Author: Editor web4

கோவை மாவட்டம் நல்லாம்பாளையம் சாலையில் செல்லப் பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று இயங்கி வந்தது. ராஜ்குமார் என்பவர் அந்தக் கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில், சங்கனூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது மீன் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக கொடுத்து உள்ளார். பணிகளைச் செய்து முடித்த பிறகும் அருண்குமார் மீன் தொட்டியை வாங்கிச் செல்லாததால், ராஜ்குமார் அவரைத் தொடர்பு கொண்டு கடைக்கு வந்து மீன் தொட்டியைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறி உள்ளார். கடைக்கு வந்த அருண்குமாரிடம், மீன் தொட்டியை சுத்தம் செய்ததற்கான கட்டணம் ரூ.2,000-ஐ ராஜ்குமார் கேட்டு உள்ளார். ஆனால், அருண்குமார் அந்தப் பணத்தைக் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அருண்குமார், ராஜ்குமாரைத் தகாத வார்த்தைகளால் பேசி, தன் கைகளாலும் மறைத்து வைத்து இருந்த கத்தியாலும் தாக்கி கொலை…

Read More

ஒரு மனிதனின் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய இன்றியமையாத ஒன்று என்றால் அது பால் தான். தினமும் காலையில் பால் இன்றி ஒருவரின் வாழ்க்கை தொடங்குவது இல்லை. குழந்தைகள் முதல் முதியோர் வரை பலருக்கும் தேவாமிர்தமாக இருப்பது இந்த பால் தான். அப்படியிருக்க தற்போது இந்தியா முழுவதிலும் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியிலும் கடந்த ஓராண்டாகவே பால் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. இதனால், தனியார் பால் நிறுவனங்கள், பால் வணிகத்தை தக்கவைத்துக்கொள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் நடப்பாண்டில் 2-வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4…

Read More

ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன்பு வெளியாகி இருந்தால் 234 தொகுதியிலும் தவெக வெற்றி பெற்று இருக்கும் என்ற அமைச்சர் செங்கோட்டையன் , காவிரி விவகாரத்தில் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற முடியும் என்று நினைத்தால் அதை செய்யலாம் என தெரிவித்தார். ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன்,  விஜய்பாலாஜி , மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனந்த மோகன், தமிழ்செல்வி ஆகியோருக்கு  பாராட்டு விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கேள்வி : தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக அகதிகள் அதிகமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கருத்துக்கு: பதில் : யார் அகதிகளாக ஆகப் போகிறார்கள் என்பது காலம்  சொல்லும். திருப்பூர் ஈரோடு நாமக்கல் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளது இந்த பாதிப்பு குறித்து ஆராய்ந்து வருகிறோம். கேள்வி : விஜய் நடித்த ஜனநாயகம் படத்தின் முதல் காட்சி அமைச்சர்கள்…

Read More

கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் கோவை மெட்ரோ ரயில் நிராகரிப்பு தொடர்பான கேள்விக்கு முதல்வரைப் பொறுத்தவரை கோவை மதுரை நகரங்களில் மெட்ரோ உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் இது குறித்து பிரதமரிடமும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். அதிமுகவில் இருந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியதற்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் நேரடியாக விசாரணை மேற்கொள்வதற்காக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது சட்டப்பேரவை தலைவர் அதற்கான முடிவுகளை எடுப்பார் என்று கூறினார். நீட் தேர்வு போராட்டம் தொடர்பான கேள்விக்கு அதுஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உணர்வுகள் நீட் தேர்வு பொருத்தவரை எங்கள் கட்சியின் முதல்வரின் கொள்கை முடிவு அதுதான் அந்த முடிவில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். ஆட்சியை சரியான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும்…

Read More

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் உள்ள குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 20-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாள் (ஜூலை.20) ‘சலோ சன்சத்’ என்ற பெயரில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியை களைக்க போலீசார் மாணவர்கள், போராட்டக்காரர்கள்மீது போலீசார் சராமாரி தடியடி நடத்தினர். போலீசாரின் இந்த அராஜகப்போக்கை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தலைமையில் மறுநாள் (ஜூலை.21) டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தைத் தொடர்ந்து ராகுல் காந்தி, சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாள் (ஜூலை.20) ‘சலோ சன்சத்’…

Read More

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும், டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்ட்டியினர் அமைதி வழியில் போராடினர். இதேபோல் திருச்சி மற்றும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் முறைகேடுகளை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டித்தும், அதற்குத் துணை நின்ற ஒன்றிய அரசைக் கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்கள் எரித்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திராபிரதானின் உருவபொம்மையின் மீது தண்ணீர் ஊற்றியும்,  காலில் மிதித்தும் தீயை அணைத்தனர். மேலும், தொடர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற SFI…

Read More

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில், 4 புதிய கடல்சார் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம், தமிழ் நாடு அரசு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான கழக ஆட்சியில், கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, கடலில் இக்கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில், இக்கிணறுகளை அமைப்பதற்கு அதிகப்படியான துளையிடுதலாலும், அதன்மூலம் ஏற்படும் அதிக சத்தத்தாலும், நச்சு ரசாயனக் கழிவுகளாலும் கடல் வாழ் உயிரினங்கள் அழியவும், இனப் பெருக்கம் குறையவும், சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படுவதோடு, கடலையே நம்பி…

Read More

நீட் தேர்வு வினத்தாள் கசிவு மற்றும் நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடங்கப்பட்ட போராட்டம் 10 நாட்களை தாண்டி தீவிரமடைந்துள்ளது. கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதால், கொந்தளித்த மாணவர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் பாதுகாப்பு காரணங்களுகாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததால், இளைஞர்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றத்திற்கு வர முடியாத சூழலுக்கு வழக்கறிஞர்களும், பொதுமக்களும் தள்ளப்படுவதாக வழக்கறிஞர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர்…

Read More

நீட் தேர்வு வினத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கலைக்கும் விதமாக போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி நடத்தியால் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை ஆலியா பட் மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் என் இதயத்தை உடைத்து நொறுக்கியுள்ளன. ஆனால் அதே வேளையில், மாணவர்களின் மனஉறுதியைப் பார்க்கும்போது மீண்டும் ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது.” தனக்கான உரிமைகளுக்காகக் களத்தில் போராடும் ஒவ்வொரு மாணவனுக்குப் பின்னாலும் ஒரு கனவு, ஒரு குடும்பத்தின் பெரிய நம்பிக்கை மற்றும் எண்ணற்ற தியாகங்களின் பயணம் அடங்கியுள்ளது.” எதிர்கால தலைமுறைக்கான குரல்: “அவர்கள் தங்களுக்காக மட்டும்…

Read More

தமிழக முதல்வர் விஜய் ஜோசப் இறுதியாக நடித்த திரைப்படமான ஜனநாயகன் பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இன்று தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இன்று வெளியானது. அதனைவிஜய் ரசிகர்கள் இதனை பெரும் திருவிழா கொண்டாடி மகிழ்ந்தனர். மேளம், தாளம், டிஜே நடனம் என ரசிகர்கள் திரையரங்கின் முன்பு கொண்டாடி மகிழ்ந்தனர். அவ்வகையில் காஞ்சிபுரம் பாபு சினிமாஸ் திரையரங்கில் தமிழக அமைச்சர்கள் எஸ் பி கே தென்னரசு மற்றும் ஆர்.வீ. ரஞ்சித்குமார் ஆகியோர் கழக நிர்வாகிகள் என பல திரைப்படம் கண்டு ரசித்தனர். திரைப்படம் காண வரும் ரசிகர்கள் பசியாலும் வகையில், அமைச்சர் தென்னரசு ஏற்பாட்டின் பேரில் சிக்கன் பிரியாணி, லட்டு, ரைத்தா , கத்திரிக்காய் தொக்கு என உணவுகள் வகைகளை தங்கள் கைகளால் பரிமாறினார். மேலும் வனத்துறை அமைச்சர் சார்பில் ரசிகர்களுக்கு சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் வகையில் பல்வேறு மரக்கன்றுகளுக்கும் வழங்கினர்.

Read More