Author: Editor web4
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற விவகாரத்தில் பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதானை பதவி நீக்க கோரி அவரது வீட்டின் அருகே தலைவர் திரு.ராகுல்காந்தி, திருமதி. பிரியங்கா காந்தி ஆகியோர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த கொடுமை நிகழ்ந்துள்ளது. மக்களவை எதிர்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் திரு. ராகுல்காந்தி அவர்களை மோடி அரசு இத்தகைய அநாகரீக அணுகுமுறையைக் கடைபிடித்து கைது செய்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை…
வேலூர் மாவட்டம் பிள்ளையார் குட்டை மலை கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, வனச்சரகர் அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் பிள்ளையார் குட்டை கிராமத்தில் ஒவ்வொரு வீடாக தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் 2 நாட்டு துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன்(53), என்பவர் தனது வீட்டில் நாட்டு துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர், 2 நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றிய வனத்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த மான் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாமிநாதனை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாட்டில் சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தனியார் பேருந்துகள் பெருமளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால், தனியார் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதனை பயன்படுத்தி பல தனியார் பேருந்துகள் விதிமுறையை மீறி அதிகளவு கட்டணம் வசூல் செய்வதாக பல காலங்களாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. அத்தோடு பல பேருந்துகளில் கட்டணத்திற்கு ஏற்ப வசதிகள் இல்லை என்ற புகாரும் எழுந்து வருகிறது. அந்த வகையில், கோவையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக ரூ.1,614 கொடுத்து பிரபல தனியார் பேருந்தில் பயணி ஒருவர் பயணித்துள்ளார். அந்த பேருந்து சுகாதாரமற்ற முறையில் இருப்பதை அந்த பயணி வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பயணிகளின் பாதுகாப்பிற்கும் வசதிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டிய முன்னணி ஆம்னி பேருந்து நிறுவனங்கள், சீரான பராமரிப்பின்றி இவ்வாறான சேவைகளை வழங்கிப் பயணிகளின் பணத்தைச் சுரண்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து…
உத்தரகாண்ட் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகரான டேராடூண் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அங்குள்ள முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் கிடுகிடுகென உயர்ந்து தரைத்தளம் அனைத்தும் வெள்ளக்கிடங்காய் ஓடியது. டேராடூணில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பழமையான ‘டப்கேஷ்வர் மகாசிவன் கோவில்’ வளாகத்திற்குள் தம்சா நதியின் காட்டாற்று வெள்ளம் புகுந்துள்ளது. நதியில் ஏற்பட்டுள்ள ராட்சத வெள்ளப்பெருக்கு காரணமாக, வெள்ள நீரானது கோவிலின் தரைத்தளம் மற்றும் படிக்கட்டுகளை முழுமையாக மூழ்கடித்தபடி ஓடியது. கோவிலின் உள்ளே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பிரதான கட்டமைப்புகள் மற்றும் சிலைகளைச் சுற்றிலும் தம்சா நதி வெள்ளம் அதிவேகத்தில் பாய்கிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்- சென்னை சாலையில் அமைந்துள்ள மண்டி மஹல்லா ஜும்மா மசூதியை தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையிலான அதிகாரிகள் குழு மசூதிக்கு வந்தது. இதையடுத்து மசூதி வளாகத்தில் சிறிது நேரம் இரு தரப்பினருக்கும் பரபரப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது. அதிகாரிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் வக்ஃப் வாரியத்தின் அறிவிப்பு நகலை மசூதி தலைவர் முஜாமில் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வழங்கிவிட்டு மசூதியில் ஒட்டவந்ததால் கடும் கூச்சல் குழப்பம் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அப்போது மசூதி நிர்வாகிகள், தங்களது மசூதியை வக்ஃப் வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். மேலும், தனிநபரின் சுயலாபத்திற்காகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதுதொடர்பாக சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து மீண்டும் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறினர். நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு…
கோவை மாவட்டம் சிவானந்த காலனி டாடாபாத் பகுதியில் மாவட்ட கால் டாக்ஸி கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் OLA, UBER, RAPIDO போன்ற தனியார் செயலிகளுக்கு மாற்றாக தமிழ்நாடு அரசாங்கமே ஒருங்கிணைந்து டாக்ஸி முன்பதிவு செயலியை உருவாக்க வேண்டும், இல்லையென்றால் அது தனியா நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும், டாக்ஸிகளுக்கு பொது இடங்களில் போதிய பார்க்கிங் வசதியை செய்து தர வேண்டும், சட்டத்திற்கு புறம்பாக இயங்கக்கூடிய தனியார் கார் டாக்ஸி மற்றும் பைக் டேக்ஸிகளை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தனியார் வாகனங்கள் வாடகைக்கு செல்லும் பொழுது தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவ்வாறு தனியார் டாக்ஸிகளில் சென்றால் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தனர். பைக் டாக்ஸியை தடை செய்ய…
தமிழ்நாட்டில் இருபெரும் கட்சிகளில் ஒன்றான அதிமுக தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது எனலாம். பாஜகவுடன் எப்போது அதிமுக கூட்டணி சேர்ந்ததோ அப்போதிலிருந்தே அதிமுகவின் சரிவு தமிழ்நாட்டில் தொடங்கி விட்டது எனலாம். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த தேர்தலில் இருபெரும் திராவிட கட்சிகளை ஓரங்க்கட்டி ஆட்சியை பிடித்திருக்கிறது விஜய்யின் தவெக. இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் பலர், எடப்பாடி பழனிசாமி மேல் இருந்த அதிருப்தி காரணமாக அதிமுகவில் இருந்து விலகி தற்போது தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி அணி என இரண்டாக பிரிந்து கிடக்கிறது. கடந்த தேர்தலின் போதே, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியின் ஒன்றிணைக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். பிறகு தேர்தலில் தோல்வி அடைந்ததால், எடப்பாடி மீது…
திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ” 2021-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில் சொத்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்த ரவிட்டது. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களுக்கு சொந்தமாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சொத்துகளை முறையாக பராமரித்து பாதுகாக்கவும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்திருந்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளின் நிலை என்ன, பிரசாத சமையல் அறை எவ்வாறு செயல்படுகிறது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன் படி இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன், சக்திவேல்…
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியா நாட்டில் சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மைத்துனரான தணிகா என்ற தணிகைவேல் என்பவரும் ரவுடி தான். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உட்பட 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், நன்னடத்தை பிணையில் இருந்து வரும் நிலையில், அண்மை நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை போலீசார் வலைவீசி தேடியும் வந்தனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிவகாஞ்சி காவல் எல்லைக்குட்பட்ட குஜராத் சத்திரம் பகுதியில் பதுங்கி இருந்த தணிகாவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 10-க்கும் மேற்பட்ட…
தமிழ்நாட்டில் அரசின் முக்கியமான வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் என்றால் அது டாஸ்மாக் கடைகள் தான். தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செயப்பட்டு வருகிறது. சுமார் 11 நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் வாங்கப்படுகிறது. பீர் வகைகள் 6 நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் பிரபல அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நடத்தும் ஆலைகளும் அடங்கும். எந்த நிறுவனத்தின் மதுபானம் அதிகம் விற்பனையாகிறதோ, அவை கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டன. அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகள் மட்டும் 60 முதல் 70 சதவீதம் வரையில் கொள்முதல் செய்யப்பட்டது. விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி அமைத்த நிலையில், பல அதிரடி மாற்றங்கள் டாஸ்மாக் நிர்வாகத்தில் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 6-ம் தேதி நடந்த டாஸ்மாக் நிர்வாக கூட்டத்தில் குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிகளவு மதுபானங்களை கொள்முதல் செய்யாமல் அனைத்து…