Author: Editor web4
உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16-வது பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் அப்படியே அணியில் நீடிக்கின்றனர். இந்திய பெண்கள் அணி : கோல் கீப்பர்கள் : 1. சவிதா 2. பிச்சுதேவி கரிபாம் பின்களம் : 1. இஷிகா 2. சுஷிலா சானு 3. லால்தன்ட்லுவாங்கி 4. ஜோதி 5. ஷில்பி தபாஸ் நடுகளம் : 1. நிக்கி பிரதான் 2. சாஷி ராணா 3. சுனேலிதா டாப்போ 4. சலிமா ( கேப்டன் ) 5. நேகா 6. தீபிகா முன்களம் : 1. லால்ரெம்சியாமி 2. ருதுஜா 3.…
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் அமைந்துள்ள அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவிலில் முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுவதால், ஒவ்வொரு ஆடி வெள்ளியன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பலர் நேர்த்திக்கடனாக கூழ் ஊற்றி வழிபாடு செய்ததுடன், குடும்பத்தினருடன் அம்மனை தரிசித்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் ரூ.200 கட்டணத்தில் சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் என இரண்டு பிரிவுகளில் தரிசன ஏற்பாடுகளை செய்திருந்தது. எனினும், பொது தரிசன வரிசையில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பல மணி நேரமாக காத்திருந்த நிலையில், கட்டண சிறப்பு தரிசன பக்தர்களை மட்டும் தொடர்ந்து விரைவாக அனுமதிப்பதாகக் கூறி…
சென்னை தலைமை செயலகத்தில் தினமும் காலை, மாலை என இருநேரமும் முதலமைச்சர் வரும் போது மக்கள் அவரை காண வேண்டும் என காத்திருப்பர். பொதுமக்கள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுக்க வந்த புகார்தாரர்கள் என அனைவரும் முதலமைச்சர் செல்லும் நேரத்தை அறிந்து வழியில் நின்று, “தலைவா, தளபதி, முதலமைச்சரே” என வாழ்த்து கோஷங்களை எழுப்புவது வழக்கம். தினமும் பொதுமக்களுக்கு கையசைத்தவாறு செல்லும் முதலமைச்சர், இன்று சென்னையில் திடீரென பெய்த கனமழையிலும், தலையில் பாலித்தீன் கவர்கள், கைக்குட்டைகளுடன் மழையில் நனைந்தவாறு நின்றிருந்த பொதுமக்களை பார்தார். கொட்டும் மழையிலும் பொதுமக்கள் நின்று கொண்டிருப்பதை கண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், வழக்கம் போல் கையசைக்காமல், இரு கரங்களையும் கூப்பி வணக்கம் வைத்தவாறு தலைமைச் செயலகத்தில் இருந்து தனது கான்வாய் வாகனத்தில் புறப்பட்டார். முதலமைச்சரின் இந்த செயலை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி கோஷம் எழுப்பினர். செல்போன்களில் படம் எடுத்து ஆரவாரத்துடன் முதலமைச்சரை…
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ”உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2- 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும். வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிக அளவில் இருக்கும். சென்னையில் அதிகபட்ச வெயில் 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதன்படி, வரும் 21ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், மாலை, இரவு நேரத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கும் கடலோர மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி அறநிலையத்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாஜிதா தீவிர விசாரணை மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு மோசடிப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பழநி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழநி அடிவாரம் போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி…
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்த வழக்கு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளிபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு கரூரில் த வெ க தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி சமீபத்தில் முதலமைச்சர் விஜய் உத்தரவுகளை நேரில் வழங்கி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பிரபாகரன் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே அரசு 10 லட்சம் ரூபாயும், த வெ க சார்பில் 20 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு மீது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரியும், தங்களிடம் குதிரை பேரம் பேசப்பட்டதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்த புகார்கள் குறித்து விசாரிக்கும்படி சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரியும், திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ.பாலசுப்பிரமணி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், திங்கள் கிழமை வாதங்கள் முன் வைக்க அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி…
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டரை பார்த்து மது பிரியர் ஒருவர் போதையில் நீங்கள் TVK கட்சி நிர்வாகி தானே எனக் கேட்டது சிரிப்பலையை ஏற்படுத்தியது. ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் கடையநல்லூர் முழுவதும் பல்வேறு இடங்களில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங், ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு அசுத்தமாக இருப்பதை சுட்டிக்காட்டி சுத்தமாக வைத்துக் வைத்துக்கொள்ள வேண்டுமென ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார். அப்போது, அங்கே வந்த மதுபோதை ஆசாமி, ஆட்சியரை பார்த்து, ரூ.5க்கு பதில் ரூ.10 வரை வசூல் செய்யப்படுகிறது, நீங்கள் TVK கட்சி தானே எனக் கேள்வி கேட்க, அருகே இருந்தவர்கள், அவர் கலெக்டர் எனக் கூற, சாரி சாரி சார் என மதுப்பிரியர் சொல்ல, அந்த இடமே சிரிப்பலையில் மூழ்கியது. தொடர்ந்து அங்கே உள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு…
கோவை, கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மகன் சதீஷ்குமார் (54). இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் உள்ள கொட்டகையில் சுமார் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டின் கீழே உள்ள முட்புதர் பகுதியில் இருந்து ஆடு ஒன்று விசித்திரமான முறையில் சத்தம் போடுவதைக் கேட்டு சதீஷ்குமார் ஓடிச் சென்று பார்த்து உள்ளார். அப்போது, அந்த வீதியில் கட்டிட வேலை செய்து வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கோபிந்தோ தாஸ் (35) என்பவர், சதீஷ்குமாரின் ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சதீஷ்குமார் அதைத் தடுக்க முயன்ற போது, கோபிந்தோ தாஸ் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கற்களை எறிந்து கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் விலங்குவதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்…
கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ளது கே.ஆர்.பி அணை. 52 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் மாவட்டத்தில் உள்ள 16 ஊராட்சிகளில் இரு போக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த கே.ஆர்.பி அணையால் மாவட்டத்தில் நேரடியாக 9,012 ஏக்கரும், மறைமுகமாக 10,000 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், தமிழக முதல்வர் உத்தரவின்படி கே.ஆர்.பி அணையின் வலது புற கால்வாய் மூலம் 75 கனஅடியும், இடது புற கால்வாய் மூலம் 76 கனஅடியும் என 151 கனஅடி நீரை முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசன் ஆகியோர் கால்வாயில் மலர் தூவி வரவேற்றனர். மேலும் இன்று முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை…