களமிறங்குவதற்காக சினிமாவில் முழுக்கு போட இருப்பதாகவும், தனது கடைசி படம் ஜனநாயகன் என தெரிவித்திருந்தார் விஜய். அவருக்கு பிரியா விடை கொடுப்பதற்காக மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது. தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் பொங்கலுக்கு படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. ஆனால் கடைசி நேரம் வரை படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில் விஜய் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரும் ஆகி விட்டார். இன்றும் படம் வெளியாகவில்லை. முன்னதாக படம் இணையத்தில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் படத்தை பார்த்துள்ளனர். இது தொடர்பாக வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த நிலையில் சமீபத்தில் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அத்தோடு பல காட்சிகள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 24-ல் உலகம் முழுவதும் வெளியாக…

Read More

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் குட்கா வழக்கில் கைதான விசாரணை கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9-ஆம் தேதி தென் தாமரைக்குளம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, சபரி வர்மன் (35) என்பவரை தென் தாமரைக்குளம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சபரி வர்மன், நீதிமன்ற உத்தரவின்படி நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே உறுதி செய்யப்படும். இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி…

Read More

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன. இவைகளில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் லண்டனில் இருந்து இன்று காலை 224 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சுமார் 500 அடி உயரத்தில் பறவை ஒன்று விமானத்தின் மீது மோதி என்ஜின் பகுதியில் சிக்கிக் கொண்டது. இதனால் விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலைமையை சாதுர்யமாக கையாண்ட விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கி சுமார் 236 பேரின் உயிரை காப்பாற்றினார். பறவை மோதிய பகுதியை ஆய்வு செய்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேர ஆய்வுக்குப் பிறகு விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையிலிருந்து லண்டன் செல்ல தயாராக இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த…

Read More

இந்தியா – இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 285 ரன்களும், இங்கிலாந்து 170 ரன்களும் எடுத்தன. பின்னர் 115 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 341 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதில் யாஸ்திகா பாட்டியா தனது முதலாவது சர்வதேச சதத்தை (113 ரன், 158 பந்து, 14 பவுண்டரி) நிறைவு செய்தார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்டில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று புத்தகத்தில் இடம் பிடித்தார். இதையடுத்து 457 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடி வரும் இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 130…

Read More